Tuesday, March 31, 2009

மதிமுக தனித்து போட்டியிட முயற்சிக்கிறதா?

அடிமட்ட தொண்டனின் கேள்வி பதில்

மதிமுக தனித்து போட்டியிட முயற்சிக்கிறதா?

பதில் :
மதிமுக அதிமுக உடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க விரும்புகிறது. சமீபத்தில் கட்சியை விட்டு பிரிந்து போன கயவாளிகளை காரணம் காட்டி நமக்குள்ள தேர்தல் பங்களிப்பை அதிமுக குறைத்து மதிப்பிட்டு , அல்லது குறைத்து மதிப்பிட நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து அதன்படி நடக்க முயற்சித்தால் , மதிமுக எப்பொழுதும் சுய மரியாதையை விட்டுக்கொடுக்காது. தனித்து போட்டியிடும்.

மதிமுகவை விட்டு அதிமுக தேர்தலை சந்தித்தால் என்னவாகும் ?
ஈழ விசயத்தில் , ஈழ துரோகிகள் காங்கிரஸ் மற்றும் திமுக வினர் வலுப்பெற்று விடுவார்கள் . அதிமுக பூச்சியத்தை பெரும்.ஏன் மதிமுக வை மாற்ற இரு திராவிட கட்சிகள் மட்டம் தட்ட முயற்சிக்கிறார்கள் !

கீழ்மட்ட தொண்டனின் கேள்வி பதில்

கேள்வி :
ஏன் மதிமுக வை மாற்ற இரு திராவிட கட்சிகள் மட்டம் தட்ட முயற்சிக்கிறார்கள் ?
பதில் :
மதிமுக ஈழ விடயத்தில் யாரையும் எதையும் விட்ட்க்கொடுக்காமல் களப்பணியாற்றி வருவதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதே ஈழ பிரச்சினை இப்போது தேர்தல் களத்தில் முக்கிய பிரச்சினையாய் உருவெடுத்துள்ளது. இதில் திமுக வின் துரோகத்தையும் காங்கிரஸ் அரசின் குள்ளநரித்தனத்தையும் மதிமுகவை விட யாரும் , ஏன் அதிமுகவும் மக்கள் மன்றத்தில் பேச முழுத்தகுதி கிடையாது.

கடைசி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் அதிமுக ஈழத்திற்கு முழு ஆதரவு என்பதை மக்கள் இன்னும் சந்தேக கண்ணோடுதான் பார்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது மதிமுகவே மக்களின் கண்ணாடி அல்லது மக்களின் மனசாட்சி என்பதில் உறுதியாகிறது.

மக்கள் மன்றத்தில் மதிமுக விருக்குள்ள நல்ல பெயர் அதன் பிரதிநிதிதுவதிலும் வெளிப்பட்டால் ஈழம் கிடைக்கும் வரை அதற்க்கான செயல்களில் மதிமுகவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்பதினால்தான் மதிமுகவை , மாற்ற திராவிட கட்சிகள் உதாசீனபடுத்துகின்றனர். உதாசீனம் என்பது தலைமையில் மட்டும்தான் உள்ளதே ஒழிய அங்குள்ள தொண்டர்களின் எண்ணம் வைகோ வை சார்ந்தே உள்ளது. இதுவும் அவர்களுக்கு மனக்குழப்பத்தை கொடுத்துள்ளது.மட்டுபடுத்தவும் முயற்சிக்கிறது.

ஈழத்தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் துரோகம்


நான் படித்த எங்கள் கிராமத்துப் பள்ளியைச் சுற்றிலும் ஏராளமான மாமரங்கள் இருக்கும். விதவிதமான வகைகளாக புளிப்பு, இனிப்பு என மா மரங்களைக் கொண்ட செழிப்பான பகுதி அது. தினந்தோறும் மாங்காய்களைத் திருடி அதில் உப்பைச் சேர்த்து தின்பதுதான் எங்கள் வேலை. பள்ளிக்கூட மரங்கள் எல்லாம் மாணவர்களுக்கே என்பதுதான் எங்கள் நினைப்பு. ஆமாம் அவைகளோடுதான் எங்கள் பள்ளிக்கூட பொழுதுகள் கழிந்தது. ஒரு நாள் “இனிமேல் மாங்காய் பறித்தால் ஐம்பது ரூபாய் பைன்” என்று அசெம்பிளியில் அறிவித்தார் தலைமை ஆசிரியர். எங்கள் வகுப்பில் உள்ள பலரும் சேர்ந்து ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு ஐம்பது ரூபாய் சேர்த்தோம். ஒரு கோணிப்பையை வாங்கிக் கொண்டோம். கோணி நிறைய மாங்காய்களை வேட்டையாடிச் சேர்த்தோம். ஐம்பது ரூபாயைக் கொண்டு போய் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தோம். “அய்யா எங்களுக்குத் தேவையான மாங்காய்களை பறித்துக் கொண்டோம். இதோ உங்களுக்கான ஐம்பது ரூபாய்” என பணத்தை நீட்டிய பதினைந்து பேரும் சஸ்பெண்ட் ஆனோம்.உயர் நீதீமன்றத்திற்குள் போலீசை அனுப்பி காட்டுமிராண்டித்தனமாக வழக்கறிஞர்களைத் தாக்கி விட்டு, நீண்ட தாமதத்திற்குப் பிறகு இப்போது இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மாங்காய் திருடியதும் சஸ்பெண்ட் ஆனதும் நினைவுக்கு வந்தது. நாளை தேவைப்பட்டால் சஸ்பெண்ட் ஆக இரண்டு போலீஸ்காரர்களை தயாரித்து வைத்துக் கொண்டு நீதிமன்றத்துக்குள் போய் வக்கீல்களைத் தாக்கலாம். ஒரு வேளை வக்கீல்களைக் கொன்றிருந்தால் நிரந்தரமான சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்திருப்பார்களோ என்னவோ? ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகச் சொன்ன கருணாநிதி, இன்னும் அந்த அதிகாரிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்யாததோடு அவரே அறிக்கை மூலம் அவர்களைத் தூண்டி விட்டு உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு அனுப்பி வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.கடந்த ஒருமாதகாலமாக நடந்த வழக்கறிஞர்கள் போராட்டம் தேர்தல் நெருங்க நெருங்க தீவிரம் ஆகுமோ என்பதை உணர்ந்த அரசு, நீதி நிர்வாகம் அனைவரும் சேர்ந்து வழக்கறிஞர்களை சமாதானப்படுத்துவதற்காக இப்படி ஒரு ஏமாற்றுத் தீர்ப்பை வழங்கியிருப்பார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் வழக்கறிஞர்கள் போராட்டம் நம்முள் பலவிதமான கேள்விகளை உசுப்பி விட்டிருக்கிறது. ஈழம், சமூகப் போராட்டங்கள் இதிலெல்லாம் பத்திரிகையாளர்கள் என்ன பாத்திரம் வகிக்கிறார்கள் என்கிற கேள்வியை இன்று நாம் வழக்கறிஞர்களை முன் வைத்தே கேட்க வேண்டியுள்ளது.ஆனால் போராட்டம் என்பது என்ன? மனித குலம் தான் கடந்து வந்த பாதை நெடுகிலும் போராடிப் பெற்ற உரிமைகளுடனேயே சிவில் சமூகமாக வளர்ந்திருக்கிறது. ஆனால் நம்மை பாதுகாப்பதற்கு என ஏற்படுத்தப்பட்ட அரசு இயந்திரத்தின் அங்கங்களான நீதிமன்றம், போலீஸ் ஆகிய துறைகள் பல நேரங்களில் நமது சிவில் உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கின்றன. போராடுவது எவ்வகையான உரிமை என்பதை துல்லியமாக என்னால் கூற இயலாவிட்டாலும், உணவுக்கான போராட்டமே மனிதனின் முதலும் முடிவுமான போராட்டமாக நான் பார்க்கிறேன். மொழி, இனஒதுக்கல், பாரபட்சமான நீதி என தேசிய இன உரிமைகள் ரீதியான போராட்டங்கள் கூட சுதந்திரத்திற்கானவைதான். அந்த வகையில் ஈழத்தில் கடந்த முப்பதாண்டுகளில் பரிணாம வளச்சி பெற்ற அந்த போராட்டம் இன்று மிக முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறது. ஈழம் என்கிற தமிழ் மக்களின் கனவுக்கு விடை கொடுப்பது இல்லை என்றால் நீண்ட கால மக்கள் போராட்டத்தை கட்டுவதன் மூலம் போராட்டத்தை வளர்த்தெடுப்பது என நீண்டு செல்ல வேண்டும் என்பது நமது ஆசை. ஆனாலும் போராடினால்தானே வெற்றியும் தோல்வியும். தோற்றாலும் மாவீரர்கள் எப்போதும் மாவீரர்களே!சமகாலத்தில் பாகிஸ்தானில் கிளர்ந்த மக்கள் போராட்டம், நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் தலைமையில் கிளர்ந்த மக்கள் போராட்டம் என்பதோடு ஒப்பிட முடியாவிட்டாலும், ஒன்று பட்ட வழக்கறிஞர்களின் தீவிர போராட்டம் என்பது நமது மனச்சாட்சியை உலுக்கி விட்டிருக்கிறது. அரசின் உடைப்பு வேலைகள், ரௌடிகளின் மிரட்டல்கள் என எதற்கும் பலியாகாமல் வழக்கறிஞர்கள் ஒன்று பட்டு நின்று போராடினார்கள். ஆனால் வழக்கறிஞர்கள் விஷயத்தில் கருணாநிதியும் தமிழக அரசும் எப்படி நடந்து கொண்டார்கள் எனப் பார்த்தால். கருணாநிதி எவ்வளவு மோசமான அரசியல் வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறார் என்பதையும், பாசிச ஜெயலலிதாவுக்கு சற்றும் குறைவில்லாதவர் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.அரசு நிர்வாகம், ஆளும் திமுகவிற்கு ஆதரவான பெரும்பாலான ஊடகங்கள், பொதுப்புத்தி என அனைத்தையும் மீறிதான் வழக்கறிஞர்கள் போராட வேண்டியிருந்தது. காயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீது பொய் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.1. அவர்கள் உயர்நீதிமன்றத்திற்குள் கூடி நின்றார்கள் (ஏண்டா வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்துக்குள் கூடாமல் கமிஷனர் அலுவலகத்துக்குள்ளா கூட முடியும்?)2. சமாதானம் பேசத்தான் உள்ளே போனோம். அவர்கள் கல்வீசித் தாக்கி கலவரம் உண்டாக்கி விட்டார்கள் (நூற்றுக்கணக்கான அதிரடிப்படை குண்டர்களோடுதான் நீங்களெல்லாம் சமாதானம் பேசப் போவீர்களா?)3. வழக்கறிஞர்கள் தாக்குதலில் போலீஸ் படுகாயம். (படுகாயப்பட்ட போலீஸ்காரர்கள் சுண்டு விரலில் துணி சுற்றியிருந்தார்கள்)இப்படி பலவகையான குற்றச்சாட்டுகளை ஊடகங்களின் துணையோடு தொடர்ந்து கக்கிக் கொண்டிருந்தார்கள் போலீசும், அரசும். இதற்கெல்லாம் உச்சமாக, பெண் போலீஸார் நீதிமன்றத்துக்குள் பாலியல் தொல்லைக்குள்ளாவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியது. உயர் போலீஸ் அதிகாரிகளால் சாதாரண கூலிகளைப் போல நடத்தப்படும் கடைநிலை போலீஸ்காரர்களின் மனைவிகளை வெள்ளைக் கொடியோடு வழக்கறிஞர்களிடம் சமாதானம் என்ற போர்வையில் கேனத்தனமாக அனுப்பி வைத்தது. அடுத்து உண்ணாவிரத நாடகம். உண்ணாவிரதம் இருப்பது போல் திரட்டி பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி போட்டோவும் பேட்டியும் கொடுத்து முடித்ததும் உண்ணாவிரதத்திற்கு அனுமதியில்லை என்று அனுப்பி வைத்தது என இத்தனை நாடகங்களையும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடத்தியபோதும், வழக்கறிஞர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை நசுக்க முடியவில்லை. உண்மையில் போலீஸ்காரர்கள் போராட வேண்டும் என்றால் முதலில் தங்களை ஒரு அடிமைகளைப் போல நடத்தும் உயரதிகாரிகளுக்கு எதிராகத்தான் முதலில் போராட வேண்டும். போலீஸ் வேலையில் சுயமரியாதைக்காகவும், முறைப்படுத்தப்பட்ட வேலை நேரத்திற்காகவும், போதுமான ஊதியத்திற்காகவும்தான் போலீஸ்காரர்கள் போராட வேண்டும். ஆனால் இந்த காவலர்களையும் அவர்களது குடும்பங்களையும் உயரதிகாரிகள் எப்படி அடியாட்களாக மாற்றுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவங்கள்தான் ஒரு எடுத்துக்காட்டு.பாலியல் சமத்துவத்தோடு ஒரு பெண் போலீஸ் தமிழக காவல்துறையில் செயல்பட முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பாலியல் சமத்துவம் அல்ல, பாலியல் பாதுகாப்பே கிடையாது. பழங்குடிப் பெண்களிடம், தலித் பெண்களிடம், ஆதிவாசிப் பெண்களிடம், தேடுதல் வேட்டையின் போது போலீசார் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படியேதான் பெண் காவலர்களிடமும் நடந்து கொள்கிறார்கள். ஆண்களை அண்டி அவர்களைச் சார்ந்து மட்டுமே இங்கே பெண் போலீஸ் செயல்பட முடியும் என்பதுதான் ஆணாதிக்கத்தால் வகுக்கப்பட்ட விதி. இதற்கு போலீஸ் துறை ஒன்றும் விதிவிலக்கல்ல. அதனால்தான் பாலியல் துன்புறுத்தல் என்கிற ஒரு அஸ்திரத்தை பெண் போலீசை வைத்து வீசச் செய்கிறார்கள். பல இடங்களில் போலீஸ் துறையில் ஆண் அதிகாரிகள் பெண் காலவலர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு எவ்வளவோ சான்றுகள் இருக்கின்றன.காதல் என்பது மனித குலத்தின் பொதுவான விதியாக இருந்த போதும் முதலாளித்துவ ஒழுக்கத்தில் உழைக்கும் மக்களின் காதலையும் பணக்கார சமூகங்களின் காதல் ஒழுக்கத்தையும் இன்றைய மறு காலனியாதிக்கச் சூழலில் வேறுபடுத்திப் பார்க்கமுடியும். ஆனால் ஆண் என்ற திமிரும் போலீஸ் உயரதிகாரி என்கிற திமிரும் பல பெண் போலீசாரை இன்று வரை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கி வருகிறது. வெறும் காக்கிச் சீருடை அணிந்த காட்சிப் பொம்மைகளைப் போல அவர்களை உயரதிகாரிகளும் ஆண் மனோபாவமும் நடத்தியதன் விளைவு. பல மகளிர் காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து மையங்களாக மாறி கிடைத்த வரை கறந்து விட்டு தாலி செண்டிமெண்டுக்குள்ளேயே குடும்ப பிரச்சனைகளை தீர்க்க முனைகிறது. பெண்களை சமையல்காரிகளாக மட்டுமே வைத்திருந்து, ஆனால் காக்கிச் சீருடை மட்டும் அணிவித்து அவர்களை பெண் என்று நிலையிலேயே நிறுத்தி வைப்பதால்தான் பாலியல் உணர்வில் அவர்களால் சுதந்திரத்தைப் பேண முடியவில்லை. அதனால்தான் போலீஸ் குடியிருப்பில் மேலதிக காதல் தகராறுகள்.சமீபத்தில் சிவகங்கையில் வேல்விழி என்ற பெண் காவலர் தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக வீசப்பட்டிருந்தார். காதல் தகராறினால் நேர்ந்த அந்தக் கொலையிலிருந்து தெரிவதென்ன? கொலை எதற்காக நடந்திருக்க வேண்டும்? ஒன்று பணக்கார வீட்டுப் பையனை அந்த வேல்விழி காதலித்திருக்க வேண்டும். அல்லது தன்னை விட உயர்ந்த சாதியிலோ தாழ்ந்த சாதியிலோ காதலித்திருக்க வேண்டும். இந்த இரண்டில் வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. ஆக வேல்விழி போலீஸ் பெண்மணி அதுவும் தலைமை ஏட்டு என்பதால் அவரால் கொலையிலிருந்து தப்ப முடியவில்லை. பணக்கார நாயின் முன்னாலும், சாதி ஆண்டைகளின் முன்னாலும் வேல்விழியின் காதல்கள் வெட்டி வீசப்படுகிறது என்றால், காக்கிச் சட்டை இந்த இரண்டிற்கும் முன்னால் மண்டியிட்டுக் கிடக்கிறது என்று பொருள். அதை அறியாத அப்பாவிப் பெண் வேல்விழி தலை வெட்டி வீசப்படுகிறார். இது ஒரு எடுத்துக்காட்டுதான். தமிழகம் முழுக்க பெண் போலீஸ் மற்றும் காவல்துறை கடை நிலை கான்ஸ்டபிளுக்கு உயரதிகாரிகளால் நேருகிற அவமானங்களுக்காக சங்கம் சேர்ந்து ஊர்வலம் போகாத இந்த அப்பாவி போலீஸ்காரர்கள்தான் இன்று சஸ்பெண்ட் செய்யப்படாத தங்களின் உயரதிகாரிகளுக்காக வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.‘கரும்புக்கு அதிக விலை கேட்டால் அடி. நெல்லுக்கு விலை கேட்டால் அடி. குடிநீர் கேட்டால் அடி. நிவாரணம் கேட்டால் அடி. அடி வாங்கினவனெல்லாம் ஒடி விடுகிறான். ஆனால் வழக்கறிஞன் மட்டும் ஓட மறுக்கிறானே! என்ன செய்கிறேன் பார்’ என்றுதான் அன்று உயர்நீதிமன்றத்துக்குள் நுழைந்து தாக்கினார்கள். அதனையடுத்து அரசுக்கு எதிரான போராட்டம் வலுக்க, போராட்டத்தை நசுக்க குண்டர்களை அனுப்பியதும், திமுக வழக்கறிஞர்களை போராடுகிற வழக்கறிஞர்களுக்கு எதிராக தூண்டி விட்டதும் அதுவும் இந்த எழுச்சிக்கு முன்னால் எடுபடாமல் போனபோது, கடைசியில் எனக்கு முதுகு வலி என கெஞ்சியதும் என எவ்வளவோ சொல்லலாம். ஆனால் முதல்வருக்கு என்னவிதமான மரியாதை இங்கே கிடைக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு போதும், “நடந்து விட்ட அசம்பாவிதத்தை களைய நீங்கள் அனுமதித்தால் ஆம்புலன்சிலேயே வந்து உங்களைச் சந்திக்கிறேன்” என்று தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்தியாயவுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். ஒரு மாநில முதல்வர் எழுதிய கடிதத்திற்கு தற்காலிக தலைமை நீதிபதி பதில் கூட அனுப்பியதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் மூத்த தலைவருக்கு இவ்வளவுதான் மரியாதை. சரி ஏடாகூடமாக அவமானப்படுத்தாமல் பதிலாவது அனுப்பாமல் விட்டாரே என்று மௌனமாக இருந்தாரா கருணாநிதி ? கடைசியில், ‘பிரச்சனை நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்குமிடையிலான பிரச்சனையாக மாறிவிட்டது” என்று நக்கலாகச் சொன்னார்.சொல்லிய வார்த்தைகள் காற்றில் கரைந்து அடுத்த அறிக்கை வருவதற்குள் தீர்ப்பு வந்து விட்டது. தீர்ப்பு சரியான தீர்ப்பாக இல்லாத போதும் நீதிபதிகள் மறைமுகமாக கருணாநிதிக்கு ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள். அது, பிரச்சனை நீதிமன்றத்திற்கும் வழக்கறிஞர்களுக்குமானது அல்ல. அரசிற்கும் வழக்கறிஞர்களுக்குமிடையிலானது.ஆனால் இன்றைக்கு வரை ஒரு கேள்விக்கு மட்டும் தமிழக போலீசிடமோ கருணாநிதியிடமோ பதில் இல்லை. உயர்நீதிமன்றத்திற்குள் யார் அனுமதியோடு போலீசார் நுழைந்தார்கள், தாக்கினார்கள்?தலைமை நீதிபதியின் அனுமதியைக் கோராமல் உள்ளே நுழைந்த காவல்துறை அதிகாரிகளை சம்பவம் நடந்த அன்றே சஸ்பெண்ட் செய்திருந்தால். இந்தப் பிரச்சனை இரண்டொரு நாளில் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசார் என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வழக்கறிஞர் சமூகத்தையே பகைத்துக் கொண்டார்.
ஈழத்தமிழர் விவகாரத்தில் செய்த துரோகம்.
காங்கிரசிற்கு எதிராகப் பேசியவர்கள் மீது அடக்குமுறை கைதுகள், சட்டக் கல்லூரியை இழுத்து மூடி ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வியை நாசமாக்கியது என இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னாலும் இருப்பது ஈழத் தமிழர் பிரச்சனை. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருணாநிதியும் திமுக அரசும் இருக்கிறது என்பதால் இங்கே சுமூகச் சூழல் கெடுகிறது.
இது அனைவருக்குமே தெரியும். இன்று தமிழக அரசிற்கு எதிரான, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்வலைகள் தமிழகம் முழுக்க கொழுந்து விட்டெரிகிறது. அது கருணாநிக்கும் தெரியும் அதனால்தான் மன்மோகன் போர் நிறுத்தம் வலியுறுத்துவதாக தனக்கு கடிதம் எழுதியதாகச் சொல்கிறார். ஆனால் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் சிறிபால டி சில்வா, “இந்தியாவின் உதவியில்லாமல் இந்தப் போரில் நாங்கள் வெற்றியடைந்திருக்க முடியாது என்றும். 13-வது சட்டத்திருத்தமும் அதை ஒட்டிய தீர்வுகள் குறித்தும் முன்னர் இந்தியா பேசியது. இப்போது தீர்வுத்திட்டங்கள் எதையும் முன் வைக்குமாறு எங்களை இந்தியா நிர்பந்திக்கவில்லை” என்று வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் சொல்கிறார் என்றால் மன்மோகனும் கருணாநிதியும் சேர்ந்து யாரை ஏமாற்ற இந்த நாடகங்களை கடந்த பல மாதங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.உயர்நீதிமனறத் தீர்ப்பின் மூலம் ஒன்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. பணக்காரன், அரசதிகார வர்க்கம், நீதித்துறைக்கு உள்ள நெருங்கிய நட்பும் நலம் பேணலும் இந்தத் தீர்ப்பின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அதனால்தான் வெளிப்படையாக நீதிமன்றம் சில கேள்விகளைக் கேட்கத் தயங்குகிறது.
சுப்ரமணியன் ஸ்வாமி மீது முட்டை வீசிய போது நீதிபதிகளுக்கு வந்த கொதிப்பு கூட தங்களின் வழக்கறிஞர்களைத் தாக்கியபோது வரவில்லை. எப்படி சாதாரண கான்ஸ்டபிளுக்கு ஒரு பிரச்சனை என்றால் உயரதிகாரி வரமாட்டாரோ அது போல வழக்கறிஞர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நீதிபதியும் வரமாட்டார். ஆனால் உயரதிகாரியின் பிரச்சனைக்காக இன்று சாதாரண கான்ஸ்டபிள்கள் எப்படி வீதிக்கு வந்து போராடத் தூண்டப்படுகிறார்களோ, அது போல அல்ல, நீதிபதிகளை போலீஸ் தாக்கியபோது தங்களின் எஜமானர்கள் தாக்கப்படுகிறார்களே என்று போய் தடுத்த வழக்கறிஞர்கள்தான் ரத்தம் சொட்டச் சொட்ட காயப்படுத்தப்பட்டார்கள். ஆனால் நீதிபதிகளின் மௌனம் போலீஸைப் பாதுகாக்கிறது. அரசின் அராஜகத்தை மறைமுகமாக அங்கீகரிக்கிறது.
சு.சாமி மீது விழுந்த முட்டைக்காக இவர்களை வருத்தம் கொள்ளச் செய்கிறது. பார்ப்பனக் கூட்டத்தில் அல்லக்கைகளாக போலீசும் அரசதிகாரமும் மாற்றப்பட்டிருப்பதும். பார்ப்பனீயத்தை மீறி இங்கே ஒன்றும் புடுங்கி விட முடியாது என்பதையும் தான் இந்த மோதல்கள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால் வழக்கறிஞர்கள் இந்த போராட்டம்தான் பார்ப்பனீயத்திற்கும், அடக்குமுறை அரசதிகாரத்திற்கும் எதிராகவும் கூர்முனையாக இருந்தது.கடைசியாக,வழக்கறிஞர்களே! போரட்ட ஒருங்கிணைப்புக் குழு போராட்டத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அதே வேளையில், நீதிமன்றம் தொடர்பாக மக்களின் பாதிப்பை மனதில் கொண்டு பணிக்குத் திரும்பும் அதே வேளையில், போலீஸ் அராஜகத்திற்கெதிரான போராட்டம் தொடர ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டக் குழுவை உருவாக்கி அந்தக் குழு, ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலோடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது என் கருத்து. அதே நேரம் என்ன காரணத்திற்காக வழக்கறிஞர்களை தாக்கினார்களோ அந்தப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதுதான் இவர்களை வீழ்த்த ஒரே வழி.
ஏனென்றால் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்னிலும் பார்க்க பல நூறு பெண்களும் குழந்தைகளும் கொடூரமான இனவெறிப் போருக்கு பலியாகிறார்கள். இந்தியா இன்னும் அந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆக எங்கிருந்து தொடங்கினோமோ அங்கிருந்தே மீண்டும் இதைத் தொடங்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் மாற்றத்திற்கான உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க மிகப்பெரும் சக்திகளான வழக்கறிஞர்கள் முன்வரவேண்டும். - பொன்னிலா (judyponnila@gmail.com)

Monday, March 30, 2009

நடந்தது என்ன ? கண்ணப்பனின் துரோக நிமிடங்கள்.

தலைவர் வைகோ வின் கடிதம் (சங்கொலி யில் வந்தது)

விடம்தோய்ந்த அம்புகள்;வீறுகொள்ளும் வேங்கைகள்!
இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும்இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்டகண்ணின்மணிகளே!


கண்ணீர் உறைந்துபோன தமிழர் இதயங்களுக்கு வெளிச்சம் தென்படுமா எனக் கவலை சூழ்ந்துள்ள நிலையில், இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத்தீவில், பேரழிவின் பிடியில் சிக்கி இருக்கும் ஈழத்தமிழர்களை, மரண பயங்கரத்தில் இருந்து மீட்டு, விடியலுக்கு இட்டுச்செல்ல, இப்பூவுலகின் பல்வேறு நாடுகளில், தமிழ் மக்கள் துடிதுடித்துப் போராடி, மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டிக்கொண்டு இருக்கின்ற வேளையில், தாய்த்தமிழகத்தின் பங்களிப்பின் மூலம்தான், கொடியோரின் மரண முற்றுகையைத் தகர்க்க முடியும் என்று நம்புகின்றனர்.

ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கவும், பூண்டோடு ஒழிக்கவும் நடத்துகின்ற இராணுவத் தாக்குதலில், தமிழர்களின் காவல் அரணும், உரிமைக் கவசமுமான விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட, பல நாடுகளில் இருந்து வாங்கிக் குவித்து உள்ள ஆயுதங்களைக் கொண்டு, அதிலும் அனைத்து உலக நாடுகளும் தடைவிதித்து உள்ள நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி, சிங்களப் பேரினவாத அரசு தாக்குதல் நடத்துகிறது. இந்தத் தமிழர் இன அழிப்பு யுத்தத்தை இயக்குவது இந்திய அரசுதான்; ஊக்குவிப்பது இந்திய அரசுதான்; ஆயுதம் தருவது இந்திய அரசுதான். ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புப் பேரவை தலையிடவிடாமல், நயவஞ்சக நடவடிக்கையால் தடுப்பதும் இந்திய அரசுதான்.

இதோ, விடுதலைப்புலிகளைத் தடை செய்து உள்ள நாடுகளின் கூட்டு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், உடனடிப் போர்நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்துவிட்டது. புலிகளைத் தடை செய்து உள்ள, அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள், ‘இருதரப்பும் போரை நிறுத்துங்கள்’ என அறிவித்து விட்டன. தென்னாப்பிரிக்க அரசு, சிங்கள அரசின் இராணுவத் தாக்குதலை நிறுத்தச் சொல்லிவிட்டது. ஆனால், இன்றுவரை இந்திய அரசு, போரை நிறுத்தச் சொல்லவில்லை.ஏன்? ஏன்? ஏன்? என்று விÞவரூபம் எடுக்கும் கேள்விக்குக் கிடைக்கின்ற பதில் ஒன்றுதான். அதுதான், இந்திய அரசின் மன்னிக்க முடியாத துரோகம். எத்தனை மனத்துன்பம்? என் இருதயத்தைக் குத்திக் கிழிக்கும் முட்கள்தாம் எத்தனை? எத்தனை?

ஆனால், அனைத்தையும் தாங்கிடும் வலுவையும், உரத்தையும் தருவதெல்லாம் நீங்கள்தான். ‘ஈழத்தமிழரைக் காக்க’ கையெழுத்து இயக்கத்தை, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கிற்று. நீங்கள் அப்பணியில் ஈடுபட்டீர்கள். ஆனால், அதில் தீவிரம் தேவை. இன்னமும் முனைப்புத் தேவை. பதினோரு தமிழர்கள் தாயக பூமியில் தீக்குளித்து மடிந்தனர். நாம் எவ்வளவு பணி செய்தோம் என்று ஒருகணம் யோசியுங்கள், செயலாற்றுங்கள், செயலாற்றுங்கள் என உங்கள் கரங்களைப் பற்றி வேண்டுகிறேன்.
தோழர்களே!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நேர்ந்த பழைய நிகழ்வுகளை நினைக்கிறேன். 1993 ஆம் ஆண்டு, நான் உயிரினும் மேலாகப் போற்றி உழைத்திட்ட இயக்கத்தில் இருந்து, தன் சொந்தக் குடும்ப அதிகாரப் பிரவேசத்துக்காக, என் மீது கொடும்பழி சுமத்தி, கலைஞர் கருணாநிதி கட்சியில் இருந்து வெளியேற்றினார். அந்த அநீதியை எதிர்த்து, இயக்கத்தின் அடலேறுகள் ஐந்து பேர் தீக்குளித்து மடிந்தார்கள்.

இப்போது என் மீது பழி சுமத்தும் சகோதரர்களிடம் அன்று சொன்னேன்: ‘உங்கள் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கிக் கொள்ள வேண்டாம். என்பொருட்டு, யாரும் இடர்ப்பட வேண்டாம். நான் பொதுவாழ்வில் இருந்து விலகுவேன். என்றும் அண்ணாவின் தம்பியாக இருப்பேன்’ என்றபோது, அந்தக் கருத்தை ஏற்க மறுத்தார்கள்.அடுத்துச் சொன்னேன்: ‘என்னோடு வந்தால் பட்டம், பதவிகள் கிடைக்காது; போராட்டங்களும், துயரமுமே பயணமாக இருக்கும்’ என்றேன்.

ஆனால், நாம் நடத்திய அரசியல் பயணத்தில், இயக்கத்துக்கு வந்த அதிகார வாய்ப்புகளை, பதவிகளை நான் விரும்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை. அந்த சகாக்களுக்குத் தந்து,பெருமிதமும், ஆனந்தமும் அடைந்தேன். அதிலும் குறிப்பாக, 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், மத்திய அமைச்சர் பதவியை திரு மு.கண்ணப்பன் அவர்கள் விரும்புகிறார்கள் என்று அறிந்தவுடன், ஏற்கனவே ஒருவர் அதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார், இப்பொழுது இவரும் கேட்கிறாரே என்று எண்ணி, பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும், திரு அத்வானி அவர்களிடமும், ‘இருவருக்கும் அமைச்சர் பதவி தாருங்கள்’ என்று நான் வற்புறுத்தி, வலியுறுத்திக் கேட்டபோது, ‘உங்களுக்கு என்றால் கேபினட் அமைச்சர் தருகிறோம், இல்லையேல், ஒரு இணை அமைச்சர் பதவிதான்’ என்று கூறிவிட்டனர்.
அந்த முடிவை மாற்றுவதற்கு, நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எவ்வளவு என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் நன்கு அறிவர். வசதியாக ஒருவேளை இப்போது மறந்து இருக்கக்கூடும்.
திரு அத்வானி அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, இருவருக்கும் அமைச்சர் பதவிகள் தர வாஜ்பாய் தீர்மானித்துவிட்டார் என்றபோது, நான் நெஞ்சம் நெகிழ்ந்து, அவர்கள் இருவருக்கும் நன்றி கூறியதும், அடுத்த அறையில் இருந்த திரு கண்ணப்பன் அவர்களிடம் ஓடிச்சென்று, கைகளைப் பற்றிக்கொண்டு மகிழ்ச்சியில் திளைத்ததையும் நான் மறக்கவில்லை.
குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில், பரந்த வெளியில், இருவரும் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் ஏற்றபோது, என் கண்கள் வடித்த ஆனந்தக் கண்ணீரை, அப்பொழுதே சங்கொலியில் கண்ணின்மணிகள் மடலாக ஆக்கினேன்.

எத்தனையோ நிகழ்வுகள்!

பொடா சட்டத்தில், காவல்துறை கைது நடவடிக்கைக்காக சென்னை விமான நிலையத்தில் காத்து இருந்தபோது, சிகாகோவில் இருந்து விண்ணில் பறந்து வந்து, மும்பை விமான நிலையத்தில் நான் இறங்கிய வுடன், அமைச்சர்கள் இருவரும் என்னைச் சந்தித்து என்னிடம் சொன்னதையும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியையும், இன்றுவரை நான் வெளியிடவில்லையே?
19 மாத காலம், நானும் தோழர்களும், சிறைக்கொட்டடியில்! அந்த நாள்களில் ஏற்பட்ட அனுபவங்கள், அமைச்சர்கள் மேற்கொண்ட அயல்நாட்டுப் பயணங்கள் குறித்தும் நான் விசனப்பட்டது இல்லை.

2006 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், ‘அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும்’ என்று கடைசி நேரத்தில் ஓங்கி அடித்துச் சொன்னவர்கள், தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்த இந்த மூவரும்தான் என்பது, அனைத்து மாவட்டச்செயலாளர்கள், முன்னணியினருக்கும் ஐயத்துக்கு இடம் இன்றி நன்றாகத் தெரியும்.

நான் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதியின் குடும்ப ஏடுகளில், என்மீதுதான் எத்தனை இழிச்சொற்கள்? வசைமாரிகள்? அத்தனையும் தாங்கிக் கொண்டேன், கழகத்துக்காக! வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வந்துகொண்டு இருந்தபோதே, கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர், ஏழு வாகனங்களில் வந்து, என் இல்லத்துக்கு முன் வந்து கூத்தடிக்கவும், கலவரம் செய்யவும் முனைந்தனர்.

முதல் அமைச்சர் குடும்பத்தினர் செய்த அக்கிரமத்தை, என் நெஞ்சை விட்டு நீங்காத சகோதரன் வீர.இளவரசன், சட்டமன்றத்தில் சாடினார். ஆனால், நம் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்தவர், அதுபற்றி வாய் திறக்கவில்லை.ஏன்? கொங்குச் சீமையின் உரிமையைக் காவு கொடுக்க, பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் பாதை நிர்வாகத்தைக் கேரளத்தின் பாலக்காட்டுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததே முதல் அமைச்சர் கருணாநிதிதான் என்று, மத்திய அமைச்சர் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சொன்னதற்குப்பின்னரும்கூட, நாம் பல போராட்டங்களை நடத்தியும்கூட, நம் சட்டமன்றக் கட்சித்தலைவர், சட்டமன்றத்தில் கணை தொடுக்கும் கடமையைச் செய்யவில்லையே?உடன்பிறவாத அண்ணனாகத்தானே அவரிடம் நான் பாசம் காட்டினேன், மதித்தேன்? அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதெல்லாம், எப்படித் துடிதுடித்தேன் என்பது, என் மனம் அல்லவா அறியும்?
நமது தென்சென்னை மாவட்டச் செயலாளர், சகோதரர் வேளச்சேரி மணிமாறன் அவர்களை, ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசியதற்காக, முதல் அமைச்சரின் காவல்துறை சிறையில் பூட்டிய நேரம். தென்சென்னையில், ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம். அன்றுதான், இருதய நோயால் பாதிக்கப்பட்ட திரு கண்ணப்பன் அவர்கள், அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த இரவுநெடுகிலும், தூங்காமல் விழித்து இருந்து, காலை ஏழு மணிக்குத்தான், நான் அப்பல்லோவில் இருந்து வீட்டுக்குச் சென்றேன் என்பதை யாரிடத்திலும் நான் சொன்னது இல்லையே?
அவரது மருமகன், நான் மிகவும் நேசித்த டாக்டர் கிருஷ்ணராஜ் அவர்கள், திடீரென மாரடைப்பால் மறைந்த செய்தி, இடியெனத் தாக்கி, நான் துன்பத்தில் துடித்ததை பழைய சங்கொலி கடிதத்தைப் புரட்டினால் தெரியும்.
இந்த இரண்டு சம்பவங்களையும், இப்போது நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது.
பிப்ரவரி 22 ஆம் நாள் பிற்பகல் நான்கு மணி அளவில், திரு கண்ணப்பன் அவர்கள், கைத்தொலைபேசியில் என்னிடம் பேசினார்கள். எடுத்த எடுப்பில் நான் அவரிடம் சொன்னேன்: ‘நேற்றைய தினம் தி.மு.க. தோழர் சிவப்பிரகாசம் என்பவர், ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்து போனார். அவருக்கு மலர்வளையம் வைக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது, தி.மு.க. வட்டாரத்தில் இருந்தே தெரிவிக்கப்பட்ட தகவல், ‘வைகோ வந்தால் அனுமதிக்காதீர்கள்; தகராறு செய்து விரட்டுங்கள்’ என்று, பெரிய இடத்தில் இருந்தே சொல்லப்பட்டு இருப்பதாகவும், எனவே, நான் வருவதைத் தவிர்க்குமாறும் கிடைத்த செய்தியை அவரிடம் சொன்னேன்.
‘அது நல்லதுதான்’ என்றவர், அடுத்துச் சொன்ன தகவல், என்னைத் தூக்கிவாரிப் போட்டது. ‘ நான் முதல் அமைச்சரைப் பார்த்துவிட்டு வந்தேன்’ என்றார். பலத்த அதிர்ச்சி அடைந்தேன். ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன்.‘நான் முதல்வரைப் பார்த்தேன்’ என்றார். ‘ எதற்காக?’ எனக் கேட்டேன். ‘நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மு.க.ஸ்டாலினும், வீராச்சாமியும் வந்து நலம் விசாரித்தார்கள். அதனால், எனக்கு மனதில் உறுத்தலாக இருந்தது. முதல் அமைச்சரைப் பார்த்தேன்’ என்றார்.
நான் அதற்கு மறுமொழியாக, ‘நீங்கள் பல நாள்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, உங்களை முதல் அமைச்சர் வந்து பார்க்கவில்லையே? உங்கள் குடும்பத்திலேயே மிகப்பெரிய துக்கமாக, உங்கள் மருமகன் டாக்டர் கிருஷ்ணராஜ் இறந்தபின்னர், பொள்ளாச்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், உங்கள் வீட்டுக்கு வந்து துக்கம் கேட்கவில்லையே? ஏன், முதல் அமைச்சர் உங்களிடம் தொலைபேசியில்கூடத் துக்கம் கேட்கவில்லையே? சரி; அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தபின்பு என்னிடம் கூறுகிறீர்கள். எனக்கு உடன்பாடு இல்லை. இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்றேன்.
நான் வேறு எந்த வார்த்தையும் பேசவில்லை. கோபிக்கவும் இல்லை. நான் கோபித்ததாகக் கூறுவது அப்பட்டமான பொய். அதன்பிறகு, 28 ஆம் தேதி அன்று, தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜிக்குக் கருப்புக்கொடி காட்ட முனைந்து, நான் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, நண்பர் குட்டி அவர்கள் சிறை நேர்காணலில், திரு கண்ணப்பன் அவர்கள், அவரிடம் பேசியதாக என்னிடம் கூறினார்.
22 ஆம் தேதி முதல், நான் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏனெனில், திரு கண்ணப்பன் அவர்கள், முதல் அமைச்சரைச் சந்திப்பதற்கு முதல்நாள்தான், பிப்ரவரி 21 ஆம் தேதி, கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னைக் கடுமையாக விமர்சித்து விடுத்த அறிக்கை, அமைச்சர் பொன்முடி பெயரில் வெளியாயிற்று. அதில், ‘கள்ளத்தோணியில் சென்று, மாபெரும் கிரிமினல் குற்றத்தைச் செய்தவன் என்றும், எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஈழத்தமிழ் இனத்தின் ஈடில்லாத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க, மரண பயங்கரத்தினூடே உயிரைத் துச்சமாக மதித்து நான் கடல் வழியே சென்றதும், இந்திய இராணுவத் தாக்குதலில் நான் மயிர் இழையில் உயிர் பிழைத்துத் திரும்பியதும், என்னைக் காப்பாற்ற, விடுதலைப்புலி சரத் என்ற பீட்டர் கென்னடி தன் உயிரைத் தந்ததும், கலைஞர் கருணாநிதியின் அகராதியில் கள்ளத்தோணி ஆகிவிட்டது.
எனக்குக் கருணாநிதியா உயிர்ப்பிச்சை கொடுத்தார்? நான் சாகாமல் உயிரோடு வந்துவிட்டேனே என்று அவர் எவ்வளவு கவலைப்பட்டார் என்பது, அவரது அரக்க மனதுக்கு மட்டும்தான் தெரியும். என் உயிரைக் காப்பாற்றியவர்கள் விடுதலைப்புலிகள்.
கலைஞர் கருணாநிதியை மருத்துவமனையில் போய் நான் சந்தித்து நலம் விசாரிக்கவில்லையாம்; நான் பண்பு அற்றவனாம். இவரது மருத்துவமனை பிரவேசம் எதற்காக என்பதைப் பற்றி, வீரத்தியாகி முத்துக்குமார் தனது மரண வாக்குமூலத்தில், உலகத்துக்கே பறைசாற்றி விட்டாரே?
அரசியல் நாகரிகத்தைப் பற்றியும், மனிதநேயத்தைப் பற்றியும் கூறுவதற்கு, கலைஞர் கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மகன் டாக்டர் பரிமளம் அவர்கள், அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்புக்காகச் சிகிச்சை பெற்றாரே, அவரைப் போய் கருணாநிதி பார்த்தாரா? அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றது ஒருவேளை தனக்குத் தெரியாது என்று கூறுவாரானால், முதல் அமைச்சர் பதவிக்கே அவர் லாயக்கற்றவர் என்று அர்த்தம். டாக்டர் பரிமளம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதைத் தெரிந்துகொண்டதற்குப் பிறகுதான், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆளுநர் பர்னாலாவை, கலைஞர் கருணாநிதி போய்ப் பார்த்தார்.
டாக்டர் பரிமளத்தின் உயிர் அற்ற உடல், நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து, சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அந்த இறுதி ஊர்வலத்துக்குத் தான் வராவிட்டாலும், யாராவது ஒரு அமைச்சரையாவது அனுப்பி வைத்தாரா?இல்லையே? நாராச நடையில், பொன்முடி பெயரில், என் மீது கலைஞர் கருணாநிதி புழுதிவாரித் துhற்றியதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்சியின் அவைத்தலைவர், அதற்குப்பதிலாக, முதல்வரைச் சந்தித்து குசலம் விசாரித்து, பழைய உறவு கொண்டாடுவது என்பதை, இயக்கத்தின் எந்தத் தொண்டன் ஏற்றுக்கொள்வான்?
சரி, அதுதான் போகட்டும். மறுமலர்ச்சி தி.மு.க.வின் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்த ஒருவர், தன்னை வந்து நேரில் பார்த்து நலம் விசாரித்ததைப் பெரிதாகப் பாராட்டுகிற கலைஞர் கருணாநிதி, அதனை உண்மையிலேயே மதித்தாரா? பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று, பிரணாப் முகர்ஜிக்குக் கருப்புக்கொடி காட்டியதற்காக, என்னை ஆலகால விடத்தை விடக் கொடிய வார்த்தைகளால் வசைபாடித் தீர்த்தாரே?
அந்தக் கருப்புக்கொடிப் போராட்டத்தில், உணர்ச்சிவயப்பட்ட இளைஞர்கள் சிலர், பிரணாப் முகர்ஜியின் படத்துக்குத் தீயிட்டனர். அந்த ஆத்திர உணர்ச்சி நியாயமானது. ஏனெனில், பிப்ரவரி 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில், கொடியவன் ராஜபக்சேயின் மறுபதிப்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை தந்தார். அந்த அறிக்கை, தமிழ்நாட்டு வீதிகள்தோறும் தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய அறிக்கை.
அது மட்டும் அல்ல; தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி இலங்கையில் போர்நிறுத்தம் வர வேண்டும் என்று பேசியது, கடைந்தெடுத்த பித்தலாட்டம். ஜெகஜ்ஜாலப் புரட்டு. ஏனெனில், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக, பிரணாப் முகர்ஜி, தூத்துக்குடியில் அப்படிச் சொன்னார். ஆனால், இலங்கை அரசுக்கு, போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று, இந்திய அரசு எந்தக் கோரிக்கையும் அந்த 28 ஆம் தேதியோ, அதற்குப் பின்போ, ஏன், இன்றுவரையிலும் செய்யவில்லை.
தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி பேசியதைக் குறிப்பிட்டு, மறுநாள் கொழும்பு நகரில், செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பலிதகோகனா கூறுகையில், இந்திய அரசிடம் இருந்தோ, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் இருந்தோ, போர்நிறுத்தம் செய்யுமாறு எந்த வேண்டுகோளும் வரவில்லை’ என்று சொன்னார்.
உண்மை இவ்வாறு இருக்க, பிரணாப் முகர்ஜியின் பேச்சால், தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டதாகக் கொட்டி முழக்கி உள்ள அதே முரசொலி கடிதத்தில், என் பெயரைக் குறிப்பிடாமலேயே, என் மீது, நான் என்றுமே மன்னிக்கமுடியாத இழிச்சொல்லையும், அபவாதத்தையும், பழியையும் சுமத்தி எழுதி உள்ளார்.
‘ஆனால், இந்த நேரத்தில்தான், இலங்கைத் தமிழர் பிரச்சினையை மாசாக்கி-மண்ணாக்கி-காசாக்கி-அரசியலில் நாணயத்தைத் தூசாக்கி, சில வக்கிர மூளையினர்; தாங்கள் வகித்த பொறுப்புகளுக்குத் தகுதி அற்றோர் என்று காட்டிக்கொள்ள, பிரணாப் வருகையை எதிர்த்து மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, நாகரிகக் கேடாக நடந்துகொண்டு, நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப்பின் படங்களுக்கும் தீயிட்டுப் பார்த்துத் திருப்தி அடைந்து இருக்கின்றனர்’.
என்று எழுதி உள்ளார்.
93 இல் என் மீது சுமத்திய பழியைவிட, இந்தப் பழிச்சொல் மிகக் கொடூரமானது.
ஈழ விடுதலைக்கு உயிர்களைக் கொடையாகத் தருகின்ற விடுதலைப்புலிகளிடம் பணம் பெறுவது என்பது, உடல் வாணிகத்தை விட மிகமிக இழிவானது. மனச்சாட்சியே இல்லாத கலைஞர் கருணாநிதிக்குத்தான், இப்படிப் பழிசுமத்தும் துணிச்சல் வரும்.
இத்தனைக்குப் பின்னரும், மார்ச் 7 ஆம் தேதியன்று கூட்டப்பட்ட மறுமலர்ச்சி தி.மு.க.வின் உயர்நிலைக் குழுக் கூட்டத்துக்கான அழைப்பு, முறையாக, வழக்கமாக அனுப்புகின்ற முறையில் அனுப்பப்பட்டது. இதற்கு முன்னர் உயர்நிலைக் குழுக்கூட்டம் கூட்டப்படுகிறபோது, என்னவிதத்தில் சங்கொலியில் அறிவிப்புகள் வெளியானதோ, அதே வடிவத்தில்தான் இந்த முறையும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், என்னுடைய ஒப்புதலோடுதான் திரு கண்ணப்பன் அவர்கள் முதல்வரைச் சந்தித்ததாக, உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்திகள் வந்தன. இதை நான் பிரச்சினையாக ஆக்கவில்லை. விளக்கம் கேட்கவில்லை. ஆனால், திரு கண்ணப்பன் அவர்கள், தன்னுடைய இல்லத்துக்கு, ஒன்றிய, நகரச் செயலாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகளை வரவழைத்து, ‘பொதுச்செயலாளர் என்னைப் புறக்கணிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டைத் தொடுக்கத் தொடங்கினார்.
இந்தநிலையில், அருமைச் சகோதரர்கள் திருப்பூர் துரைசாமி, கணேசமூர்த்தி, ஆர்.டி.மாரியப்பன், ஆர்.ஆர். மோகன்குமார், டி.என். குருசாமி, அட்டாரி நஞ்சன் ஆகியோர் என்னைச் சந்தித்தனர். நடந்தவற்றை நான் விளக்கினேன். என் மீது எந்தத் தவறும் இல்லை என்றே அவர்கள் எண்ணினர். அப்பொழுதுதான் ஒரு உண்மையை நான் அறிந்தேன். திரு மு.க. ஸ்டாலினும், திரு ஆர்க்காடு வீராச்சாமியும், ‘தலைவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று திரும்பத்திரும்பச் சொன்னபின்னர்தான் தாம் போய்ப் பார்த்ததாக’ அவர்களிடம் திரு கண்ணப்பன் அவர்கள் கூறி உள்ளார்.
இந்த நயவஞ்சக நரி வேலையெல்லாம் யாருக்குக் கைவந்த கலை என்பதை, நீங்களும், நானும் நன்றாக அறிவோம்.நம் அருமைச் சகோதரர்கள், திரு கண்ணப்பன் அவர்களைத் திரும்பப் போய்ச் சந்தித்தபோதுதான், அவர் ஏற்கனவே ஒரு முடிவை மேற்கொண்டு, அதைச் செயல்படுத்த ஆதரவு திரட்டுகிறார் என்பதை உணர்ந்தார்கள்.
மார்ச் 8 ஆம் நாள் காலையில், உடுமலைப் பேட்டையில் கழகத்தோழர் சின்னச்சாமி அவர்களுடைய புதல்வியின் திருமண விழா, திரு மு. கண்ணப்பன் அவர்கள் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. முதல் நாள் மாலை வரவேற்பில் கலந்து கொள்வதாக இருந்த நான், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச்சகோதரர் ஆரணி இராஜா அவர்களின் புதல்வியின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு விட்டு, அங்கிருந்து ரயிலில் பயணித்து, 8 ஆம் தேதி காலை, திருப்பூரில் இறங்கி, உடுமலைப்பேட்டைத் திருமணத்தில் கலந்துகொள்ள இருப்பதை, கோவை மாவட்டச் செயலாளர் சகோதரர் ஆர்.டி.மாரியப்பன் அவர்கள், திரு கண்ணப்பன் அவர்களிடம் தெரிவித்து, ‘உங்கள் தலைமையில்தான் திருமணம் நடக்கிறது, பொதுச்செயலாளரும் வருகிறார், நீங்கள் அங்கே வரும்போது, ஒரே மேடையில் இருவரும் பங்கு ஏற்பீர்கள், பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்றதற்கு, அவர் மறுத்துவிட்டார்.
அதன்பிறகு, 72 மணி நேரத்துக்கு உள்ளாக, திரு மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் புடைசூழ திரு கண்ணப்பன் வீட்டுக்கு விஜயம். தி.மு.க.வில் சேரப்போவதாக அறிவிப்பு. அனைத்தும் எவ்வளவு வேகத்தில் நடந்துவிட்டது.நம்மோடு பயணம் செய்தவர்களில், தொடர முடியாமல் நின்றவர்களையோ, விலகிச் சென்றவர்களையோ குறித்து நான் மனதுக்குள் வருந்தினேனேதவிர, அவர்களைப் பழித்தது இல்லை. இவ்வளவு காலம் நம்மோடு கைகோர்த்து வந்ததற்கு நன்றி. எங்கிருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும்!
இந்த வேதனைகளை உள்ளம் சுமந்துகொண்டுஇருந்த நேரத்தில்தான், ஏழாம் தேதி அன்று காலையில்,நமது மறுமலர்ச்சி ஏவுகணை நாஞ்சில் சம்பத் அவர்களை, கைது செய்ய திருப்பூர் காவல்துறை புறப்பட்டு வருகிறது என்று அறிந்து,உடனடியாக சம்பத்தோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தாயகத்துக்கு வரச் சொன்னேன்.தாய்ப்பறவை குஞ்சுகளைச் சிறகால் மூடிப் பாதுகாக்கும் உணர்வுதான் என்னுடைய இயல்பு என்பதைநீங்கள் நன்றாக அறிவீர்கள். அடக்குமுறையை ஏவுகிறார் கருணாநிதி என்பதை,சில நாள்களுக்கு முன்பு, கருணாநிதியின் குடும்ப நாளேட்டில், ஊசியின் குடைச்சலிலேயே அறிந்தேன்.
நாடாளுமன்றத் தேர்தலில், நமது பிரச்சாரத்தை முடக்கத் திட்டமிடுகிறார் முதல் அமைச்சர். அதனால்தான், கொள்கை முழங்கும் நமது புலிப்போத்தை, காராக்கிருகத்தில் அடைக்கிறார். காவல்துறையின் தலைமை அதிகாரி ஒருவர், இந்த ஒரு வாரத்துக்குள் நான்கு முறை, பாதுகாப்புச் சட்டம் பாயும் என மிரட்டல் அறிக்கை விடுத்து உள்ளார். தூத்துக்குடியில் நான் கைது செய்யப்பட்டபோதே, முதல் அமைச்சர் தன்னுடைய அறிக்கையில், தேசப் பாதுகாப்புக்கான சட்ட நடவடிக்கை என்று மிரட்டலும் விடுத்தார்.
இவற்றுக்கெல்லாம் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்பதை ஊகிக்கிறேன். அடக்குமுறைக்கும், ஆபத்துகளுக்கும் நாம் அஞ்சிடப் போவது இல்லை. ஆனால், நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு, அறம் சரியான தண்டனையைத் தந்தே தீரும்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, வேலூர், சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அனைத்திலும் நான் பங்கு ஏற்றேன்.
மார்ச் 15 ஆம் தேதி, மராட்டிய மாநிலத்தின் தலைநகராம் மும்பையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் குழுவினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில், சிறப்புப் பேச்சாளராக நான் கலந்து கொண்டேன். 21 ஆண்டுகளுக்குப் பின்னர், மும்பையில் பேசினேன். மும்பைத் தமிழர்கள், பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருந்தனர். இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியவர், தஞ்சை மாவட்டத்தில் இருந்து மும்பைக்குச் சென்று, பல ஆண்டுகளாக அங்கே வசித்துவரும் தமிழ்ச்செல்வன் எனும் ஒரு வீர வேங்கை.
கடந்த நவம்பர் 26 ஆம் நாள் அன்று, மும்பை நகரில், பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள், படுகொலைகளை நடத்தியபோது, விக்டோரியா ரயில் நிலையத்தில், நூற்றுக்கணக்கில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது,இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழைக்கு இடையே, மரணத்துக்கு அஞ்சாது பாய்ந்து சென்று, 35 உயிர்களைக் காப்பாற்றிய தீரர்தான், இந்தத் தமிழ்ச்செல்வன் ஆவார். அவரது வீரதீரச் செயலை மும்பை நகரமே பாராட்டுகிறது. மராட்டிய மாநில ஆளுநர் ஜமீர் அவர்கள், தமிழ்ச்செல்வனைப் பாராட்டி விருதும் வழங்கி உள்ளார். மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கு ஏற்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களில், 90 விழுக்காடு இளைஞர்கள் என்பது, இதயத்துக்கு இன்பத் தேன் பாயும் செய்தி ஆகும். இரண்டு மணி நேரம் நான் உரை ஆற்றினேன்.
தோழர்களே, தாய்த் தமிழகத்தில் தமிழ் மக்களின் உள்ளம், ஈழத்தமிழர் பிரச்சினையால் எரிமலையாகிக் கொண்டு இருக்கிறது என்பதன் அடையாளம்தான், பதினோரு பேர் தீக்குளித்து மடிந்து உள்ள நிகழ்வுகள் ஆகும். ஒவ்வொரு சகோதரன் தீக்குளித்த செய்தி கிடைத்தவுடன், அந்தத் தியாகத் திருவிளக்குகளின் திருமுகங்களைக் காண, ஓடோடிச் சென்றேன். சென்னையில் தி.மு.க. தோழர் சிவப்பிரகாசத்துக்கு நேரில் மலர் அஞ்சலி செலுத்த இயலாமல் போனதை ஏற்கனவே சொன்னேன்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களை உலுக்கிய வீரத்தமிழன் முத்துக்குமார் மறைந்த மறுநாள், அந்த வேங்கை வசித்த அவரது தங்கையின் எளிய வீட்டுக்குச் சென்றேன். நான் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்தவுடன், அத்தங்கையின் கணவரும், முத்துக்குமாரின் தந்தையும் என்னைச் சிறையில் காண, பயணத்துக்குத் தயாரானார்கள் என்பதையும் அறிந்தேன். முத்துக் குமாரின் தங்கை, ஒரு பெண் மகவுக்குத் தாயானாள் என்பதை அறிந்து, அந்த வீட்டுக்குச் சென்று, வாழ்த்துச் சொல்லி, அவர்கள் பெயர் சூட்டச் சொன்னதால், அக்குழந்தைக்கு
‘முத்தெழில்’ எனப் பெயரும் சூட்டினேன்.
பள்ளபட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை எழில் வேந்தன் ஆகியோரின் இறுதி ஊர்வலங்களிலும் நான் கலந்து கொண்டேன். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வள்ளிப்பட்டு சீனிவாசனை, நெருப்பில் கருகி மருத்துவமனையில் துடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த நள்ளிரவில் போய்ப் பார்த்தேன்.
விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. தோழர் கோகுல ரத்தினம், தீக்குளித்து இறந்ததை அறிந்து, அங்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினேன். கடலூர் மாவட்டத்தில் ஆனந்த் எனும் 22 வயது இளைஞர் தீக்குளித்தார் என்ற செய்தி, மும்பையில் இருந்த எனக்குக் கிடைத்தது. 16 ஆம் தேதி காலை விமானத்தில் மும்பையில் இருந்து சென்னை வந்த நான், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக புதுச்சேரிக்குச் சென்று, அரசு மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த அந்தத் தியாகத் தம்பியைப் பார்த்தவுடன், இருகரம் கூப்பி வணங்கினேன். அத்தம்பி, எழுவதற்கு முயற்சித்தார். நான் தடுத்தேன். கரம்கூப்பி வணங்கினார்.
‘என்ன தம்பி, இப்படிச் செய்துவிட்டீர்களே? உயிரோடு வாழ்ந்து போராட வேண்டிய நீங்கள், இப்படித் தீக்குளிக்கலாமா?’ என்று கேட்டேன்.
தீர்க்கமான குரலில், மிகத் தெளிவாக உடனே பதில் சொன்னார்: ‘உழைத்தால்தான் எனக்குக் கஞ்சி. வேலை செய்தால்தான் ஒருவேளைச் சோறு. நான் உயிரோடு இருந்து எதைச் சாதிக்கப் போகிறேன்? ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற ஏதாவது ஒரு விதத்தில் என்னுடைய சாவு உதவட்டுமே என்றுதான் தீக்குளித்தேன்.’ என்றார்.
உடலெல்லாம் கருகி இருந்த அந்தத் தம்பி, நெருப்பு அரித்த தன் உடலின் வேதனைக்கு முனகாமல், இப்படி ஆணித்தரமாகச் சொன்னதைக் கேட்டு, என் விழிகள் அந்தத் தம்பியின்மீது, கண்ணீரைப் பொழிந்தன. இந்த வீரமகனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. திருமணமும் ஆகவில்லை. ஒரேயொரு தங்கை. அழுகையே வாழ்வாகிவிட்ட அத்தங்கைக்கு ஆனந்தி என்று பெயர். அருகில் அவளை அழைத்து, அத்தங்கையைச் சுட்டிக்காட்டினேன். ‘தங்கை’ என்று அந்த வீரனின் உதடுகள் முணுமுணுத்தன. சோகம் நிறைந்த பார்வையைச் செலுத்தினான் தங்கை மீது. கொஞ்சங்கொஞ்சமாக விழிகள் மூடிக்கொண்டன. பேச்சு நின்றுவிட்டது. உங்களிடம் பேசியதுதான், ஆனந்தனின் கடைசிப் பேச்சு’ என்று பின்னர் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர், தலைவர்கள் சந்திக்கச் சென்றபோது, பேச்சு நின்றுவிட்டு இருந்தது.
இதற்கு இடையில், இன்னொரு சோகச்செய்தி தாக்கியது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இராஜசேகர் என்ற இளைஞன், ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து, தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற செய்திதான் அது.
நான் பாண்டிச்சேரியில் பொதுக்கூட்டம் பேசி முடித்துவிட்டு, நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டு, காரில் தஞ்சைக்குப் பயணமானேன். அதிகாலை நான்கு மணி அளவில் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்றேன். இராஜசேகரன் அனுமதிக்கப்பட்டு இருந்த அந்த வார்டின் வாயிலில் கதறி அழுதவாறு ஏழ்மைக்கோலத்தில் இருந்த ஒரு மூதாட்டியும் ஒரு தங்கையும், தரையில் துடித்துப் புரண்டனர்.
இறுதி மூச்சு ஊசலாடிக் கொண்டு இருந்த ராஜசேகரின் அருகில் போய்ப் பார்த்தேன். உடலெல்லாம் கருகி, முகமும் சிதைந்துபோய் இருந்தது. ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டு இருந்தார். நெஞ்சைப் பிளந்தது அந்தக் காட்சி. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அழுதுபுரண்டு அரற்றும் இராஜசேகரின் தாரத்துக்கும், தாய்க்கும் என்ன ஆறுதலை நான் சொல்ல முடியும்?
தாங்க இயலாத மனவேதனையோடு, அங்கே இருந்த செய்தியாளர்களிடம் சொன்னேன்: இலங்கைத் தமிழர்களுக்காக இராஜசேகர் தீக்குளித்து உள்ளார். இன்னும் சில மணி நேரத்துக்குள் அந்த உயிர் அடங்கிவிடும். ஆனால், அவர் மனைவியோடு சண்டை போட்டதாகவும், அதனால் தீக்குளித்ததாக ஒரு கருத்தையும், வயிற்றுவலியால் தீக்குளித்ததாக ஒரு கருத்தையும் காவல்துறை சொல்லி உள்ளது. இது கொடுமையிலும் கொடுமை. அயோக்கியத்தனமான, ஈனத்தனமான வேலை. இப்படிக் காவல்துறையைக் கூறவைத்தது யார்? முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று குற்றம் சாட்டுகிறேன்.
பள்ளபட்டி ரவி தீக்குளித்தபோது, அமரேசன் தீக்குளித்தபோது, சீனிவாசன் தீக்குளித்தபோது, இப்படிக் காவல்துறையின் மூலம் உண்மையை மறைத்து, இந்தத் தீக்குளிப்புத் தியாகங்களைக் கொச்சைப்படுத்த காவல்துறை முற்பட்டதற்கு, முதல் அமைச்சர்தான் முழுக்க முழுக்கக் காரணம் ஆவார்.
தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து மடிகிறார்கள் என்ற செய்தி பரவக்கூடாது; தமிழர் மனம் எரிமலையாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், முதல் அமைச்சர் இந்த அக்கிரமத்தைச் செய்கிறார். அதனால்தான், தீக்குளித்தவர்களுக்கு அவர் இரங்கல்கூடத் தெரிவிக்கவில்லை. முத்துக்குமார் இறந்தபின்பு, ஆறு நாள்கள் கழித்து, வேறு வழி இல்லாமல் கட்சி செயற்குழுவில் ஒப்புக்கு ஒரு தீர்மானத்தைப் போட்டார். அதன்பிறகு, இத்தனை பேர் தீக்குளித்து மடிந்தனர். இதுவரையிலும், எந்த இரங்கலும் அவர் தெரிவிக்கவில்லை. ஏன்? தி.மு.க.வைச் சேர்ந்த இருவர் தீக்குளித்து இறந்தபோதும், அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கவில்லை. இந்த மகானுபாவர்தான், மனிதநேயத்தைப் பற்றி எனக்குப் போதிக்கிறார்’ என்றேன்.
கழகக் கண்மணிகளை நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாடாளுமன்றத் தேர்தல் களப்பணி நம்மை அறைகூவி அழைக்கும் இந்தநேரத்தில், ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற, ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். கிழக்குத் தைமூரில், அந்தப் பாதுகாப்புப் பேரவைதான், தலையிட்டுத் தீர்வு கண்டது. அதனால்தான், ஐ.நா.வின் பொதுச்செயலாளருக்கும், அமெரிக்க, ரஷ்ய அதிபர்களுக்கும் கோடிக்கணக்கில் கையெழுத்துகளை அனுப்பிவைக்கத் தீர்மானித்து வேலையைத் தொடங்கினோம்.
நம் சொந்தச் சகோதர, சகோதரிகள், கொலையுண்டு மடிகின்றனர் அங்கே. அதனைத் தடுக்கத் துடிக்கும் தமிழர்கள் தீக்குளித்து மடிகின்றனர். நீங்கள், சிரமங்களைப் பாராது, கையெழுத்துகள் வாங்கும் பணியைத் தீவிரப்படுத்துங்கள். தாமதம் செய்யாதீர்கள், தள்ளிப் போடாதீர்கள். உற்றுழி உதவ முன்வாருங்கள்!


நம்மை அழிப்பதற்குத் திருக்குவளையார் போட்ட திட்டம் அனைத்தும் மண்ணாகி விட்டது. விடம் தோய்ந்த அம்புகளை இப்போது வீசுகிறார்.
அடிபட்ட புலியாக, வீறுகொண்ட வேங்கையாக எழுவோம்!

வைகோ எனது உயிர் - டாக்டர் சதன் திருமலைக்குமார்

நெல்லை: நான் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகள் வதந்தியே. வைகோதான் எனது உயிர். அவரை விட்டு நான் பிரிய மாட்டேன் என்று நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார் கூறியுள்ளார்.

மதிமுக எம்.எல்.ஏக்கள் கண்ணப்பன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் சமீபத்தில் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் மதிமுகவிலிருந்து விலகப் போவதாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் வட்டாரத்தில் இதே பேச்சாக உள்ளது.

இதுகுறித்து சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ கூறுகையில், நேற்று மாலை வரை சென்னையில் தலைவர் வைகோவை சந்தித்து பேசிவிட்டு இன்று காலைதான் பொதிகையில் ஊர் திரும்பினேன். அதற்குள இப்படியோரு புரளியை யார், எதுக்காக கிளப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை.

நான் அரசியலுக்கு வந்ததே வைகோவால்தான். அவரால் கவரப்பட்டுத்தான் அரசியலுக்கு வந்தேன். 1970 முதல் அவருடன் இருக்கின்றேன்.

வைகோவின் தனி மனித ஓழுக்கம், கொள்கை, உழைப்பு, பாசம் ஆகியவைதான் என்னை அவரிடம் கவர்ந்தது. எனக்கு வேறுமாதிரி எந்தவித ஆசையும் கிடையாது. யாரோ பொழுது போகாமல் இதை கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.

இன்று மாலை தேனியில் நடக்கும் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள கிளம்புகிறேன். கட்சி மாறுகிறீர்களா என்ற கேள்வியை கூட யாரும் என்னிடம் கேட்க முடியாது. அந்த அளவுக்கு வைகோமீது பற்றுள்ளவன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எனது உயிர் இருக்கும் வரை வைகோவிட்டு பிரிய மாட்டேன் என்றார் திருமலைக்குமார்.

Sunday, March 29, 2009

தலைவர் வைகோவுடன் சந்திப்பு -தோழர்களுக்கு அழைப்பு.

அன்புள்ள நண்பர்களே,
எங்களைப்பற்றி சிறு அறிமுகம்.
நாங்கள் தலைவர் வைகோவை பின்பற்றி , நண்பர்களுடன் இணைந்து sangoli.org , mdmkonline.com மற்றும் கீழ்க்கண்ட அனைத்து blog களையும் நிர்வகித்து வருகிறோம்.
sangolimdmk.blogspot.com
supportmdmk.blogspot.com
இந்த கடிதத்தின் நோக்கம் :-
இணையத்தில் அறிமுகமான நண்பர்கள் அனைவரும் தலைவர் வைகோ அவர்களநேரில் சந்திப்பது.
 • ஒருபக்கம் திமுக நமது கட்சியை அளித்தே விடுவது என்ற கொடும் கெட்ட எண்ணத்தில் இருக்கிறது.மறுபக்கம் நம் கூட்டணி கட்சியாக இருந்தாலும் நம்மை நம் சுயமரியாதையை அங்கீகரிக்க மறுக்கும் அல்லது நம் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்தும் கட்சிகள் .
 • இந்தியாவே வழிநடத்தும் ஈழத்தில் தமிழர்கள் மீதான போர். அந்தப்போரை நடத்தும் சோனியாவின் காங்கிரஸ் அரசு, அதில் அங்கம் வகித்து தமிழர் துரோகம் செய்யும் திமுக அரசு.
 • சரிந்து விழும் இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வு முறைகள்.
 • தேசியபாதுகாப்பு என்பதே இல்லை என்ற நிலைமை.
 • நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் நாம் வெற்றி பெற செய்யவேண்டிய உத்திகள் அதற்கான ஆலோசனைகள்.
போன்றவைகளை ,தலைவர் வைகோ அவர்களுடன் நேர்கண்டு பேசிட , நாம் சென்னையில் ஓரிடத்தில் கூடலாமா ? இதற்கு விருப்பமான் உங்கள் நண்பர்களையும் நீங்கள் அழைத்து வரலாம். அல்லது உங்களின் விருப்பம் என்ன என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தினால் அதன்படி அதற்குண்டான ஏற்பாடு வேலைகளை செய்யலாம்.
நீங்கள் கீழ்க்கண்ட கைபேசியில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் .
தோழர் கண்ணன் . (ananyaa.samy@gmail.com)
9787713641


சபாஷ் சரியான போட்டி - இரு தரப்பும் சொல்வதும் உண்மை.

சென்னை: மனைவிக்கும், மைத்துநருக்கும் பதவி கொடுத்து அரசியல் வைத்திருக்கும் விஜயகாந்த், குடும்ப அரசியல் குறித்து பேச தகுதி இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் நவீன புத்தன் ஒருவர் தோன்றியிருக்கிறார். அவர் தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ஆமாம், அவருக்கு அப்படித் தான் நினைப்பு.கட்சி ஆரம்பித்து, சட்டமன்றத்தில் ஒரு இடத்திற்கு மேல் இன்னும் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவில்லை. மதுரையே என் கோட்டை என்று கூறிய திருமங்கலம் தொகுதியிலே `டெபாசிட்'டுக்கே வழியில்லை.
ஆனால்,

அதற்குள்ளாகவே அடுத்த முதல்-அமைச்சர் தான் தான் என்பதைப்போல ஒரு நினைப்பு.ஜெயலலிதா பேசுவதைப் போலவே தன்னை விட்டால் வேறு கதியில்லை என்று `மைக்'கைப் பிடித்துவிட்டால் போதும், எதை வேண்டுமானாலும் பேசுகிறார்.

கிராமப்புறங்களில் நடிகரைப் பார்க்க, அதுவும் சில படங்களிலே கதாநாயகராக வேறு நடித்துவிட்டால் போதும், மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதில்லையா, அப்படி வரும் கூட்டங்களையெல்லாம் தனக்கு வாக்களிக்கப் போகும் கூட்டம் என்று நினைத்துக்கொண்டு-அவருக்கு ஏதோ 15 பாராளுமன்ற தொகுதிகளையும், பல கோடிகளையும் கொட்டித் தர அழைத்ததாகவும், தான் விலை போகவில்லை என்றும் ஊருக்கு ஊர் பேசிக் கொண்டிருக்கிறார்.தனியாருக்கு கல்வியை விற்றுவிட்டதாக நேற்று பேசியிருக்கிறார்.

இவரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை நடத்திக் கொண்டு, கொள்ளை வசூல் செய்து கொண்டு ஏதோ உத்தமரைப் போல தனியாருக்கு கல்வியை விற்று விட்டதாகப் பேசுகிறார்.இவர் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்து, இவரைப் பாராட்டி பேசியதே முதல்-அமைச்சர் கருணாநிதியும், மூப்பனாரும் தான். பெற்ற வயிற்றையே கிழிப்பது போல அவர்கள் இருவரின் கட்சிகளைத் தான் அன்றாடம் வாய் கிழிய திட்டிக் கொண்டிருக்கிறார்.மூத்த தலைவர்களையெல்லாம் சகட்டுமேனிக்கு வசை பாடுகின்ற வழக்கம் இதுவரை ஜெயலலிதாவுக்குத்தான் இருந்தது. இப்போது தானும் அதற்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை என்று புகழ் பெறுகின்ற அளவிற்கு விஜயகாந்த் பேசுகிறார்.இலங்கை பிரச்சினைக்காக தேர்தலையே புறக்கணிப்போம் என்று அறிவித்தவரும் இவர்தான். எல்லோருக்கும் முன்பாக தற்போது வேட்பாளர்களை அறிவித்திருப்பதும் அவர் தான். காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியில்லை என்று சொன்னவரும் இவர்தான்.காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளிலே நிற்கப்போகிறது என்று தெரிவதற்குள் வேட்பாளர்களை அறிவிப்பதும் இவர்தான். அதே காங்கிரஸ் கட்சியின் மத்திய ஆட்சியை கண்ணை மூடிக்கொண்டு சாடுவதும் இவர்தான்.தி.மு.க.விலே குடும்ப அரசியல் என்கிறார். ஆனால், அவரது கட்சி ஆரம்பித்து ஒருசில ஆண்டுக்குள்ளாகவே அவரது மனைவியும், மைத்துனரும் தான் அவரது கட்சியிலே எல்லாமாகவே இருக்கிறார்கள் என்பது ஊருக்கே தெரிகிறது.அவர் கட்சியின் சார்பில் தனித்துப் போட்டியிடுவது பற்றியோ-அதற்காக தேர்தல் பிரசாரம் செய்வது பற்றியோ நமக்கு எந்த விதமான ஆட்சேபணையும் கிடையாது.இந்திய நாட்டில், ஜனநாயகத்தில் அது அவருக்கு உள்ள உரிமை. ஆனால், தேவையில்லாமல் தி.மு.க.வை வம்புக்கு இழுப்பதும்- ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடைபெறுகிறது என்றும் சொல்லும் விஜயகாந்துக்கு ஒன்று சொல்வேன்.முதலில் `உன் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்துவிட்டு, பிறகு மற்றவர்கள் கண்ணில் உள்ள தூசியை அகற்றுவதற்கு முயற்சி செய்' என்று கூறியுள்ளார் வீராசாமி.

Thursday, March 26, 2009

தாயுக்கு தரகர் வேலை பார்க்க முயற்சிக்கிறார்

தேனி: மதிமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன், திடீரென திமுகவில் இணைந்துள்ளார். மதிமுகவின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமைக்குரியவர் கம்பம் ராமகிருஷ்ணன். 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கம்பம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் ராமகிருஷ்ணன்.மதிமுகவின் முதல் வெற்றிச் செய்தியே ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றதுதான்.

இந்த நிலையில், திடீரென ராமகிருஷ்ணன் திமுகவில் இணைந்துள்ளார். இன்று மாலை அவர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில்தான் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் திமுகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்னொரு எம்.எல்.ஏவான கம்பம் ராமகிருஷ்ணன் திமுகவில் இணைகிறார்.

வாசகர்களின் பின்னூட்டத்தை இங்கு பார்க்கவும் :

பதிவு செய்தவர்: கம்பம் குமார் பதிவு செய்தது: 26 Mar 2009 11:45 pm இவர் செய்தது வெட்ககேடானது . தாயுக்கு தரகர் வேலை பார்க்க முயற்சிக்கிறார் கம்பம் ராமகிருஷ்ணன். காசுக்கு அடிமையான பழைய திமுக நாய்கள் அனைவரையும் வைகோ விரட்டினால் மட்டும்தான் இது போன்றவர்களின் கொட்டத்தை அடக்க முடியும். காசுக்கு எதையும் செய்யலாம் என்று நினைக்கும் கருணாநிதியின் கயவாளிதனதிருக்கு கம்பம் ராமகிருஷ்ணன் பலி ஆகியுள்ளார். அடேய் ராமகிருஷ்ண எங்கள் ஊர் பெயரை உபயோகிக்காதே.


பதிவு செய்தவர்: பாட்சா ajman பதிவு செய்தது: 26 Mar 2009 10:45 pm உணர்வில் தமிழன் ramadasai என்ன செய்வது


பதிவு செய்தவர்: உணர்வில் தமிழன் பதிவு செய்தது: 26 Mar 2009 04:10 pm இது போன்ற கட்சி தாவும் MLA களின் பதவி மட்டும் அல்ல குடும்ப சொத்து களையும் ஜப்தி பண்ண வேண்டும், இவனுக ஒரு கட்சி கூட்டணி ல நின்னு மக்களை ஏமாத்தி ஜெய் பானுக , அப்புறம் காசு யாரு கொடுகுரனுகளோ அவனுக கிட்ட "எல்லாத்தையும்" அடமானம் வச்சுட்டு silent - ஆ இருப்பானுக !!! ஒட்டு போட்ட நம்ம என்ன இளிச்ச வாயனுகளா ??? இந்த ஆளை கம்பம் ல "கம்பத்துல" கட்டி வச்சு காரி துபுனாலும் புத்தி வராது !!!

சோர்ஸ் :
http://thatstamil.oneindia.in/news/2009/03/26/tn-mdmk-mla-kambum-ramakrishnan-joins-dmk.html

Wednesday, March 18, 2009

அதிமுக-மதிமுக தேர்தல் குழுவினர் 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக இன்ற அதிமுக-மதிமுக தேர்தல் குழுவினர் 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந் நிலையில் தொகுதிப் பங்கீடு, மு.கண்ணப்பன் விலகல் ஆகியவை குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆலோசனை நடத்தினார்.

கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இக் கூட்டத்தில் நிர்வாகிகள் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, துரைபாலகிருஷ்ணன், எம்.பிக்கள் சிப்பிபாறை ரவிச்சந்திரன், கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கலைப்புலி தாணு, மலர்மன்னன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவிடம் கேட்க வேண்டிய தொகுதிகளின் பட்டியல் குறித்தும் பேசப்பட்டது.

Tuesday, March 17, 2009

கௌரவமாய் இருந்த கண்ணப்பரின் கதி இன்று !

மதிமுக உள் கட்டமைப்பு அரசியலில் அதன் அடுத்த கட்ட தலைவர் மற்றும் தொண்டர்களுக்கு எப்பொழுதும் பூரண சுதந்திரம் கொடுக்கும் இயக்கம் . மக்கள் பணிமட்டுமே அரசியலின் நோக்கம் என்றிருப்பவர்கள் மட்டுமே இப்போது இயக்கத்தில் இருக்கிறார்கள் அல்லது இருப்பார்கள். எதோ தேவைக்காக வைகோ விடம் வந்தவர்கள் அந்த தேவை முடிந்தவுடன் பிரிதொரு இடம் செல்வது இயல்புதானே.


ஆதரவாளர்கள் 'ஜகா'-ஆள் பிடிக்கும் கண்ணப்பன்!
கோவை: மதிமுகவிலிருந்து வேகமாக விலகி, திமுகவில் சேரப் போவதாக அறிவித்து விட்ட கண்ணப்பன், தனது ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், திமுகவில் சேர மறுத்து விட்டதால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். இதையடுத்து தனது குடும்பத்தோடு ஆதரவாளர்களை வீடு தேடிச் சென்று பல்வேறு உறுதிமொழிகளைக் கூறி திமுகவில் சேர்ந்து விடுமாறு கெஞ்சி வருகிறாராம்.

மதிமுக அவைத் தலைவராக இருந்த கண்ணப்பன் சமீபத்தில் கட்சியிலிருந்தும், எம்எல்ஏ. பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார்.சூட்டோடு சூடாக அவரை அமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சி அருகே உள்ள கண்ணப்பனின் பண்ணை வீட்டுக்குச் சென்று சந்தித்து திமுகவில் இணைய அழைப்பு விடுத்தார்.அதை ஏற்ற கண்ணப்பன், வருகிற 23ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைகிறார்.தன்னுடன் ஏராளமான பேர் இணையப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் அப்படி இணையப் போவதாக கூறிய பலரும் இப்போது முடியாது என்று மறுத்து விட்டனராம். இதனால் கண்ணப்பன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆலாம்பாளையம் பண்ணை வீட்டில் வைத்து தனது ஆதரவாளர்கள், மதிமுக முக்கியப் பிரமுகர்களுடன் கண்ணப்பன் ஆலோசனை நடத்தியபோது அத்தனை பேரும் திமுகவில் இணைந்து விடலாம் என்றுதான் கூறியிரந்தனர்.ஆனால் தற்போது அவர்களில் பலரும் திமுகவில் இணைய மறுத்து வருகின்றனராம்.

இதனால் கண்ணப்பன் தனது ஆதரவாளர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று பேசி திமுகவில் இணையுமாறு கேட்டு வருகிறாராம். அவர் மட்டுமன்றி, கண்ணப்பனின் மனைவி, மகள், மகன், மருமகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திமுகவில் இருந்து மதிமுகவில் சேர்ந்தபோது 17 ஒன்றிய செயலாளர்களுடன் வந்தார். அதில் பாதி பேரையாவது திருப்பி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்போடு உள்ளார். ஒன்றிய செயலாளர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களும் தரப்படுகின்றன.கண்ணப்பன் சென்னை சென்று திமுகவில் சேரும் நிகழ்ச்சிக்காக ஆட்களைத் திரட்டும் வேலையில் கோவை மாவட்ட திமுகவினரும் இறங்கியுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட வாகனங்களை திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனராம்.

இதற்கிடையே போட்டி மதிமுக நடத்தி வந்த எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் இன்று திமுகவில் இணைகின்றனர். இவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு தான் ஆள் பிடித்துக் கொண்டு திமுகவுக்குத் திரும்புகின்றனர்.

source :
http://thatstamil.oneindia.in/news/2009/03/17/tn-kannappan-supporters-not-ready-to-join-dmk.html#cmntTop

Monday, March 16, 2009

தேசிய இறையாண்மை என்றால் என்ன உண்மையிலேயே விடை தெரியாத கேள்வி எங்களுக்கு ?

தேசிய இறையாண்மை என்றால் என்ன உண்மையிலேயே விடை தெரியாத கேள்வி எங்களுக்கு ?

பதிலை எழுதுங்கள் நண்பர்களே

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ?

 1. ஈழத்தில் ஒரு தமிழனும் உயிரோடு இருக்க முடியாது . தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவார்கள்.இவை எல்லாம் முடிந்த பின் இலங்கை இந்தியாவின் முதல் எதிரி நாடும் ஆகும்.தமிழகம் கொந்தளிப்பில் தள்ளப்படும் கிட்டத்தட்ட மனநோயாளிகளை போல தமிழக இளைஞர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள்.
 2. இந்தியா இலங்கைக்கு ஒளிந்து மறைந்து என்றில்லாமல் நேரடியாகவே படைகளை அனுப்பி அங்கு தமிழர் கொலைகளை நடத்தும்.

 3. தமிழ்நாட்டு தமிழர்களின் சுயமரியாதை கேவலப்படுத்தப்படும்.

 4. அமெரிக்கா டாலரின் விலை ரூபாய் அறுபதை தொடும்

 5. இந்தியாவில் அரிசி விலை கிலோ அறுபதை தொடும்

 6. தமிழ்நாட்டில் தங்கபாலு வசந்தகுமார் போல மேலும் ஐந்து காங்கிரஸ் காரர்கள் டிவி தொடங்குவார்கள்.

 7. தங்கம் பவுன் 20000 ரூபாய் ஆகும்.

 8. விவசாயிகள் பயனடையாமல் பதுக்கல் வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பர்கள் அதன் பலன் விவசாயம் செய்ய ஆள் இருக்கமாட்டர்கள்.

 9. விலைவாசி உயர்வினால் பஞ்சம் வரும். கொலை கொள்ளை நாடு முழுவதும் அதிகரிக்கும்.

 10. பாதுகாப்பு கொள்கைகள் இல்லாததால் வாரம் ஒரு இடத்திலாவது குண்டு வெடிக்கும் குறைத்து ஆயிரம் பேர்கள் இறப்பார்கள்

 11. சீனா அருநாச்சலப்பிதேசதிற்காய் இந்திய மீது போர் தொடுக்கும் பாகிஸ்தானில் இருக்கபோகும் ராணுவ அரசு மீண்டும் ஒருமுறை கார்கில் போன்று போர் தோடுக்கும்

 12. இந்தியா முழுவதும் மின்சாரப்பற்றகுறை . தினமும் 8 மணி நேரம் மட்டும் கிடைக்கும்.

 13. பாகிஸ்தானில் பாதி அரசாங்கமாக இருக்கும் தலிபான்கள் காஷ்மீர் மீது படைஎடுப்பர்கள்.

 14. அமெரிக்காவின் அடிவருடி கொள்கை இருக்கும் . அமெரிக்காஇல் எற்பட்டதைபோலவே இங்கும் எல்லா வங்கிகளும் திவால் ஆகும்.

 15. இவை யாவின் பலனை வேலையில்லா திண்டாட்டம் பெருகும் .

 16. அரசியல்வாதிகளை தவிர யாரிடமும் பணபுலக்கம் இருக்காது.

 17. கருணாநிதி அப்பொழுதும் கவிதை எழுதுவார்.தமிழர்களுக்காக அவர் பால் குடித்த நாள் முதல் செய்தவைகளை புள்ளி விவரங்களுடான் பட்டியல் போட்டு காட்டுவார்.

 18. அழகிரிக்கு நல்ல துறை இல்லை என்று மூன்று முறை மிரட்டியிருப்பார்.

 19. கனிமொழிக்கு வாய்த்த நல்ல பணம் பண்ணும் துறையால் தயாநிதிமாறன் மீண்டும் ஒருமுறை திமுகவை விட்டு விலகி இருப்பார்.

 20. கனிமொழி தனியாய் ஒரு டிவி தொடங்குவார்

 21. பழைய திமுக காரர்கள் தா கிருஷ்ணனை போல் கதியாவார்கள் .
 22. பெட்ரோல் விலை லிட்டருக்கு என்பது ரூபாய் ஆகும்.
 23. உதயநிதி திமுக வின் பொருளாளர் ஆவார்.
 24. ரெண்டு மூன்று முறை நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் பாராளுமன்றஉருபினர்களுக்கு குறைந்தது பத்து கோடி ரூபாய் என்று குதிரை பேரம்நடக்கும்.

 25. கிலோ ஒரு ரூபாய் அரிசி திட்டம் நிறுத்தப்படும்.

 26. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் எதிரிக்கு எதிரி போல மாறிநிற்கும். கூட்டாச்சி தத்துவம் இருக்காது. காங்கிரஸ் எதைபற்றியும்கவலைப்படாது. ஏனென்றால் அதன் தலைவர்களின் வேலை எப்படிகொள்ளை அடித்து பணம் பார்ப்பது என்பதுதான்.

Wednesday, March 11, 2009

கண்ணப்பன் கட்சியிலிருந்து விலகினார்

கண்ணப்பன் கட்சியிலிருந்து விலகினார் :

இதுவரை எம்மிடம் இருந்ததற்கு நன்றி . கண்ணப்பன் எங்கிருந்தாலும் வாழ்க. நாங்கள் மனதார ஏற்றுகொண்ட தலைவரை, வைகோ வை எப்பொழுதும் ஆதரிக்கிறோம்.

இதற்கு பின்னூட்டம் :
Source :
http://thatstamil.oneindia.in/news/2009/03/11/tn-m-kannappan-to-rejoin-dmk-soon.html#cmntTop

பதிவு செய்தவர்: கண்ணன் பதிவு செய்தது: 11 Mar 2009 05:56 pm

வைகோ ஒரு நல்ல அரசியல்வாதி கண்ணப்பன் விலகினாலும் மதிமுக விற்கு எந்த சறுக்கலும் இல்லை மாறாக கண்ணப்பன் அவர்கள் பதவிக்காக MP பதவிக்காக திமுக செல்ல நினைக்கிறார் திமுக மக்கள் பணிக்கான இடம் இல்லை அது பணம் சம்பாதிக்க விரும்புவர்களின் கூடாரம் பணத்தை செலவழித்து பணத்தை சம்பாதிப்பார்கள் கண்ணப்பரே மரியாதை இழந்து விடாதீர்கள்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர--------------------------------------------------------------------------------


பதிவு செய்தவர்: ராஜாராம் பதிவு செய்தது: 11 Mar 2009 05:21 pm

முதியோர் இல்லம் செல்கிறார் கண்ணப்பன். வாழ்க...!!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர--------------------------------------------------------------------------------


பதிவு செய்தவர்: Ulagan பதிவு செய்தது: 11 Mar 2009 04:49 pm

இவன் உண்மையா வேசை மவன் தான்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர


--------------------------------------------------------------------------------


பதிவு செய்தவர்: anand பதிவு செய்தது: 11 Mar 2009 04:43 pm

kannappan is a cunning bastured
பதில் | அவதூறு குறித்து தகவல் தர


--------------------------------------------------------------------------------


பதிவு செய்தவர்: உண்மை விளம்பி பதிவு செய்தது: 11 Mar 2009 04:40 pm

கண்ணப்பன் எல்.ஜி செஞ்சி போன்றோர்களெல்லாம் பைசா பிரயோசனம் இல்லாதவர்கள். அம்மா சொன்னமாதிரி இவர்கள் உதிர்ந்த மயிர்கள். இவர்கள் இருந்தால் என்ன போனால் என்ன? இந்த மாதிரி அரசியல் வியாபாரிகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும்.