Tuesday, August 11, 2009

தானாக வந்தார் தானாகவே சென்றார் .

கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் வகையறாக்கள் திமுகவில் இணைந்து உள்ளார்களே ?


ராதா
கிருஷ்ணன் சிறு குறிப்பு :


திமுகவில் இருந்தார் வைகோ வின் உதவியால் கோவில்பட்டி சட்ட மன்றதேர்தலில் நின்றார் .
பின்பு மதிமுக ஆரம்பித்த உடன் மதிமுக சென்றார்.(இங்கும் இரு முறை சட்ட மன்ற தேர்தலில் நின்றார் )
பின்பு திமுக சென்றார்.(எனக்கு எம்பி சீட் கொடுப்பதாக சொல்லி அழைத்துள்ளார்கள் என்றார்)
பின்னர் அதிமுக சென்றார்.(எதற்கு என்று தெரியவில்லை )
அதன் பின்பு மீண்டும் திமுக சென்றார்.(எதற்கு என்று தெரியவில்லை )
அதற்கும் அடுத்து மீண்டும் மதிமுக சென்றார்.(ஆறு மாதங்கள் கெஞ்சி கூத்தாடி அதன் பின் வைகோ என்ற ஒற்றை தலைவரின் விருபதிர்காகவே இவர் மதிமுக வில் சேர்த்து கொல்லப்பட்டார் , இவரை சேர்க்க வைகோ பல பேரை சமாதான படுத்த வேண்டியிருந்தது )

கடைசியாக இரண்டாவது மீண்டுமாக திமுக சென்றுள்ளார்.

மக்கள் பனி செய்வதற்கு அவருக்கு எவ்வளவு வேகம் சுறுசுறுப்பு பாருங்கள்.

நன்றாய் இருக்கட்டும் .

தோழர்.

Friday, August 7, 2009

பஸ்களில் விளம்பரங்களை அகற்ற ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


பஸ்களில் விளம்பரங்களை அகற்ற ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ள விளம்பரங்களை அகற்றுவது தொடர்பான காலக்கெடுவை நிர்ணயித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை நுகர்வோர் தன்னார்வ அமைப்பு சார்பில் கதிர்மதியோன் என்பவர் மனு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் படி பஸ்களின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளிலோ, பக்கவாட்டிலோ விளம்பரம் செய்யக் கூடாது. ஆனால், இந்த விதிகளை மீறி அரசு மற்றும் தனியார் பஸ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, சாலையைப் பயன்படுத்துபவர்களின் கவனம் திசைமாறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்ட விரோதமாக செய்யப்பட்டுள்ள இந்த விளம்பரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

மறுபடியும் குழப்பம் தமிழர்களை எமாற்றும் நாடுகள் ?

மறுபடியும் குழப்பம் தமிழர்களை ஏமாற்றும் நாடுகள் ? -

பத்மநாதன் எங்கள் நாட்டில் கைது செய்யப்படவில்லை: தாய்லாந்து பிரதமர்


புலிகள் அமைப்பின் புதிய தலைவராக செயல்பட்டு வந்த செல்வராசா பத்மநாதன் தங்கள் நாட்டில் கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து பிரதமர் அப்சித் வெஜ்யஜிவா கூறியுள்ளார்.

பன்னாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.''

பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை என்று உறுதியாக கூறமுடியும்.

அவர் வேறு ஏதோவொரு நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கலாம்'' என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மலேசியாவில் தான் பத்மநாதன் கைது செய்யப்பட்டார் என்று் சில இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saturday, August 1, 2009

கண் முன்னே நடக்கும் ஈழ சுதந்திர போர் ,

கண் முன்னே நடக்கும் ஈழ சுதந்திர போர் ,
அதற்கு துரோகம் செய்யும் இந்திய தமிழக அரசுகள் ..
கையறு நிலையில் தமிழ் மக்கள் ...

தாண்டவமாடும் வறுமை ..
அந்த வறுமையை பயன்படுத்தி-
வாக்குகளை பெரும் பணக்கார-
பேரம் பேசும் அரசியல்வாதிகள்...
உண்டு கொழுக்கிறான் ஊழல் அரசியல்வாதி ..
வறுமையில் வாக்கை விற்கிறான்
ஜனநாயகத்தில் உள்ள நவீன பிச்சைக்காரன் .

கண் முன்னே நடக்கும் ஈழ சுதந்திர போர் ,
அதற்கு துரோகம் செய்யும் இந்திய தமிழக அரசுகள் ..
கையறு நிலையில் தமிழ் மக்கள் ...

-தோழர்
www.mdmkonline.com

Friday, July 24, 2009

தமிழீழத்தை பாதுகாக்க நாம் தொடர்ந்து போராடுவோம் – வைகோ


vaiko

இலங்கை தமிழரை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் போராடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இலங்கை அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீள் குடியமர்த்த வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உலக வரலாற்றில் இதுபோன்ற ஓர் இனப்படுகொலை நடந்ததில்லை. ஆனால், இந்த படுகொலை நாம் வாழும் காலத்திலேயே நடந்துள்ளது.

இலங்கை தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசு ஆயுதம் கொடுத்தது. பணம் கொடுத்தது. இந்திய தளபதிகளே இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதனால் தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். இதன் விளைவாகத்தான் தமிழக சட்டமன்றத்தில் கட்சி பாகுபடின்றி 234 எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதலுடன் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இலங்கை அரசு இந்த தீர்மானத்தை குப்பைத்தொட்டியில் போட்டது. அடுத்த 2வது நாளே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, போர் தொடரும் என கொக்கரித்துவிட்டு சென்றார் இலங்கை அதிபர் ராஜபக்சே. ஆனால், தீர்மானம் போட்ட முதல்வர் கருணாநிதி அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இன்றும் நாடகமாடி கொண்டிருக்கிறார். இந்திய அரசும் இதுவரை போர் நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தவில்லை.

இலங்கை அகதிகள் முகாம்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஓர் சிறைச்சாலையில் இருக்கும் அடிப்படை உரிமைகள்கூட அந்த முகாம்களில் இல்லை.

இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பக்கூடாது. இலங்கை ஒருமைப்பாட்டை காப்பாற்ற போவதாக கூறி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கக் கூடாது.

இலங்கைக்கு இந்திய ராணுவம் இன்னும் உதவிகள் செய்தால், அங்கு தமிழர்கள் தனி தேசம் அமைக்க எல்லா உதவிகளையும் நாங்கள் செய்வோம். இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் நாங்கள் போராடுவோம் என்றார்.

Wednesday, July 22, 2009

மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் – விடுதலைப்புலிகள் அறிக்கை

இந்த செய்திகளில் பல விளக்கங்கள் இல்லை , நாம் எதிர்பார்த்த பல செய்திகள இல்லை , பிற ஈழ சார்பு நிலை பத்திரிக்கைகளில் வந்ததால் இங்கேயும் பிரசுரிக்கிறேன்.

-தோழர்.


மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் – விடுதலைப்புலிகள் அறிக்கை

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் பேசும் மக்களே,

எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர்படிந்த காலகட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலைகுலைந்து நிற்கின்றது. ஈடுசெய்ய முடியாத – கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத – மிகப்பெரிய இழப்புக்களை, எம் இனம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் – தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராடவேண்டியது எமது வரலாற்றுக்கடமை – ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணுக்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்துவிட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் – வரலாற்றின் தேவை கருதி – பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப – புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள் ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் பாதைகளும், காலத்திற்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்பது என்றும் மாறாதது.

எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ்த் தேசியத்தின் தலைவர்.

எமக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து எறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட – நீண்ட – விரிவான – ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு முடிவுக்கு அமைய – தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் – இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற்குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.

எமது போராட்டத்தை முனைப்புடன் முன்நகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துகளும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியதாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டது என்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.

எமது பெருந் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தி உள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Monday, July 20, 2009

கருணாநிதியையும் கனிமொழியையும் நம்பி இனிமேலும் புலம்பெயர் தமிழர்கள் ஏமாறக்கூடாது


ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக கலைஞர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து நடந்தார்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்தான் காவலர் என்றெல்லாம் நம்பியிருந்தார்கள். தங்களுக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் கலைஞர் வந்து தங்களைக் காப்பாற்றுவார் என்றெல்லாம் காத்திருந்தார்கள்.

ஆனால் அண்மையில்தான் அவரது போலித்தனம் அம்பலமாகியது. அவரது முழுதான நோக்கமே தனது குடும்ப ஆதிக்கத்தை மாநில ஆட்சியில் மட்டுமல்ல மத்தியிலும் செலுத்தி இனி வரும் எத்தனையோ தலைமுறைகளுக்குத் தனது பிள்ளைகளும் உறவினர்களும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதுதான்.

எனவே கலைஞர் கருணாநிதியும் அவரது புதல்வி கனிமொழியும் அடிக்கடி விடும் பத்திரிகை அறிக்கைகளைப் பார்த்து புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது. மாறாக அவர்களிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக இலங்கையின் வடபகுதியில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகளை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதியளவில் இந்திய மத்திய பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரே நாளில் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பட்ட இருபத்தையாயிரம் அப்பாவி மக்களின் படுகொலைகளைப் பற்றி ஏற்கனவே நன்கு அறிந்திருந்தும் ஏன் அதை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தீர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்க வேண்டும்' இவ்வாறு தமிழக அண்ணா தி.க தலைவி செல்வி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவரும் "புதிய பார்வை'' சஞ்சிகையின் பிரதம ஆசியரும், தமிழ்நாடு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் நெடுமாறனோடு தோளோடு தோள் நின்று செயற்படுபவருமாகிய நடராஜன் தெவித்தார்.

கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் என்னும் நகரில் நடைபெற்ற ஒரு நிதி சேகப்பு வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவே நடராஜன் கனடாவிற்கு வருகை தந்திருந்தார். மார்க்கம் நகர சபையின் மேயர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட மேற்படி நிதி சேகரிப்பு வைபவத்தில் சேகக்கப்பட்ட நிதி உலகில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியன் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மார்க்கம் நகர சபையின் ஒரே ஒரு தமிழ் பேசும் அங்கத்தவரான லோகன் கணபதியும் அங்கு கலந்து கொண்டார் அமெரிக்காவின் அட்லான்ரா மாநகல் நடைபெறவுள்ள வட அமெக்க தமிழர் சம்மேளனத்தின் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா பயணமாவதற்கு முன்னர் நடராஜன் கனடா உதயன் பத்திகையின் ஆசிரிய பீடத்திற்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.

மேற்படி நேர்காணலின் ஆரம்பத்தில் கனேடிய தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் (அது கனடா உதயன் அல்ல) பிரசுக்கப்பட்டிருந்த ஒரு செய்தி தொடர்பான தனது ஆதங்கத்தை தெரிவித்தபடி தனது கருத்துகளை கூற ஆரம்பித்தார். அவருக்கு ஆத்திமூரட்டிய அந்த செய்தி என்ன வெனில், கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இந்திய மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அண்மையில் விடுத்த பத்திரிகை அறிக்கை ஒன்றுதான்.

அதில் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதைத் தடுத்து நிறுத்தத் தனது தந்தை கலைஞர் கருணாநிதி முயற்சி எடுத்தபோது தமிழகத்தின் சில சுயநலமிக்க அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே அதைச் செய்யவிடாமல் தடுத்து விட்டன என்று கனிமொழி அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த அறிக்கை பற்றிய தனது ஆட்சேபனையையும் மறுப்பையும் தெரிவித்தபடி கனடா உதயன் ஆசிய பீடத்தின் கேள்விகளுக்கு நடராஜன் தனது பதில்களை கூற ஆரம்பித்தார்.

" தனது பத்திரிகை அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டுள்ள அந்தச் சுயநலம்மிக்க தமிழ் அரசியல்வாதிகள் யார் என்பதை உடனடியாக தெவிக்க வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கனிமொழியிடம் கேள்விகளைக் கேட்கவேண்டும். மக்களை ஏமாற்ற நினைக்கும் கனிமொழிக்கு தாங்கள் முட்டாள்கள் அல்ல என்பதை தமிழ் மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து அந்த ஏமாற்றுக்கார தந்தையும் மகளும் விடும் புழுகுகளை உங்கள் பத்திரிகையில் பிரசுத்து அவர்களின் பொய்யான அரசியலுக்கு துணை போக வேண்டாம்'' என்று நடராஜன் கேட்டுக் கொண்டார்.

மேற்படி கனடா உதயன் நேர்காணலின்போது நடராஜன் சற்று உணர்ச்சி வசப்பட்டவராகக் காணப்பட்டார். விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய போருக்கு இந்திய அரசு அளவுக்கு அதிகமான உதவிகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னமே வழங்கத் தொடங்கிவிட்டது. இவையெல்லாம் கலைஞர் கருணாநிதிக்கும் அவரது புதல்விக்கும் ஏற்கெனவே நன்கு தெரியும் என்று கூறிய நடராஜன் இருவருமே தாங்கள் தமிழக மக்களுக்கு சொல்லவேண்டிய பல உண்மைகளை மறைத்து விட்டார்கள்.

இதன் மூலம் தங்கள் சொந்த மக்களையே அவர்கள் ஏமாற்றி விட்டார்கள்' என்றும் தெவித்தார். நடந்து முடிந்த தேர்தலுக்கும் வன்னி மண்ணில் நடந்த இனப்படுகொலைகளுக்கும் என்ன தொடர்பை நீங்கள் காண்கின்றீர்கள்? என்ற கனடா உதயனின் கேள்விக்கு நடராஜன் மிகவும் விளக்கமான பதிலை அளித்தார். திகதிவாரியாக அவர் தெரிவித்த விவரங்கள் தெளிவானவையாகத் தென்பட்டன. கடந்த பல வருடங்களாகவே இந்திய அரசு இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்யத் தொடங்கிவிட்டது.

விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று நினைத்த இந்தியாவின் எண்ணத்தை நன்கு புரிந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்தவும் மிகவும் வேகமாகச் செயற்பட்டார். முதலில் இலங்கை இராணுவவீரர்கள் ஆயிரம் பேருக்கு தீவிரமான பயிற்சி வட இந்தியாவில் வழங்கப்பட்டது. ஆரம்ப போருக்கு தேவையான நிதி உதவியாக ஆயிரம் கோடி ரூபா வழங்கப்பட்டது. இவையெல்லாம் கலைஞர் கருணாநிதிக்கு நன்கு தெந்திருந்தும் அதை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.

அதை விட விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களைக் கண்டு பிடிக்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த ராடர் கருவிகளையும் அதை இயக்க வல்ல தொழில்நுட்ப அதிகாரிகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. நான் இங்கே மிகவும் முக்கியமான விடயம் ஒன்றை தெரிவிக்க விரும்புகின்றேன். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தமிழ்நாட்டுச் சிறையில் ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினியை சோனியாவின் புதல்வி பியங்கா சந்தித்து சதித்திட்டம் தீட்டிய விபரங்கள் அனைத்தும் கலைஞருக்கு தெரியும்.

நளினியிடமிருந்து என்னென்ன விடயங்கள் பெற முயற்சி எடுக்கப்பட்டன என்பதும் கலைஞருக்கு தெரியும் அதை அவர் மறைத்திருக்கின்றார். ஆனாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அவர்கள் போர் செய்து அழிக்க எண்ணியதை நான் விமர்சிக்கவில்லை. நேர்மையான முறையில் யுத்தம் நடைபெற்றிருந்தால் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்பதையும் நான் நன்கு அறிவேன். விடுதலைப் புலிகளை கலைஞர் கருணாநிதியும் அவரது புதல்வி கனிமொழியும் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை.

வன்னியில் வாழ்ந்து வந்த அப்பாவிப் பொதுமக்கள் முப்பதாயிரம் பேர்வரையில் கொடிய யுத்தத்தால் கொல்லப்பட்டதை அவரால் தடுத்து நிறுத்த முயலவில்லை. அவர் மனம் வைத்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு தமிழகத்து மக்களையும் இலங்கைத்தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களையும் ஏமாற்றப்பார்க்கின்றார்.

ஜூன் மாதம் 16ஆம் திகதி இந்திய மத்திய அரசின் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. நானும் ஐயா நெடுமாறனும் வன்னியில் இருந்த நடேசனோடு 15ஆம் திகதி இரவு பேசுகின்றோம். ஆனால் காங்கிரஸ் கட்சியும் தி.கவும் வெற்றி பெற்றுவிட்டன என்ற செய்தி இலங்கை அரசுக்கும் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அநியாயமாக அப்பாவிப் பொதுமக்கள் இருபத்தையாயிரம் பேர்வரை குண்டுகளாலும் எறிகணைகளாலும் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அதுவும் ஒரே நாளில்.

இவ்வாறு பெருந்தொகையான மக்களை இந்திய பொதுத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து அதன் பின்னர் அழிக்க வேண்டும் என்ற இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதித்திட்டம் பற்றி நன்கு அறிந்திருந்த கலைஞர் கருணாநிதி அதை தனது சொந்த மக்களான தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்ய அவர் தவறிவிட்டார். அதை மறைக்க தற்போது அவரது புதல்வி கனிமொழி கபட நாடகம் ஆடுகின்றார். புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும்.

ஜூன் மாதம் 18ஆம் திகதியளவில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அமையப்போகும் புதிய அரசில் தனது குடும்பத்தைச் சேர்ந்த அழகிரி, கனிமொழி மற்றும் மருமகன் கலாநிதிமாறன் ஆகியோருக்கு மந்திரிப் பதவி பெறுவது அதுவும் மிகவும் வருமானம் தரக் கூடிய அமைச்சுகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக கலைஞர் சக்கர நாற்காலியில் அமர்ந்து புதுடில்லி செல்கின்றார். அங்கு அவரது கோரிக்கைகள் நிறைவேறாத காரணத்தால் அவர் தனது குழுவினரோடு திரும்பி வருகின்றார்.

ஆனால் சில நாட்கள் கழித்து ஜனாதிபதி மஹிந்தவை இந்தியாவின் மத்திய அரசு சார்பில் பாராட்ட இலங்கை சென்ற நாராயணன் இந்தியா திரும்பும் வழியில் சென்னையில் கலைஞர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்திக்கின்றார். அப்போது அவர்கள் உரையாடிய விடயங்கள் தமிழ் நாட்டு பொது மக்கள் பற்றியோ அன்றி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் பற்றியோ அல்ல. மாறாக நடந்து முடிந்த போரில் யார் யார் கொல்லப்பட்டார்கள்?. என்னென்ன விடயங்கள் இனிமேல் இலங்கை இந்திய அரசுகளின் நகர்வுகளில் நடக்கப் போகின்றன? மத்திய அரசு ஆகக்குறைந்தது எத்தனை அமைச்சர் பதவிகளை தி.க உறுப்பினர்களுக்கு தரப்போகின்றது? அதுவும் என்னென்ன அமைச்சுகள்? இவை பற்றித்தான் கலைஞர் கருணாநிதியுடன் சென்னையில் பேசினார்கள்.

கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றி அவர்கள் பேசவில்லை. யுத்தம் டிந்ததனால் வவுனியாவில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியோ அவர்களது மீள் குடியேற்றம் பற்றியோ கதைத்திருக்க வேண்டிய ஒரு தேவை அப்போது இருந்தது. ஆனால் கலைஞர் கருணாநிதியோ அவை பற்றியெல்லாம் கதைக்காமல் தமது குடும்ப நலன் பற்றிக் கதைத்துள்ளார்.

மத்திய அரசின் வெளியுறவுப் பிரிவு உயர் ஆலோசகர் நாராயணன் தனது வீட்டுக்கு வந்தும் கூட அவரிடம் வன்னி மண்ணில் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பாக அக்கறையாக எதுவும் பேசவில்லை. அவருக்கு தமிழ் நாட்டு மக்கள் மீதோ அன்றி வவுனியாவில் வதை முகாம்களிலுள்ள மூன்று இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் பற்றியோ கவலையில்லை. இவற்றைப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் அவர்கள் வெளியிடும் அறிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டும். இலங்கையில் நடந்து முடிந்துள்ள தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் பற்றியெல்லாம் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு நாடகமாடிய கலைஞரது முகத்திரையை கிழிக்க ஒன்றுபட வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்' இவ்வாறு நடராஜன் தனது நேர்காணலை நிறைவு செய்து கொண்டார்.

Thanks to http://www.tamilkathir.com/news/1621/58//d,full_view.aspx