Sunday, April 26, 2009

இன்னும் இரண்டு நாளில் இலங்கை போரை நிறுத்திவிடும் -சிதம்பரமும் இலங்கைஅமைச்சரும் ஒரே குரலில் அறிக்கை.

இன்னும் இரண்டு நாளில் இலங்கை போரை நிறுத்திவிடும் -சிதம்பரமும் இலங்கைஅமைச்சரும் ஒரே குரலில் அறிக்கை.

இத்தனை நாலா போரை இந்தியாதான்அல்லது காங்கிரஸ் அரசுதான் நடத்தியது என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம்தேவை இல்லை.

------------------------

இலங்கைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

து பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்திய வெளியுறவு செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு அகதிகளின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து இவர் விரிவாக கலந்துரையாடியதுடன் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது தொடர்பான திட்டமொன்றை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாகவும் வீரதுங்க கூறியுள்ளார்.

யுத்த நிறுத்தம் பற்றியோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலோ இந்திய அதிகாரிகள் எதனையும் குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகங்களில் போர் நிறுத்தம் குறித்து பிரசூரிக்கப்பட்டுள்ள செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

------------------------------------------------------------------------------------------------------

போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ அது முடிவுக்கு வந்து விடும்.

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடியும் தருவாயை எட்டி விட்டது. எனவே போர் நிறுத்தம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை கூறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் பலித கொகனா சிஎன்என் ஐபிஎன் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், போர் களத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் இலங்கை அரசால் முடியும். இதில் 3வது நாட்டின் தலையீட்டை நாங்கள் ஏற்க மாட்டோம்.

போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ அது முடிவுக்கு வந்து விடும். அதற்கான குறிப்பிட்ட கால இலக்கை தெரிவிக்க முடியாது. ஆனால் அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்படும் வரை எங்களது லட்சியத்திலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம்.

விடுதலைப் புலிகள்தான் நெருக்கடியை உருவாக்கினர். எனவே இலங்கை பாதுகாப்புப் படையினர் தற்போது செய்து வரும் நடவடிக்கைகளை யாரும் குறை கூறக் கூடாது.

ராணுவம் புலிகளின் அரண்களைத் தகர்த்து 1 லட்சத்து 7 ஆயிரம் பேரை மீட்டுள்ளது. தற்போது தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அவர்களையும் ராணுவம் விரைவில் மீட்டு விடும் என்றார் அவர்.

---------------------------------------------------------

இன்னும் 2 நாளில் நல்ல முடிவை சொல்லும் இலங்கை - ப.சிதம்பரம்

சிவகங்கை: இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும். இலங்கை நல்ல செய்தியைத் தரும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த் பேட்டியில்,

இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் குறை கூறுகின்றனர். இதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. அனைவருக்குமே தெரியும், இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களை பாதுகாப்பதற்கும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இதை வைத்து சில கட்சிகள் அரசியல் ஆதாயம் அடைய நினைத்தால் அது நடக்காது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள், திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு விதமாக இந்த பிரச்சினையை அணுகுகிறது

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தால் எல்லோரும் நிம்மதியாக இருப்பார்கள். சகஜநிலை திரும்பவும், போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. இன்னும் 24 அல்லது 48 மணி நேரத்துக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

பிரபாகரனுக்கு கெட்ட நிலைமை வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்ன செய்துகொள்வார் என்று எனக்கு தெரியாது.

மேலும் இலங்கை ஒரு தனி நாடு, எனவே நாம் அதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் 48 மணி நேரத்தில் நல்லவை நடக்கும் என்று நம்புவோம். அங்கு ஏற்படும் நிகழ்வுகளால் தமிழகத்திற்கு அகதிகள் அதிக அளவில் வரவில்லை. அவர்கள் அந்த நாட்டிலேயே உள்நாட்டு அகதிகளாக உள்ளனர்.

குண்டு வீசும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து கொடுக்கும்.

பிரபாகரனுக்கு இந்தியா அடைக்கலம் தருவது குறித்து நான் கருத்து கூறமுடியாது. ஏன் என்றால் இங்கு சட்டங்கள் உள்ளது. மேலும் இலங்கை பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகளுக்கு கருத்து வேறுபாடு கிடையாது என்றார் சிதம்பரம்.


Thursday, April 23, 2009

மதிமுக வேட்பாளர்களுக்கென்று தனிதனி இணைய தளங்கள்

மதிமுக வேட்பாளர்களுக்கென்று தனிதனி இணைய தளங்கள் ,

மதிமுக வேட்பாளர்களுக்கு கீழ்க்கண்ட இணைய தளங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் இதன் மூலம் இணையத்தில் அந்தந்த தொகுதிக்குட்பட்ட மக்கள் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம்.

விருதுநகர் www.vaikoonline.com
நீலகிரி www.drkrishnan.in
ஈரோடு www.erodeganeshamoorthy.in
தஞ்சை www.duraibalakrishnan.in

நட்புடன்
தோழர்
www.mdmkonline.com

Wednesday, April 22, 2009

பிசு பிசுத்து கொண்டிருக்கும் கருணாநிதியின் கபட நாடக வேலை நிறுத்தம்.

பிசு பிசுத்து கொண்டிருக்கும் கருணாநிதியின் கபட நாடக வேலை நிறுத்தம்.

காலை பத்து மணிமுதல் நமது குழு சென்னையை சுற்றி நிலவரத்தை சொன்னார்கள்.
  1. ஆளும் கட்சி யின் அழைப்பு என்பதால் (அல்லது மிரட்டப்பட்டதால், அல்லது எந்த ஆளும் கட்சி அழைப்பு கொடுத்தாலும்) பஸ்கள் ஓடவில்லை. அதன் காரணமாகவே பஸ் இல் பயணிக்கும் மக்கள் கூட்டம் கொஞ்சம் குறைந்து இருந்தது.
  2. வழக்கம் போல் ஆட்டோ ஓடுகின்றது.
  3. வழக்கம் போல் மகிழுந்து இன்ன பிற தனியார் வாகனங்களுக்கு குறைவில்லை.
  4. ரோட்டோர கடைகள் அனைத்து திறந்து உள்ளன.
  5. யார் அழைப்பு விடுத்தாலும் கடைகளை மூடும் வியாபாரிகள் கடைகளை மூடி உள்ளனர்.
  6. அரசாங்கம் நடத்தும் மது பானகடைகளுக்கு எந்த விடுமுறையும் இல்லை. வழக்கத்தை விட மிக நன்றாய் வியாபாரம் நடக்கிறது. இது அரசாங்கத்தின் அல்லது கருணாநிதியின் கேவலமான நடத்தையை காட்டுகிறது.திமுகவின் உண்மையான தொண்டனை கேவலப்படுத்துகிறது.
  7. நாம் பேசியவரையில் திமுக வில் எழுபது சதவீதம் பேர் கருணாநிதியின் இந்த நாடகத்தை விமர்சனம் செய்கிறார்கள் . அதன் வெளிப்பாடே நேற்று கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது.
  8. இன்றைய முடிவு திமுகவின் உண்மையான தொண்டர்கள் கருணாநிதியை விட்டு விலகியே , எதோ ஒரு நிர்பந்தத்திற்காக கட்சியில உள்ளார்கள்
  9. சென்னையின் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கம் உள்ளது. போக்குவரத்து நன்றாய் உள்ளது.
  10. கருணாநிதியின் நாடக பந்த் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது.

-பதினோரு மணி நிலவரம் . முழு விவரத்தோடு மாலை சந்திப்போம்.

Tuesday, April 21, 2009

திருமாவின் செய்தியும் - நமது பதிலும்.

செய்தியின் மூலம் :

http://election.dinamalar.com/news/2378/%E0%AE%AE.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.,---%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.,%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8.html


செய்தி கீழே உள்ளது அதற்கான மறுப்பு இப்போது தோழரிடமிருந்து :

  • திருமா விஜயகாந்தை போல பேச ஆரம்பித்துவிட்டார் . மதிமுக வைஎவரும் ஈழ விடயத்தில் குறை கூற முடியாது.
  • அதே போல் ஈழ விடயங்கள் தாம்தான் பேசவேண்டும் மற்றவர்கள் பேசக்கூடாது என்று எப்பொழுதும் மதிமுக நினைத்து இல்லை. அந்த விதியின் அடிப்படையில்தான் ஈழதிருக்கு நேர் எதிராக இருந்த அதிமுக ஈழத்தை அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்டத்திர்க்கு ஆளானது மதிமுகவின் பெரும் வெற்றி
  • திருமா எப்பொழுதும் எந்த இடத்திலும் ஈழகூட்டனியை பற்றி மதிமுகவிடம் பேசியது இல்லை. அவர் ஒரு வேலை பாமகவிடம் பேசியிருக்கலாம்.
  • இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை என்று ஒன்று ஆரம்பித்த நாள் முதல் , அதன் முழு செலவு தொகையும் மதிமுகவின் தொண்டனுடையது என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறோம் . அதை மதிமுக சுமையாக கருதவில்லை நேர்மாறாக அதை தன் கடமையாக கருதுகிறது.
  • ஈழத்தமிழர் விடயத்தில் karunaanithi எவ்வளவு நேர்மையானவர் என்பது உலகுக்கே தெரியும் . சோனியா அம்மையாரின் கெட்ட நோக்கம் உலகுக்கே தெரியும் . அது திருமாவிற்கு தெரியாதா ?
  • சரி எது எப்படி இருந்தாலும் பாமகவின் இப்போதைய நிலைமையை நாம் பாராட்டவிட்டாலும் திட்ட வேண்டிய அவசியம் இல்லை.
  • ஈழ விடயத்தில் கருணாநிதியை பார்க்கையில் ஜெயலலிதா எவ்வளோவோ மேல் என்பதே இப்போதைக்கு உண்மைகள்.
  • திருமா அவர்களே திமுகவை குளிர்விக்க நீங்கள் இப்படி பேசியுள்ளீர்கள் என்பது தெரியும். திமுக வோட்டு உங்களுக்கு விழவேண்டும் என்பது தேர்தல் கணக்கு அதற்காக சம்பந்தமே இல்லாமல் மதிமுகவை விமர்சிப்பதை நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள் .
  • இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் நீங்கள் எங்களின் மரியாதைக்குரிய பங்காளி அதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
  • சிதம்பரத்தில் நீங்கள் வெற்றி பெற்றாலும் அல்லது பமாக வெற்றி பெற்றாலும் அது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தோழரின் வெற்றிதான்.
  • மதிமுக தேர்தலை புறக்கணிக்குமா என்றால் ..? ஈழத்தமிழர்களின் விருப்பம் அதுவல்ல . எனென்றால் நாங்கள் ஈழத்தமிழர்களுடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கும் அமைப்பு. கருணாநிதியின் விருப்பதிற்கு காங்கிரஸின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் துரோக கூட்டணி வெற்றி பெற நாங்கள் விடபோவது இல்லை. நீங்கள் விட்டுவிட்டீர்கள் என்பதைவிட அவர்களுக்கு பல்லாக்கு தூக்குகிறீர்கள் என்பது தான் எங்களின் வேதனை .

நட்புடன்

தோழர்.

------------------

Thursday, April 16, 2009

செய்தியும் நமது பதிலும் -வைகோ மூன்று லக்ஷம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இந்த செய்தி , http://thatstamil.oneindia.in/news/2009/04/16/tn-vaiko-begins-campaigning.html
வந்துள்ளது.


நமது பின்னூட்டத்தை முதலில் படியுங்கள்

  • வைகோ ஒரு ஜனநாயக கட்சியின் பெரும் தலைவர் .சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
  • நாடாளுமன்ற உறுபினராக அவரின் பணி மிகச்சிறந்து இருந்தது என்பதை எதிர்கட்சிகாரர்களும் ஒப்புக்கொள்வார்கள்.
  • இந்த தொகுதியில் தமிழின துரோகம் செய்த காங்கிரஸ் வேட்பாளரா ? அல்லது திமுகவிற்கு முன்னாள் அரணாகவும் திராவிட இயக்க தலைவராகவும் உள்ள , ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கோம் வைகோ வா என்று திமுக வின் இளைஞர் களும் புதியவர்களும் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்களின் ஆதரவும் வைகோ விற்கே உள்ளது.
  • தேமுதிக மற்றும் கார்த்திச்க் கட்சிக்கு விழும் வாக்குகள் , யாருக்கும் பயன்படாதவைகள் என்பதும் தனி மனித அங்கீகாரத்தை நோக்கியே அவர்களின் முயற்சி உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.
  • வைகோ மூன்று லக்ஷம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

அந்த செய்தி இனி இங்கே :

தொகுதி சீரமைப்பினால் வைகோவுக்கு சிக்கல்!

விருதுநகர்: வைகோ இரண்டு முறை வெற்றி பெற்ற சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

இதில் இராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் கணிசமான அளவிற்கு வைகோ சார்ந்த நாயக்கர் சமுதாயத்தினரின் ஓட்டுகளும், ஸ்ரீருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் கணிசமான அளவிற்கு நாடார் சமுதாய ஓட்டுக்களும் உள்ளன.

தொகுதி மறு சீரமைப்பின்படி சிவகாசி நாடாளுமன்றத் தொகுதி விருதுநகர் தொகுதியாக உருமாறிவிட்டது. புதிய விருதுநகர் தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், அருப்புக்கோட்டை தொகுதிகளில் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளே பெரும்பான்மையாக உள்ளன.

மேலும் நாயக்கர் சமுதாய வாக்கு வங்கி அதிகமுள்ள சட்டமன்ற தொகுதிகள் வேறு நாடாளுமன்றத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டுவிட்டன.

இதனால் வைகோ இந்த முறை கடுமையான போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், வைகோ எம்பியாக இருந்தபோது தொகுதிக்கு செய்த நன்மைகளும், ஈழப் பிரச்சனையில் அவரது நிலையும், நேர்மையான அரசியல்வாதி என்ற பெயரும் அவருக்கு பக்கபலமாக உள்ளது.

நான் அனைவருக்கும் பொதுவானவன்-வைகோ

இந் நிலையில் வைகோ நேற்று தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் தந்தை வையாபுரியின் உருவப் படத்தை வணங்கிவிட்டு, தாயார் மாரியம்மாளின் காலி்ல் விழுந்து ஆசி பெற்றுவிட்டு பிரசாரத்தைத் துவக்கினார்.

வழியெங்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுக்க திருவேங்கடத்தை அடுத்துள்ள சிவலிங்காபுரம் கிராமத்தில் தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார்.

அங்கு அவர் பேசுகையில், சிவலிங்காபுரம் மக்கள் தேர்தல் விழிப்புணர்வு கொண்டவர்கள். அதனால்தான் இங்கிருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன்.

என்னை தேர்ந்தெடுத்தால் இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து, இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுப்பேன். இதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக என்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான் கைது செய்யப்படலாம். என்னை கைது செய்தால் மக்கள் எனக்காக ஓட்டுக் கேட்க வேண்டும்.

இலங்கை தமிழருக்காக என் மீது தொடங்கப்பட்ட வழக்கு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வைகோ ஆரம்பத்தில் இருந்தே ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது அவர் பேசியதில் தவறில்லை என்று எனக்காக குரல் கொடுத்துள்ளார். இதுதான் நட்பு, தோழமை.

திருமங்கலம் இடைத்தேர்தலின் போது அதிமுக, தொண்டர்கள் மீது தாக்குதல் நடந்தபோது, முதல் ஆளாக களத்தில் நின்றேன். திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்திய அரசியலை தீர்மானிப்பவர் ஜெயலலிதா..

அதிமுக, கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்திய அரசியலை தீர்மானிக்கக் கூடியவராக ஜெயலலிதா திகழ்வார்.

இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து சிதம்பரம் பேசி வருவதெல்லாம் காரைக்குடியில் ஓட்டு வாங்குவதற்குத் தான். ஒரு பக்கம் ஓட்டிற்கு 1,000, 2,000 ரூபாய் தரப் போவதாக சொல்கின்றனர். மறுபுறம் ஈழத்தில் பிணம் விழுந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் மனிதாபிமானத்திற்கு ஓட்டு போடுவீர்கள். பணத்திற்கு ஓட்டுப்போட மாட்டீர்கள் என நம்புகிறேன். இலங்கைத் தமிழர்களுக்காக லோக்சபாவில் குரல் கொடுக்க என்னை தேர்ந்தெடுங்கள்.

நான் அனைவருக்கும் பொதுவானவன். மின்னணு இயந்திரத்தில் ஓட்டு எண்ணிக்கை, ஓட்டுச்சாவடி வாரியாக கணக்கிட முடிவதால் தங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களை ஆளுங்கட்சியினர் மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து பகுதியையும் கலந்து எண்ணுவதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வைகோ.

Wednesday, April 15, 2009

அன்புடன் தோழர்களே, - நமது சந்திப்பு .

அன்புடன் தோழர்களே,

என்னுடன் கடந்த பல நாட்களாக எனது கைபேசியில் தொடர்பு கொண்ட அனைத்து தோழர்களுக்கும் முதல் நன்றி .

அளப்பரிய பல தகவல்களை தோழர்களிடம் பெற முடிந்தது.

நடந்து முடிந்த நிகழ்வுகள் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். நாம் நமது சந்திப்பைப்பற்றி பேசிகொண்டிருந்த பொழுது,
  • கூட்டணி உறுதி
  • பொதுக்குழு
  • பிரச்சார அவசரம்
போன்ற விடயங்களால் நாம் சென்னையில் கூடுவது கொஞ்சம் தள்ளிபோகிறது. தலைவர் வைகோ அவர்களிடம் நாம் பேசிவிட்டோம் . இந்த தேர்தல் முடியவும் , மே மாத இறுதிக்குள் நமது சந்திப்பு அவசியமாகிறது.

இடைப்பட்ட நாட்களின் உங்களால் முடிந்த அளவுக்கு தேர்தல் வேலைகளில் களபணி ஆற்றுங்கள்.
நான்கு தொகுதிகளிலும் வெற்றி என்ற சந்தோச செய்தியோடு நாம் மே மாதஇறுதியில் சந்திப்போம்.

நட்புடன்
தோழர்.






Friday, April 10, 2009

மிகச்சரியான பதிவு .- கருணாநிதியின் குள்ளநரித்தனம்

கருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பிறப்பதை பார்க்கவேண்டும். வயிறெரிந்து சாகவேண்டும்

ரசாயன ஆயுதங்களும் இந்திய ராணுவமும் கருணாநிதியின் சம்மதத்துடனே புகுந்து இந்த தமிழீழ வெற்றியை இப்போது கலைத்தது.

இந்த போரில் கூட வென்றது விடுதலை புலிகளே. இலங்கை பொருளாதார சரிவை சந்தித்து இருக்கிறது . ராணுவ பலத்தை இழந்து நிற்கிறது . மனித நேய விவகாரத்தில் கேட்ட பேரை சம்பாதித்து வைத்துள்ளது. நாளை என்ன செய்யலாம் என்று கூட தெரியாத நிலையில் போரை மட்டுமே நடத்துகிறது .

ஈழம் உலக பார்வையில் வந்துள்ளது . இன்று , நாளை , நாளை மறுநாள் , அடுத்த வாரம், அடுத்த மாதம் , அடுத்த வருடம் கண்டிப்பாக கால சக்கரம் மாறி சுழலும். மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் .

நாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .

நியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .

அநீதிகள் வெல்வது போல தெரியும் . ஆனால் இறுதியில் தோற்கும் . அநீதிக்கு ஒரே முறைதான் தோல்வி . அதன் பின்னர் நீதியை தவிர வேறொன்றும் இருக்காது .

ஒரு பக்கம் மேடானால் எங்கோ ஒரு பக்கம் பள்ளமாகிறது . இது தான் நிதர்சன கோட்பாடு . ராணுவம் வெல்கிறது . ஆனால் எங்கோ தோற்கிறது . அது தெரியும் வரை நமக்கு அல்லல்தான்.

ஒரு தமிழனாக சொல்கிறேன், தமிழனிடமே உன் குள்ள நரி வார்த்தை ஜாலங்களை உபயோகிக்கும் உன்னை தமிழ் வரலாறு என்றும் மன்னிக்காது. உன்னை தமிழின துரோகி என்றே வரலாறு நினைவு கொள்ளும். திமுக நீ இறந்தால் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்ட கோடானு கோடி தொண்டன்களில் நானும் ஒருவனாக இருந்தேன். இன்றோ நீ என்று போய் சேருவாய் என்று வேறு வழியில்லாமல் எண்ணி கொண்டிருக்கிறேன் ஒரு இரக்கமற்ற தமிழனாக. என்ன செய்வது நம் இனம் அழிவதற்கு துணை போகும் நீ என்று போய் சேர்ந்தால் என்ன. நீ இருந்து யாருக்கு என்ன பயன்.

http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_3724.html