Saturday, June 27, 2009

சீரழியும் சட்ட ஒழுங்கு.

சீரழியும் சட்ட ஒழுங்கு.
தமிழகத்தில் சட்டம் நன்றாகத்தான் இருக்கிறது சமூகத்தில் ஒழுங்கு அறவே இல்லை.
அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை போகக்கூடிய அபாயகரமான் விளைவுகள் நடக்கின்றன.
ஒப்புக்கு பகத்து மாநிலத்தை விட சட்டம் ஒழுங்கு நன்றாய் உள்ளது என்று சொல்லுவது தமிழனை முட்டாளாக்கும் செயல் .
இங்குள்ள அரசாங்கம் அதன் வேலையை செய்ய வேண்டும் . பக்கத்து மாநிலத்தில் நடந்ததை அல்லது அதோடு ஒப்பீடு செய்து சமாதான வார்த்தைகளை சொல்லவா தமிழ்நாட்டில் அரசாங்கம் உள்ளது.?
செய்திகளை இங்கே படியுங்கள் :
செய்தி மூன்று :
கூலிப்படை, கட்டப்பஞ்சாயத்து அட்டகாசத்தை ஒழித்தக் கட்ட கருணாநிதி உத்தரவு
சென்னை: கூலிப்படையினர், கட்டப் பஞ்சாயத்துக் கும்பல்களின் அட்டகாசங்களை ஒழித்துக் கட்டுமாறு காவல்துறையினருக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
இதில் டிஜிபி ஜெயின் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி,, உள்துறை செயலாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே முதல்வர் பேசுகையில், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது. ஒரு சில இடங்களில் குற்றங்கள் நடக்கிறது.
அதன்மீது தீர விசாரணை நடத்தி உறுதியான நடவடிக்கை எடுங்கள்.கூலிப்படையினரின் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் மீது எந்தவித பாகுபாடுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுங்கள் என்றார்.



No comments:

Post a Comment