Sunday, July 19, 2009

இன்னும் எத்தனை துரோக நாடகங்களை காண நாம் விதிபட்டோமோ !

இலங்கை விவகாரம்... புதிய கோணத்தில் தி.மு.க

நமது செய்தி :

ஆமாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போர் முடியபோகிறது என்று, ஒரு உண்ணாவிரதம் இருந்து முடித்தார்களே அது மாதிரி ஏதேனும் பெரிய போராட்டம் பண்ணி விடாதீர்கள் . தமிழகம் கொந்தளித்து விட போகிறது.

அது எப்படி இடை தேர்தல் அறிவித்ததும் இப்படி பட்ட யோசனைகள் திமுகவிற்கு தோன்றுகிறது.

கருணா வும் கருணாநிதியும் ஈழ விசயத்தில் ஒரே பார்வை கொண்டவர்கள். காங்கிரஸ் அரசில் இவர்கள் உள்ளவரை காங்கிரஸ் கட்சியை பகைக்க விரும்பாதவர்களை நம்ப வைக்க ஜூனியர் விகடன் முயற்சிக்கிறது.

இன்னும் எத்தனை துரோக நாடகங்களை காண நாம் விதிபட்டோமோ !


இனி செய்தி :
''பனிமொழியாகவே பலரும் பார்த்துப் பழக்கப்பட்ட கனிமொழி, திடீரென்று எரிமலையாகி இருக்கிறார். அவருடைய வேகம் இப்போது அப்பாவுக்கும் தொற்றிக்கொள்ள... பல நாளாக நாம் பார்த்திராத ஆவேச கலைஞரை சீக்கிரமே சந்திக்கப் போகிறோம். இலங்கை விஷயத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு புதுக் கோணத்தில் பரபரக்கப் போகிறதாம்..!'' என்று கழுகார் சொல்ல,

''நீர் கனிமொழி நியூஸ் சொல்லியே ரொம்ப நாள் ஆகிறது...'' என்றோம்.

''இலங்கையில் முகாம் என்ற பெயரில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து நம்பகமான சில நபர்கள் மூலம் தகவல் திரட்டினாராம் கனிமொழி. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உயிருக்கும் அஞ்சாமல் அந்த முகாம்களுக்குள்ளேயே கொடிபிடிக்கவே ஆட்கள் தயாராகி விட்டார்கள் என்பதும், அந்த அளவுக்கு

சிங்களக் கொடுமைகளால் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்பதும் அவருக்கு வந்த தகவலாம். அப்பாவிடம்கூட ஒரு வார்த்தை கேட்காமல் பளிச்சென்று அவர் போய் நின்றது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா முன்பு!''

''என்ன பேசினாராம்?''

''பேசினாரா... சீறினாரா? 'இலங்கையில் தமிழர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் வந்துகொண்டே இருக்கிறது. இப்போது அங்கே விடுதலைப் போராட்டத்தை நடத்த யாரும் இல்லை என்பது நீங்களும் அறிந்ததுதான். எஞ்சியிருக்கும் தமிழர் கள், முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக வரும் செய்திகள், நெஞ்சை அடைக்கிறது. குவாண்டனாமா சிறையில் கைதிகள் கொடுமைப்படுத்தப்படுவதைக் காட்டி லும் மோசமாக இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படுவதாக அறிகிறேன். இலங்கை யில், தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப் படுவது சம்பந்தமாக 13-வது சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து, தமிழர்கள் உரிமையோடும் பாதுகாப்போடும் வாழ வழிவகை செய்ய வேண்டும். இந்திய அரசும் அதற்கான முயற்சியை எடுக்க வேண் டும்... அதற்கு முன்பாக, இலங்கையின் நிலவரம் குறித்து அறிவதற்காக நான் அங்கே போக வேண்டியிருக்கிறது. தமிழ் அமைப்புகளெல்லாம் என்னை அங்கு வந்து பார்க்கச் சொல்லி அழைப்பு விடுத்த வண்ணம் இருக்கின்றன. நான் எம்.பி. என்பதால், முறைப்படி அதற்கு அரசு அனுமதி தேவை. அதற்காகத்தான் உங்கள் முன்பாக வந்து நிற்கிறேன்...' என்று கனிமொழி சொல்ல... எஸ்.எம்.கிருஷ்ணா வுக்கு ஏக தர்மசங்கடம்!''

''அனுபவஸ்தர்! விஷயத்தை நாசூக்காகக் கையாளுவாரே?!''

''பின்னே? போட்டார் போனை கருணாநிதிக்கே..! நிலைமையைச் சொன்னார். அடுத்து, கருணாநிதியும் கனிமொழியிடம் பேசினார். 'என்னம்மா விஷயம்?' என்று இவர் கேட்க... கனிமொழி உயர்ந்த குரலில், அதே விஷயத்தைக் கொட்ட... சீக்கிரமே கனிமொழி எம்.பி. ஒரு குழுவோடு இலங்கை நிலவரத்தை நேரில் பார்க்க விசிட் அடிக்க ஏற்பாடாகிறது. அதோடு, 'இலங்கையில் தமிழர்கள் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை' என்று கருணா நிதியும் அழுத்தமாகக் கேட்பார் என்கிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராக தி.மு.க-வின் போராட்டம், ஆர்ப்பாட்டமெல்லாம்கூட எதிர்பார்க்கலாமாம். இந்தத் தடவை அரசியல் நோக்கின்றி எல்லாமே படுசீரியஸாக இருக்குமாம்!''


No comments:

Post a Comment