Monday, April 6, 2009

வரியை ஏய்க்க இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் 1.5 ட்ரில்லியன் டாலர்!

முன்னூட்டம்:-

இதில் முன்னாள் இனால் காங்கிரஸ் காரனின் பணம் மட்டும் தொண்ணூறு சதவீதம் இருக்கும்.

செய்தி இங்கே :-

வரியை ஏய்க்க இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் 1.5 ட்ரில்லியன் டாலர்!


டெல்லி: உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் அளவுக்கு 1.5 ட்ரில்லியன் டாலர் அளவு பெரும் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் சமீபத்திய தேர்தல் அறிக்கையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் அளவு 1.5 டிரில்லியன் டாலர்கள் என கூறியிருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தப் பணம் முழுவதையும் மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவந்து, பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பேன் என பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்கே அத்வானி கூறியிருந்தார்.

இப்போது கிட்டத்தட்ட அதே விஷயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியர்கள் சிலர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு 1.4 ட்ரில்லியன் டாலர்கள் என்கிறது சிபிஎம்.

ஆனால் சமீபத்தில் கூடிய ஜி -20 மாநாட்டின் முடிவில்,உலகப் பொருளாதார வீழ்ச்சியைச் சீர்ப்படுத்த 1.1 ட்ரில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்குவதாக உலகத் தலைவர்கள் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்தியர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு, உலப் பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியைவிட 0.4 ட்ரில்லியன் டாலர் அதிகம்!!

உலகம் முழுக்க உள்ள கறுப்புப் பணத்தின் அளவு 11.5 ட்ரில்லியன் டாலர்கள் எனக் கணக்கிட்டுள்ளது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD). இதைக் குறிப்பிட்டுப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, ஸ்விஸ் வங்கியின் ரகசியக் கணக்கு ஆவணங்களை வெளிக் கொணருமாறு அமெரிக்கா உத்தரவிடட்டும். இந்தியாவும் அதேபோல செய்ய வேண்டும். காரணம் இந்தியர்களின் கறுப்புப் பணம் மட்டுமே உலக கறுப்புப் பணத்தில் 10 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது, என்றார்.

இதில் வேடிக்கை... இந்த கறுப்புப் பண விவகாரம் பற்றி காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கை, மேடை முழக்கம் எதிலுமே மூச்சு காட்டாததுதான்!

Sunday, April 5, 2009

பத்திரிக்கை வியாபாரிகள் - கேள்வி பதில்

தொண்டர்களின் கேள்வி பதில்


தினமலர், தட்ஸ்தமிழ் போன்ற பத்திரிக்கைகள் எப்பொழுதும் மதிமுகவை அவமானப்படுத்து விதத்தில் எழுதுகின்றனவே ?

அவர்கள் வியாபாரிகள் வியாபாரக்கனக்கு எதற்காகவாவது அப்படி எழுதத்தான்செய்வார்கள். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளக்கூடாது.

ஏன் தொகுதிப்பங்கீடு முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது ?


பொதுக்குழு கூடும் அன்று அனைத்திற்கும் விடை கிடைக்கும். கொஞ்சம்பொறுமையாக இருக்கத்தான் வேண்டும்.

நக்கீரனில் மதிமுகவின் வாக்கு வங்கி நன்கு சதவீதம் அல்லது இரண்டு சதவீதம் என்று கூறுகிறார்களே , கூட்டணி பற்றி இல்லாமல் மதிமுகவிற்கு தனிப்பாட்ட வாக்கு வங்கி எப்படிஉள்ளது?

பத்து தொகுதிகளில் இரண்டு லக்ஷம் வாக்குகள் உள்ளது. இருபதுதொகுதிகளில் ஒன்றரை லக்ச்த்திற்கு குறைவில்லா வாக்குகள் உள்ளது. மீதியுள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரு லக்ஷத்திற்கும் குறைவில்லாவாக்குகள் உள்ளது.


இந்த தேர்தலில் வாக்கு- வெற்றி விகிதாசாரம் எப்படி இருக்கும் ?

வெற்றி தோல்வி என்பதை சில ஆயிரம் வாக்குகளே நிர்ணயிக்கும் சூழ்நிலைஉள்ளது. இதன்படிபார்த்தல் மதிமுக உள்ள அணி நாற்பதிலும் வெற்றி பெரும் இல்லை என்றால் அந்த அணிநாற்பதிலும் தோல்வி பெரும்.


தொகுத்து ,அன்புடன்
தோழர்

தினமும் தொடரும் படுகொலைகள் - காங்கிரஸ் நாய்களை விரட்டி அடிப்போம்.

இந்திய அரசின் உதவியோடு எதோ திட்டத்தோடுதான், எதோ திட்டமென்ன தமிழர்களை கூண்டோடு அழித்துவிட சிங்கள அரசு எல்லா வேலைகளையும் செய்கிறது. இன்னும் சில ஆயிரம் அல்லது தமிழர் முழுவதையும் அழித்து விட்டு போர் நிறுத்தம் (அதுவும் தமிழகத்தில் தேர்தலை மனிதில் கொண்டு, காங்கிரஸ் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க)செய்யலாம்.

தமிழா, தோழா, காங்கிரஸ் நாய்களை விரட்டி அடிப்போம்.

காங்கிரஸ் நாய் ஒன்று ஜெயித்தாலும் அது தோழா நம் சகோதரனை கொன்ற இந்த நாயின் செயலுக்கு அங்கீகாரம் ஆகிவிடும்.

உன் காலைப பற்றி கையைதொட்டு பிச்சை கேட்கிறோம் என்றே கொள். காங்கிரஸ் நாய்க்கு மட்டும் ஓட்டளிக்காதே.


அன்புடன்
தோழர்



வன்னியில் படையினர் எறிகணை, உலங்குவானூர்தி தாக்குதல்: இன்று (ஞாயிறு) 92 பொதுமக்கள் படுகொலை; 153 பேர் படுகாயம்


வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அருணாசலம் ரவி (வயது 37)

அழகு மீனா (வயது 49)

ஆறுமுகம் சசீலா (வயது 18)

லோகநாதன் நிசாந்தினி (வயது 09)

வைரமுத்து செல்வரத்தினம் (வயது 50)

லௌசீகன் லேகா (வயது 23)

விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)

பெரியாம்பிள்ளை சோபமலர் (வயது 67)

ரவிசங்கர் லவநிசா (வயது 02)

சத்தியானந்தன் சசிகலா (வயது 29)

வடிவேலு சந்திரலிங்கராசா (வயது 51)

ஐங்கரகுமார் நிதுசன வான்மதி (வயது 09)

ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை (வயது 50)

சின்னமணி இன்பநாதன் (வயது 47)

கந்தசாமி தியாகராசா (வயது 47)

தியாகராசா சங்கீதா (வயது 13)

வீரசிங்கம் தர்மலிங்கம் (வயது 56)

தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 52)

ஜோசப் வேணுசன் (வயது 05)

தில்லைநாதன் சுமதி (வயது 38)

லோகநாதன் ஹேமா (வயது 32)

கலைவாணி (வயது 27)

லோகநாதன் லோஜிதா (வயது 09)

சிவதீபன் புஸ்பராணி (வயது 04)

சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)

புலேந்திரன் விக்கினேஸ்வரி (வயது 42)

சி.கலைவாணன் (வயது 27)

துரைசிங்கம் (வயது 47)

கணபதிப்பிள்ளை சண்முகம் (வயது 61)

கஸ்தூரி (வயது 14)

விஜயரத்தினம் இரத்தினராசா (வயது 44)

முருகையா சிவனம்மா (வயது 64)

கருணாநிதி தர்சா (வயது 22)

மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)

கமலநாதன் ராதிகா (வயது 23)

மகேந்திரராசா கமலநாதன் (வயது 26)

குகேந்திரராசா ராஜலா (வயது 05)

கந்தசாமி தனுசன் (வயது 08)

ஆறுமுகம் கந்தசாமி (வயது 42)

சோதி (வயது 48)

தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)

கே.தர்சன் (வயது 22)

எஸ்.சிவரூபன் (வயது 06)

வீ.இந்திரராஜா (வயது 40)

ஆர்.தியாகு (வயது 40)

கஸ்தூரி (வயது 16)

வீ.துரைசிங்கன் (வயது 47)

சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)

வினோஜா (வயது 17)

கணபதிப்பிள்ளை சண்முகராஜா (வயது 58)

விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)

வீரசிங்கம் தர்மசிங்கம் (வயது 52)

வீரசிங்கம் இந்திரராஜா (வயது 42)

சின்னமணி இன்பநாதன் (வயது 47)

கந்தையா சிவபாதம் (வயது 50)

சிவபாதம் மோகன்ராஜ் (வயது 25)

சிவபாதம் தர்மராஜ் (வயது 23)

மோகன்ராஜ் ராதிகா (வயது 24)

பாலச்சந்திரன் தர்சன் (வயது 08)

சத்தியமூர்த்தி குணாளன் (வயது 10)

நாகலிங்கம் பாலகிருஸ்ணன் (வயது 42)

மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)

குகேந்திரராசா ராஜனா (வயது 13)

அன்ரன் லோசன் ரேகா (வயது 03)

சின்னமணி இன்பராசா (வயது 47)

சசிகுமார் தேவபாக்கியம் (வயது 51)

ஐங்கரன் நிருசன் வான்மதி (வயது 09)

தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 04)

சிவதீபன் புஸ்பராணி (வயது 32)

குகேந்திரராசா (வயது 46)

விஜயரட்ணம் இந்திரராசா (வயது 46)

மரியநாயகம் கதீசன் (வயது 21)

பாலகுமார் பாதூசன் (வயது 05)

மயில்வாகனம தேவநேசன் (வயது 14)

கனியமுதன் கவிஞன் (வயது 16)

வைரமுத்து காருண்யன் (வயது 12)

வைரவன் துரைசிங்கம் (வயது 42)

காந்தி மதியமலர் (வயது 29)

கலாதீபன் விதுசனா (வயது 08)

தேவன் பவிசா (வயது 09) 80

கண்ணாளன் காவியா (வயது 13)

வேணுகாந்தன் யோகாம்பாள் (வயது 40)

கலைத்தேவன் ரேணுகா (வயது 35)

இன்பநாதன் சின்னராசா (வயது 44)

அந்தோனி ஜோசப் மரியநாயகம் (வயது 52)

கதிர்வேலு மருதம்மா (வயது 52)

கதிரித்தம்பி பவிசனா (வயது 11)

நாகமணி துசாந்தன் (வயது 12) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


துறைதோறும் மறுமலர்ச்சி

தோழர்களே ஒவ்வொரு துறைகளைப்பற்றியும் தமிழகத்தில் அதன்கண் நாம் செய்யவேண்டிவ வரைவு பற்றியும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
நட்புடன் தோழர்

Friday, April 3, 2009

சொந்த சம்பந்தியை கூட கவனிக்க அல்லது காப்பாற்ற முடியாத இத்தாலி அம்மையார் !

சொந்த சம்பந்தியை கூட கவனிக்க அல்லது காப்பாற்ற முடியாத இத்தாலி அம்மையார் !
இவர் இந்தியாவைக் காப்பாற்ற தேர்தல் அறிக்கை விடுகிறார் . இந்த சாவை விசாரணை செய்தால் சில பல உண்மைகள் வெளியே வரலாம் . ஆனால் நடக்குமா?

புதுடெல்லி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேராவின் மாமனார் ராnஜந்திர வதேரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கழுத்தில் ஒயர் சுற்றப்பட்டிருந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.


முதலில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து குடும்பத்தார் தரப்பிலோ அல்லது போலீஸ் தரப்பிலோ அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 15 தினங்களுக்கும் மேலாக அவர் சிட்டி இன் என்ற விடுதியில் தங்கியிருந்தார். அவரது அறையில் ராnஜந்திர வதேராவின் உடலை விடுதி ஊழியர்கள் இன்று காலை 9.30 மணியளவில் பார்த்தனர்.


உடனடியாக அவரது உடல் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது கழுத்தில் சில காயங்கள் இருந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. மருத்தவமனை ஊழியர்கள் மற்றும் போலீசார் அது பற்றி எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.


பின்னர் அவரது உடல் லோதி தோடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரியங்காவின் மாமனார் கடந்த சில காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, April 2, 2009

மதிமுக வையும் வைகோ அவர்களையும் பலவாறு விமர்சித்து செய்திகள் வருகிறதே ?


மதிமுக வையும் வைகோ அவர்களையும் பலவாறு விமர்சித்து செய்திகள் வருகிறதே ?

அவர்களுக்கெல்லாம் கீழே உள்ளதுதான் பதில்.

வைகோ தன் வாரிசுகளுக்காக கட்சியை நடத்தவில்லை.
வைகோ ,தனது சொந்தங்களுக்கும் பிள்ளய்களுக்கு மட்டுமே சிந்தனை அறிவு உள்ளது மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று சொல்லவில்லை.
வைகோ ,அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை குவிக்கவில்லை. கிடைத்த சந்தர்ப்பதை எல்லாம் பயப்படுத்தி மந்திரி ஆகத்தான் வேண்டும் என்று நினைக்கவில்லை.
வைகோ ,தனது சொந்த கட்சி கீழ்மட்டத் தலைவனையே ஆள் வைத்து கொள்ளவில்லை.
வைகோ ,பேருந்தையோ அல்லது பத்திரிகை அலுவலகத்தையோ எரித்து மூன்று பேரை கொன்றது போல் தனது தொண்டர்களை தயார்படுத்தவில்லை.
தனிமனித ஒழுக்கத்தை எப்பொழுதும் மீறியதில்லை.
வைகோ ,ஈழத்தமிழன் செத்தாலும் பரவாயில்லை எனக்கு பதவிதான் முக்கியம் என்று அவனை கொள்ள கூட்டு சதி செய்யவில்லை.
வைகோ, தன் பிள்ளையின் அமைச்சர் பதிவிக்காக ஈழத்தமிழன் செத்தாலும் பரவாயில்லை என்று கொள்கை வைக்கவில்லை.vaiko

ஈழத்தமிழனுக்காக உண்ணாவிரதம் இருந்து , அதே ஈழதமிலனை போர் கொண்டு அளிக்கும் கட்சியோடும் அதற்க்கு துணை நின்ற கட்சியோடும் கூட்டு சேரவில்லை.

இன்னும் எழுதுகிறேன்

நன்றி . தோழர் நாகராஜ் , காஞ்சிபுரம்

Wednesday, April 1, 2009

மதிமுக பதிவிக்காக அங்கும் இங்கும் தேர்தலுக்கு தேர்தல் ஓடுகிறது என்று ஒரு சிலர் சொல்கிறார்களே ?

மதிமுக தொண்டனுக்குள் இர்ருக்கும் கேள்வியும் அதற்க்கு அவனே சொன்ன பதிலும் :-

மதிமுக பதிவிக்காக அங்கும் இங்கும் தேர்தலுக்கு தேர்தல் ஓடுகிறது என்று ஒரு சிலர் சொல்கிறார்களே ?

மதிமுக கட்சி உள்கட்டமைப்பு ஜனநாயகத்தை முழுவது நம்புகிற கட்சி. அதன் தலைவர் வைகோ எப்பொழுதும் அவரின் முடிவை திணித்ததில்லை . இப்பொழுது கட்சியை விட்டு ஓடிப்போன கயவாளிகளின் முடிவால்தான் அதிமுகவிற்கும் மதிமுக வந்தது. சிறை கொட்டடியில் தாம் பட்ட துன்பங்களை எல்லாம் மறந்து கட்சி மற்றும் அதன் அமைப்பிற்காக வைகோ அதிமுகவில் சேர்வது என்ற முடிவையும் ஏற்றார். அதிமுகவில் இருந்தாலும் மதிமுக வின் அடிப்படை கொள்கைகளை எப்பொழுதும் விட்டுக்கொடுத்ததில்லை. ஈழத்திலும் சேது சமுத்திர திட்டத்திலும் மதிமுக வின் நோக்கு அதிமுகவை ஓத்ததில்லை. அதிமுகவோடோ அல்லது எந்த கட்சியின் கூட்டணியில் இருந்தாலும் மதிமுக அதன் அடிப்படை கொள்கைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை.

தேர்தல் கூட்டணி என்பது சில பல கயவாளிகளை எதிர்ப்பதற்கு நமக்குள்ள துணை அவ்வளவுதான். பதவிக்காகவோ அல்லது பணம் பட்டம் பெருவதர்ககவோ மதிமுக தேர்தல் கூட்டணி வைக்காது.

எல்லோரும் அடுத்த முதல்வர் என்று அவரவர் தலைவரை சொல்லுகிறார்கள், மதிமுக அதன் தலைவரை முதல்வராக முன்னிருத்ததற்கு காரணம் அது கூட்டணியில் இருப்பதால?

இப்பொழுது உள்ள தலைவர்களில் வைகோ வைபோல் தனிமனித ஒழுக்கத்திலும் தமிழ் இன பணியிலும் எவரும் அவர்களின் பங்கை செய்தது இல்லை.

அரசியல் என்பதே தொழில் ஆகிவிட்ட இன்றைய காலத்தில் சில முன்னெடுப்பு வேலைகளை மதிமுக செய்து வருகிறது. அரசியலில் பணம் சம்பாதிப்பதை அல்லது அரசியல் தொழில் செய்ய விரும்பாத ஓர் இளைஞர் படையை மதிமுக தயார் செய்து வருகிறது. அந்தப்படை போருக்கு தயாராய் இருக்கும் பொழுது வைகோ முதல்வராய் வருவார். இது காலத்தின் கட்டாயம் மதிமுகவின் நம்பிக்கை.

மதிமுகவிலிருந்து சில பதவி கொண்ட தலைவர்கள் வெளியேறியதால் மதிமுகவில் யாரும் இல்லை என்பது போன்ற தோற்றம் உள்ளதே.?

மதிமுகவின் உண்மையான தொண்டன் இப்பொழுதுதான் மிகவும் சந்தோசமாய் உள்ளான். பதவி ஒன்றை மட்டுமே நோக்கமாய் கொண்ட ஒரு கூட்டம் மதிமுகவில் இருந்து வெளியேறியதில் மதிமுக தூய்மை அடைந்துள்ளது.

மதிமுகவில் இருப்பவர்கள் அதன் தலைவர் வைகோவைபோல் போர்குணம் கொண்டவர்கள். நேர்மையானவர்கள் . வன்முறையை விரும்பாதவர்கள். எல்லாவற்றையும் விட சுயமரியாதைக்காரர்கள். நான்கு காசுக்காக மலத்தை தின்று வெளியேறியவர்களை மதிமுக சந்தோசத்தோடு அனுப்பி வைத்துள்ளது.