Friday, August 7, 2009

பஸ்களில் விளம்பரங்களை அகற்ற ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


பஸ்களில் விளம்பரங்களை அகற்ற ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ள விளம்பரங்களை அகற்றுவது தொடர்பான காலக்கெடுவை நிர்ணயித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை நுகர்வோர் தன்னார்வ அமைப்பு சார்பில் கதிர்மதியோன் என்பவர் மனு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் படி பஸ்களின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளிலோ, பக்கவாட்டிலோ விளம்பரம் செய்யக் கூடாது. ஆனால், இந்த விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் பஸ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, சாலையைப் பயன்படுத்துபவர்களின் கவனம் திசைமாறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்ட விரோதமாக செய்யப்பட்டுள்ள இந்த விளம்பரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

No comments:

Post a Comment