Sunday, April 26, 2009

இன்னும் இரண்டு நாளில் இலங்கை போரை நிறுத்திவிடும் -சிதம்பரமும் இலங்கைஅமைச்சரும் ஒரே குரலில் அறிக்கை.

இன்னும் இரண்டு நாளில் இலங்கை போரை நிறுத்திவிடும் -சிதம்பரமும் இலங்கைஅமைச்சரும் ஒரே குரலில் அறிக்கை.

இத்தனை நாலா போரை இந்தியாதான்அல்லது காங்கிரஸ் அரசுதான் நடத்தியது என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம்தேவை இல்லை.

------------------------

இலங்கைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

து பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்திய வெளியுறவு செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு அகதிகளின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து இவர் விரிவாக கலந்துரையாடியதுடன் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது தொடர்பான திட்டமொன்றை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாகவும் வீரதுங்க கூறியுள்ளார்.

யுத்த நிறுத்தம் பற்றியோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலோ இந்திய அதிகாரிகள் எதனையும் குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகங்களில் போர் நிறுத்தம் குறித்து பிரசூரிக்கப்பட்டுள்ள செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

------------------------------------------------------------------------------------------------------

போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ அது முடிவுக்கு வந்து விடும்.

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடியும் தருவாயை எட்டி விட்டது. எனவே போர் நிறுத்தம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை கூறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் பலித கொகனா சிஎன்என் ஐபிஎன் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், போர் களத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் இலங்கை அரசால் முடியும். இதில் 3வது நாட்டின் தலையீட்டை நாங்கள் ஏற்க மாட்டோம்.

போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ அது முடிவுக்கு வந்து விடும். அதற்கான குறிப்பிட்ட கால இலக்கை தெரிவிக்க முடியாது. ஆனால் அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்படும் வரை எங்களது லட்சியத்திலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம்.

விடுதலைப் புலிகள்தான் நெருக்கடியை உருவாக்கினர். எனவே இலங்கை பாதுகாப்புப் படையினர் தற்போது செய்து வரும் நடவடிக்கைகளை யாரும் குறை கூறக் கூடாது.

ராணுவம் புலிகளின் அரண்களைத் தகர்த்து 1 லட்சத்து 7 ஆயிரம் பேரை மீட்டுள்ளது. தற்போது தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அவர்களையும் ராணுவம் விரைவில் மீட்டு விடும் என்றார் அவர்.

---------------------------------------------------------

இன்னும் 2 நாளில் நல்ல முடிவை சொல்லும் இலங்கை - ப.சிதம்பரம்

சிவகங்கை: இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும். இலங்கை நல்ல செய்தியைத் தரும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த் பேட்டியில்,

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் குறை கூறுகின்றனர். இதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. அனைவருக்குமே தெரியும், இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களை பாதுகாப்பதற்கும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இதை வைத்து சில கட்சிகள் அரசியல் ஆதாயம் அடைய நினைத்தால் அது நடக்காது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள், திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு விதமாக இந்த பிரச்சினையை அணுகுகிறது

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. இன்னும் 24 அல்லது 48 மணி நேரத்துக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

பிரபாகரனுக்கு கெட்ட நிலைமை வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்ன செய்துகொள்வார் என்று எனக்கு தெரியாது.

மேலும் இலங்கை ஒரு தனி நாடு, எனவே நாம் அதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் 48 மணி நேரத்தில் நல்லவை நடக்கும் என்று நம்புவோம். அங்கு ஏற்படும் நிகழ்வுகளால் தமிழகத்திற்கு அகதிகள் அதிக அளவில் வரவில்லை. அவர்கள் அந்த நாட்டிலேயே உள்நாட்டு அகதிகளாக உள்ளனர்.

குண்டு வீசும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து கொடுக்கும்.

பிரபாகரனுக்கு இந்தியா அடைக்கலம் தருவது குறித்து நான் கருத்து கூறமுடியாது. ஏன் என்றால் இங்கு சட்டங்கள் உள்ளது. மேலும் இலங்கை பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகளுக்கு கருத்து வேறுபாடு கிடையாது என்றார் சிதம்பரம்.


No comments:

Post a Comment