Saturday, July 18, 2009

என்னதான் செய்ய காத்திருக்கிறது இந்தியா?

என்னதான் செய்ய காத்திருக்கிறது இந்தியா?

பெரும் புரியாத புதிராக ஆனால் தமிழர் பிணம் மட்டுமே கீழ் விழும் நிலையாக ஈழ போரும் அதன் செய்திகளும் உள்ளன. தமிழர்கள் அனைவரும் ஒன்று சேராதவரை , துரோகிகள் ஒழியாதவரை ஈழ தமிழனை காத்து விடலாம் என்ற நம்பிக்கை என்பது கனவே.


இந்திய இராணுவத்தினர் 5000 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்?


வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 5 ஆயிரம் இந்திய இராணுவம் கொழும்பு வந்தடைந்திருப்பதாக தமிழகத்தில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக கண்ணி வெடிகளை அகற்றவென இந்திய இராணுவத்தினர் 500பேர் இலங்கை வரவுள்ளனர் என்று பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக அண்மையில் தெரிவித்தார்.

ஆனால் தற்போது 5 ஆயிரம் வீரர்கள் வரை வந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குச் சென்று பணியைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த இதழில் மேலும் கூறியிருப்பதாவது:

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசு உடனடியாக நிறுத்திவிட்டது. இனித் தங்களுக்கு ஆயுதங்கள் தேவையில்லை என்று சிறீலங்காஅரசு அறிவித்துள்ள போதிலும், இந்திய அரசின் கண்டிப்புத்தான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 5 ஆயிரம் இந்திய வீரர்கள் இலங்கை சென்றுள்ளனர். ஐந்நூறு வீரர்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ராஜபக்சவின் சகோதரர்கள் டில்லிக்குச் சென்றிருந்தபோது, நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அவர்களது கோரிக்கையை ஏற்று 5 ஆயிரம் வீரர்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.

தமிழர்களை விரைவில் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்றும் இந்தியா கண்டிப்புடன் கூறியுள்ளது என அந்த இதழில் தெவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்திலுள்ள கொச்சின் துறைகம் வழியாகவே இந்திய வீரர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகவும், அவர்களுடன் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் நவீன கருவிகளும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்திய அரசு இதனை உறுதி செய்யவில்லை.

No comments:

Post a Comment