Monday, April 27, 2009

இந்தியாவிற்கு தேவையா இந்த அவமானம் ?

இந்தியாவிற்கு தேவையா இந்த அவமானம் ?
  • போரை நடத்துவது இந்தியா அல்லது சோனியா தலைமையிலான கூட்டணிஅரசு என்பது மிகத்தெளிவு. இனியும் உலகத்தையும் தமிழர்களையும் ஏமாற்றமுடியாது.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் போரை நிறுத்தஎச்சரிக்கை விட்டு விட்டது.
  • அந்த நாடுகளை மீறி போகும் தைரியம் சுண்டைக்காய் நாடானஇலங்கைக்கு இல்லை.
  • இங்கே போரை நடத்துவதும் தமிழர் துரோகம் செய்வதும் சோனியா வின்கூட்டணி ஆட்சிதான்.
  • இந்த போரினாலே உலக அரங்கில் இந்தியாவில் அசிங்கப்பட வைக்கபோகிறார்கள் காங்கிரஸ் நாய்களும் அதன் கூட்டணி கழுதைகளும்.
  • ஏன் இவர்களுக்கு இந்த ரத்த வெறி ?
இனி செய்தியை பாருங்கள் :

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்: கண்ணாடிகள் உடைந்து சேதம்; இரண்டு பேர் கைது


இன்று (திங்கள்) காலை 6 மணிமுதல், லண்டன் இந்தியத் தூதரகம் முன்னால் கூடிய தமிழர்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கி, பெருங்கற்கள், குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள், ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பத்தில் குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே பங்கு கொண்டிருந்த போதிலும், அனைவரின் முகங்களும் பெரும் ஆத்திரத்தில் காணப்பட்டது.

பிரதான வாசல் பூட்டப் பட்டிருந்ததால், அமைதியாக காத்திருந்த மக்கள், காலை 8:30 மணியளவில் தூதரக பணியாளர்களால் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் கோசத்துடனும், ஆக்ரோசத்துடனும், ஒரே நேரத்தில் உள்நுளைய முற்பட்டனர். ஆனால் பொலிசாரின் கடும் எதிர்ப்பினால் அது தடுக்கப்பட்டது.

5 அல்லது 6 பேர் உள்நுளைந்த நிலையில் கதவு முழுவதுமாக மூடப்பட்டு மேலதிக பொலிஸ் குவிக்கப் பட்டது. அதேநேரம் கோபம் கொண்ட ஒருவரால், சுத்தியல் மூலமாக வெளிப்புறக் கண்ணாடிகள் நொருக்கப் பட, காவல்துறையினர் பாய்ந்து சென்று அவரை கைது செய்ய முயன்றபோதும், அவர்களின் இரும்புப்பிடியிலிருந்து மக்களால் அவர் கூட்டத்துக்குள் இழுக்கப்பட்டதால் கைது தடுக்கப்பட்டது. உள்நுளைந்தவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நேரம் செல்லச்செல்ல தமிழர்களின் வருகை அதிகமானதால், அவசர அவசரமாக் தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. எனினும் பெரும் எழுச்சியுடனும், கோசத்துடனும் தொடர்ந்த போராட்டம் முட்டை வீச்சிலும் இறங்கியது. கண்ணாடி ஜன்னல்களை நோக்கி வீசப்பட்ட முட்டைகளில் சில பொலிசார் மீதும் தவறுதலாக வீழ்ந்தது. எனினும் அதனால் பெரும் வாக்குவாதம் எதுவும் எழவில்லை.

இதுவரை நடந்த போராட்டங்களை விட, இன்று நடந்த இந்தப் போராட்டத்தில் மக்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசைவிட இந்திய அரசில் அவர்கள் பெருங்கோபம் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கி, பெருங்கற்கள், குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள், ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.

அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் அவர்களை விடுவிக்க மக்கள் எவ்வளவோ முயன்றனர். விலங்கிடப் பட்ட நிலையில் அவர்களை கொண்டு செல்ல விடாது பொலிசாரை சூழ்ந்து கொண்டனர். மக்கள் தொகை குறைவாக இருந்ததால் முடியவில்லை. பின் வாகனத்தில் ஏற்றிய பின்னர் கூட வீதியை மறித்து உட்கார்ந்தார்கள். ஆனால் காவல்துறையினர் இலகுவாக தூக்கி வீசி விட்டார்கள். உணர்ச்சி பூர்வமாக மாலை 4:30 இப்போராட்டம் இடம்பெற்றது.

தூதரகத்தின் பெரும்பாலான கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டு விட்டன. மக்களின் இந்தக் கொந்தளிப்புடன் தூதரகம் அவர்களை உள்வாங்கி இருந்திருந்தால் பெரும் சேதம் கண்டிருக்கும். எப்படியோ இது இந்திய அரசுக்கு மாபெரும் அவமானம் என்பதில் சந்தேகமில்லை. அதன் முகத்திரையை முழுவதுமாக கிழித்தாயிற்று. இனி சர்வதேசத்தின் நகர்வுகள் எப்படியிருக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் போராட்டங்கள் இன்னும் விரியும்.

No comments:

Post a Comment