Tuesday, June 30, 2009

மதிமுக மாணவர் அணியில் சேருங்கள் .

அன்புடன் தோழர்களே,

தேர்தலுக்கு முந்தைய சூழலில் நான் உங்களுக்கு எழுதினேன். நமது சந்திப்பு அப்போது நடக்காமல் போனது .
இப்பொழுதும் பொது செயலாளர் அவர்கள் புது உறுப்பினர் சேர்ப்பில் மிகவும் பரபரப்பாய்உள்ளார்கள் .
அவர்கள் சென்னை வந்ததும் நாம் சந்திக்க ஒரு நாள் கேட்டு கூடுவோம்.
இடைப்பட்ட நாட்களில் உங்களின் சிந்தனைக்கு கீழ் கண்ட வற்றை பதிகிறேன்.
மதிமுகவில் மாணவர் அணியை பலப்படுத்தத் வேண்டியுள்ளது. அனேகமாக எல்லா மாணவர்களும் மதிமுகவின் பெயரில் நல்ல கருத்து கொண்டுள்ளார்கள். அவர்களை சந்தித்து நம் அணியில் சேர வேண்டுகோள் விடுத்தாலே போதும் .
நம் மாணவர் அணி பலம பெரும்.

வெறுமனே எங்களது கட்சிக்கு வாருங்கள் என்று சொல்லுவதை விட, கீழ்க்கண்ட மாணவர் அணியின் உட்பிரிவில் சேவை செய்ய அவர்களை அழைக்கலாம்.
நிச்சயம் அனைத்து மாணவர்களும் விருப்பத்துடன் சேர்வார்கள். அந்த உட்பிருவிகளை பற்றி இப்போது நாம் இங்கே சிறு விளக்கத்தோடு பார்க்கலாம்.
மதிமுக மாணவர் ஈழ அணி

நிதமும் குறைந்தது இரண்டு மணி நேரம் , பெரும்பாலான வேலை இணையத்தில்
ஈழ விசயத்தில் நம் கண் முன்னே உள்ள கீழ் கண்ட பணிகளை செய்வது ஒவ்வொரு மாணவனின் கடமை .
அதை நெறிப்படுத்தி செய்வதற்கு இந்த அணியை அமைக்கலாம்.
இந்த அணி அதன் பணிகளை இடையறாது செய்யவேண்டும் .
ஈழத்தில் நம் உறவுகள் சற்றேனும் நிம்மதியான வாழ்க்கை பெரும் வரை இந்த அணி அவர்களுக்கான கடமையை செய்யும்.
ஈழ தமிழர்களை காக்க இந்தியாவையும் தமிழக அரசாங்கத்தையும் நம்பி இன்னும் மோசம் போகாமல் , நம் கோரிக்கைகளை பிரிடன் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். தமிழகம் முழுதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஈழ ஆதரவு நண்பர்களை பொது மக்களை சந்தித்து குறைந்த பச்சம் பத்து லக்ஷம் கோரிக்கை மனுக்களை பெற்று ஈழத்தில் நம் விருப்பத்தை அந்த நாடுகளுக்கு புரிய வைக்க வேண்டும் .
ஐநா மற்றும் நமக்கு எதிர்த்து வாக்களித்த மாற்ற நாடுகளின் அலுவலகங்களுக்கு நம் எவ்வறெல்லாம் இலங்கை அரசு மற்றும் இந்திய அரசால் எஅமாற்ற பட்டோம் என்பதை தொடர்ந்து விளக்கி மெயில் அனுப்ப வேண்டும்.

ஈழத்தில் மலையாளிகள் ஏன் தமிழர்களுக்கு எதிராய் உள்ளார்கள் ?
தமிழர்கள் சாவதில் அவர்களுக்கு என்ன விருப்பம்? தமிழ் நாட்டிலுள்ளi மலையாளிகளை சந்தித்து மலையாள உயர் அதிகாரிகளின் துரோக செயல்களை பற்றி பிட் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

மிக முக்கியமாய் கிராம புறங்களில் அடிப்படை ஈழ விஷத்தை விளக்க வேண்டும்.
ஈழ விசயத்தில் காங்கிரஸ் மற்றும் அவர்களோடு சேர்ந்த துரோகிகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டும்.

மிக முக்கியமாய் திறந்த வெளி சிறையில் இப்போது உள்ள மூன்று லக்ஷம் தமிழர்களை விடுவிக்கும் பொருட்டு உலகின் அனைத்து அமைப்பு களிற்கும் மெயில் கோரிக்கைகளை தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அடுத்து "முல்லிக்கைவயல் " நடந்த மனித படுகொலைகளை நாம் பதிவு செய்ய வேண்டும் .
கச்சதீவில் தமிழக மீனவர்கள் எவாரெல்லாம் இந்திய அரசு மற்றும் இலங்கை அரசால் துரோகம் செய்ய படுகிறார்கள் என்பதனை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மேலே உள்ள எல்லா பணிகளையும் செய்ய மாணவர்வகள் தேவை என்பதை அவர்களிடம் பேசுங்கள்.

மதிமுக மாணவர் தொழில் நுட்ப அணி
இணையம் மற்றும் கணணி சார்ந்த பணிகளை நாம் அதிகம் செய்ய வேண்டி உள்ளது அதற்காய் இந்த அணியின் அவசியம் உள்ளது. கணணி மட்டும் இல்லாமல் கட்டுமானத்துறை மின்சாரம் கட்டமைப்பு சாலை வசதிகள் நகர்புற கட்டுமானம் கிராமப்புற சாலைகள் மற்றும் பழங்கள் பற்றியும் ஆராய்ந்து கட்டுரைகள் மற்றும் விளக்கம் அளிக்க இந்த அணி மிக அவசியம் ஆகிறது. அந்தந்த துறைகளில் ஈடுபாடுள்ளவர்களை கொண்டு இந்த அணியை பலப்படுத்த வேண்டும்.
மதிமுக மாணவர் கல்வி வேலை வாய்ப்பு அணி
கல்லூரிகளில் சேர்க்கை பள்ளிகளின் தரம் மற்றும் நடைமுறை கல்வி கட்டணம் படித்த பின்பு வேலை வைப்பு போன்றவைகளின் ஆய்வுபநிகளை இந்த அணி செய்யும்.
மதிமுக மாணவர் நிழல் அரசாங்க அணி
மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தில் உள்ள அமைச்சகங்கள் போன்று அத்தனையும் இங்கு நிறுவப்பட்டு அந்தந்த அமைச்சக பணிகளுக்கான பரப்புரை மற்றும் நன்மை தீமைகளை இந்த அணி செய்யும்.
மதிமுக மாணவர் உலக வெப்பமடைதல் அணி
உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலான வெப்பமடைதலை பற்றிய பரப்புரை மற்றும் ஆய்வு பணிகளை இந்த அணி செய்யும்.
மதிமுக மாணவர் விவாசாய மற்றும் தொழில் அனி
விவசாயம் மற்றும் ஆராய்ச்சி பணிகள் பலதரப்பட்ட தொழில் பணிகளை இந்த அனி செய்யும்.
மதிமுக மாணவர் விளையாட்டு அணி
விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அனி செயல்படும். அதற்கான பணிகளை ஆராய்ந்து கருத்துகளை சமர்ப்பிக்கும்.
மதிமுக மாணவர் சாராயம் மற்றும் குடி எதிர்ப்பாளர் அணி
தமிழனை கொள்ளும் கொடிய நோயான குடி பழக்கத்தை எதிர்க்கும் அனி. அந்த களத்தில் இது இயங்கும்.


மதிமுக மாணவர் ஒழுக்க நெறி அணி
யோகா மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகளஇந்த அணியின் கீழ் வரும்.

மதிமுக மாணவர் எழுத்தாளர் அணி
தமிழ் எழுதர்களையும் ப்லோக்கேர்களையும் உருவாக்கும் அனி. தமிழகம் முழுதும பயணித்து எழுத்து ஆர்வம் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும்.

தோழர்களே முதற்கட்டமாய் நாம் மேற்கண்ட அணிகளை அமைய முழு முயற்சி எடுப்போம். நம்மால் முடியும். மாணவர்களை சந்திப்போம் .
ஒவ்வொருவரின் விருப்பு ஏற்ப அவர்கள் அதற்க்கான அணியில் சேர கேட்போம்.
மாணவர்களின் மாநாடு ஒன்றை நடுத்துவோம்.
நல்ல தமிழ் நாட்டை . மறுமலர்ச்சி கொண்ட தமிழ் நாட்டை உருவாகிட மாணவர்களை அழைப்போம். உளமார உண்மையாய் மேற்கண்ட பணிகளை செய்வோம் .

நன்றியுடன்
.
தோழர்

Saturday, June 27, 2009

சீரழியும் சட்ட ஒழுங்கு.

சீரழியும் சட்ட ஒழுங்கு.
தமிழகத்தில் சட்டம் நன்றாகத்தான் இருக்கிறது சமூகத்தில் ஒழுங்கு அறவே இல்லை.
அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை போகக்கூடிய அபாயகரமான் விளைவுகள் நடக்கின்றன.
ஒப்புக்கு பகத்து மாநிலத்தை விட சட்டம் ஒழுங்கு நன்றாய் உள்ளது என்று சொல்லுவது தமிழனை முட்டாளாக்கும் செயல் .
இங்குள்ள அரசாங்கம் அதன் வேலையை செய்ய வேண்டும் . பக்கத்து மாநிலத்தில் நடந்ததை அல்லது அதோடு ஒப்பீடு செய்து சமாதான வார்த்தைகளை சொல்லவா தமிழ்நாட்டில் அரசாங்கம் உள்ளது.?
செய்திகளை இங்கே படியுங்கள் :
செய்தி மூன்று :
கூலிப்படை, கட்டப்பஞ்சாயத்து அட்டகாசத்தை ஒழித்தக் கட்ட கருணாநிதி உத்தரவு
சென்னை: கூலிப்படையினர், கட்டப் பஞ்சாயத்துக் கும்பல்களின் அட்டகாசங்களை ஒழித்துக் கட்டுமாறு காவல்துறையினருக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
இதில் டிஜிபி ஜெயின் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி,, உள்துறை செயலாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே முதல்வர் பேசுகையில், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது. ஒரு சில இடங்களில் குற்றங்கள் நடக்கிறது.
அதன்மீது தீர விசாரணை நடத்தி உறுதியான நடவடிக்கை எடுங்கள்.கூலிப்படையினரின் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் மீது எந்தவித பாகுபாடுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுங்கள் என்றார்.Monday, June 22, 2009

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு :

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு :
"சேராத இடம் சேர்ந்ததால் "
மதிமுக ஆரம்பித்து முதல் இரண்டு தேர்தல்களை தனித்து சந்தித்துவிட்டோம் . எங்களை விரும்பியவர்கள் மற்றும் நாங்கள் தனியாக இருக்க விரும்பியவர்கள் , எங்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வில்லையே ! அதே போல் நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்களது தமிழ் தமிழர் சார்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்ததில்லை .
சிறுத்தை அவர்களுக்கு :
முத்துக்குமார் விஷயத்தை நான் தெளிவு படுத்தாமல் இருந்தேன் . இப்போது கொஞ்சம் விலாவாரியாக எழுதுகிறேன்.
முத்துக்குமார் இறந்த அன்று :-
சாஸ்திரி பவனில் அவர் தன்னை எரித்துக்கொண்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
பத்திரிக்கையாளர் உட்பட எவரையும் ஏன் அவரது உறவினரையும் கூட போலீஸ் முதுகுமரை பார்க்க அனுமதிக்கவில்லை.
தீக்குளித்தார் என்று தெரியும் யார் அவர் என்று தெரியாது . பத்திரிகையாளர் என்று தெரியும் எந்த பத்திரிக்கை என்ற விவரம் எல்லாம் அப்பொழுது தெரியாது .
போலீஸ் யாரையும் அனுமதிக்கவில்லை . பத்திரிக்கையாளர்களுக்கு அவர் எரிந்த பொழுது எடுத்த தீ யாய் எரியும் உடலை சக பத்திரிக்கையாளர்கள் சிலர் செல் போனிலிருந்து கொடுத்து கொண்டிருந்தனர்.
பல பேர் பல ஆதங்கத்தில் பெசிகொண்டிருந்தனர் . பெரியார் திக தோழர்கள் இருந்தனர்.
வைகோ முதலில் வந்தாரா அல்லது வெள்ளையன் முதலில் வந்தாரா என்று சரியாக தெரியவில்லை . ஆனால் வைகோ போலீஸ் இடம் வாதாடினார் . கட்டாயம் அவரை பார்க்கவேண்டும் என்றார். போலீஸ் அனுமதி இல்லை என்றது.
உங்களின் அனுமதியோடு உள்ளே செல்ல விரும்பிகிறேன் . உங்களின் தடையை மீறி உள்ளே செல்ல வைத்துவிடாதீர்கள் என்றார்.
பின் ஒருவாறு உங்களோடு இரண்டு பேர் மட்டும் உள்ளே செல்லுங்கள் என்று போலீஸ் அனுமதி கொடுத்தது. வைகோ உடன் இரண்டு பேர் உள்ளே சென்றார்கள் .
வைகோ உள்ளே சென்றிருந்த நேரத்தில் நெடுமாறனும் திருமாவும் வந்துவிட்டார்கள் .
வைகோ வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் . "முத்துக்குமார் " என்று அவரின் பெயரை சொன்னார் சொந்த ஊர் விவரத்தை சொன்னார் . முக்கியமாக முத்துகுமாரின் கடிதத்தை பத்திரிக்கையாளருக்கு கொடுத்தார் . (அப்பொழுது பதினாறு நகல்கள் எடுத்து கொடுக்கப்பட்டது, சாஸ்திரி பவனிலேயே அவர் கடிதங்களை விநியோகிதிருந்தார் அனால் அவை எதுவும் பத்திரிக்கையாளரின் கைகளுக்கு வரவில்லை பெரிது படுத்தப்படவில்லை ).
இப்பொழுது டாக்டர் ராமதாஸ் வந்து விட்டார் . உடன் அவரது புதல்வி யும் வந்தார்கள் .
நெடுமாறன் வைகோ ராமதாஸ் திருமா,காசி அனந்தன் மற்றும் வெள்ளையன் அதன் பின் சேர்ந்து எடுத்த முடிவுகள் தான் , அவரது உடலை பாரவைக்கு வைத்தது பின் நடந்தது எல்லாமும் .
முத்துக்குமார் விடயத்தை பெரிதாக்காமல் அமுக்கிவிட எவ்வளவோ பேர் முயற்சித்தார்கள் . அது மேற்கண்ட அரசியல் நடவடிக்கையினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது உண்மை .
மாணவர்கள் பல பேர் அதீத கோபத்தில் பல வார்த்தைகளை பேசினார்கள் . தலைவர்களை ஏசினார்கள் . ஆனால் மேற்கண்ட வைகோவின் நடவடிக்கை இல்லாமல் போயிருந்தால் முத்துகுமாரின் கதையையே வேறு மாதிரி திரிதிருப்பார்கள் .
அரசியல்வாதிகள் அப்பொழுது இல்லை என்றால் முத்துகுமாரின் கதை வேறு மாதிரி எழுதப்படிருக்கலாம் . ஏனென்றால் முத்துகுமாரின் உடல் இருக்கும் பக்கம் கூட யாருக்கும் அனுமதி இல்லை அப்பொழுது.
நான் மேற்சொன்ன அதனையும் சத்திய உண்மை . என்னோடு இருந்த ஈழ போராட்ட தோழர்கள் பலருக்கும் இது நன்றாய் தெரியும் .
இப்பொழுது அரசியல் லாபத்திற்காகவும் அல்லது அவர் அவர் மன விருப்பத்தின் படியும் எது வேண்டுமானாலும் பேசலாம் . ஆனால் உண்மை ஒன்றுதான்.
//
தமிழினம் சார்ந்த பிரச்சனைகளை அரசியலாக்கி வாக்கு சேகரிப்பது இந்த அரசியல் கும்பல்களின் குலத்தோழில் !
//
அரசியல் வாதிகள் எடுத்தால்தானே எந்த பிரச்சினையும் வெளியில் தெரிகிறது . அல்லது எந்த போராட்டத்தின் நோக்கமும் அரசாங்க பதவியில் உள்ள ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த அரசியல் வாதியை நோக்கித்தானே. பொத்தம் பொதுவாய் அரசியலை அரசியல் வாதிகளை விமர்சனம் செய்வது நல்ல நோக்கு அல்ல. அரசியல் மீதுள்ள நம்பிக்கையை கெடுக்கும் . விடை இல்ல வழிமுறைகளை சிந்திக்க தோன்றும் .
இந்த பதிவை எழுத இடம் கொடுத்த ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி .
-தோழர்


Wednesday, June 17, 2009

கருணாநிதியின் ஆணவ திமிர் பேச்சு .

நான் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால் தமிழ்நாட்டில் எவன் நம்புவான்? - கருணாநிதியின் ஆணவ திமிர் பேச்சு .
முதலில் செய்தியை படியுங்கள் :-
சென்னையில் நடந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.
அப்போது, ’’காங்கிரசுக்கு தமிழகத்திலே எவ்வளவு பெரிய வீழ்ச்சியை உருவாக்குவதற்கு இலங்கை பிரச்சினை எதிர்கட்சிகளுக்கு பயன்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.

அந்த பிரச்சினையை வைத்து தமிழர்களுடைய உணர்வு, உணர்ச்சி, போராட்டம்- தமிழர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற காரியங்கள்- இதற்கெல்லாம் காங்கிரஸ் அரசு துணை போகிறது என்கின்ற ஒரு கற்பனையையும், அந்த காங்கிரஸ் அரசோடு தி.மு.க. சேரலாமா என்ற கேள்வியையும் எழுப்பி நம்முடைய பலத்தை குறைக்க எண்ணினார்கள்.

காங்கிரசை பொறுத்தவரையில் அது மத்திய ஆட்சியிலே இருந்த காரணத்தால் அவர்கள் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு எதிராக அங்குள்ள ராணுவத்திற்கு உதவி செய்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட பொய்களை இங்கே உள்ள மக்கள் நம்புகின்ற அளவிற்கு சொன்னார்கள்.

அதை சிலர் நம்பவும் செய்தார்கள். நாம் உண்மையிலே இலங்கை தமிழர்களுக்காக எங்கிருக்கின்ற தமிழர்களாக இருந்தாலும் அவர்களுக்காக என்றென்றும் பாடுபடுகின்றவர்கள், பணியாற்றுகின்றவர்கள் என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருந்தார்கள்- கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- தமிழ்நாட்டில் எவன் நம்புவான்?

பேராசிரியர் இலங்கை தமிழர்களுக்கு விரோதி என்று சொன்னால்- அவருடைய பதவியை தூக்கி எறிந்ததை- இலங்கை தமிழர்களுக்காக நானும், அவரும் சட்டமன்ற பதவியை தூக்கி எறிந்ததை மறந்து விடுவார்களா? எனவே மக்களை அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. தொடர்ந்து அவர்கள் சொன்ன பொய்யை யாரும் நம்பத்தயாராக இல்லை.


நமது கேள்விகள் /விளக்கம் இங்கே :
 • பழங்கதைகளை பேசுவதில் மன்னர் நீங்கள் இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது என்பீர்கள் , ஆனால் உண்மை என்பது , ஒரு முறை ஊழலுக்கும் மறுமுறை உங்களின் இப்போதைய தோழமை கட்சியின் திமிர்த்தனத்தாலும் ஆட்சி கலைக்கப்பட்டது. இன்னும் எத்தனை காலம்தான் எஅமாற்றி பிளைக்கபோகிறீர்கள் .
 • நாற்பது எம் பி களும் ராஜினமா என்றீர்கள் . பின்னர் தேவையில்லை என்றீர்கள் .
 • ஊரோடு எல்லாரையும் மலையில் நிற்க சொன்னீர்கள் . பின்னர் பிரணாப் முகர்கி வந்ததும் " அனைத்தும் திருப்தி" என்றீர்கள்.
 • ஈழ பிரச்சினைக்காக போராடிய வக்கீல்களை காடுமிராண்டித்தனமாய் அடித்தீர்கள் . அந்த போராட்டத்தையே திசை மாற்றினீர்கள் .
 • மாணவர் போராட்டம் வலுப்பெற்றபொழுது , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றீர்கள் .
 • பாத்து முறைக்கும் மேல் எம் கே நாராயணன் உங்களை சந்தித்தான் அந்த கயவாளி உங்களிடம் என்ன பேசியிருப்பான் என்பதை இப்போது நன்றாக உணரமுடிகிறது .
 • இலங்கை தமிழருக்கு ஒரு அமைப்பு உருவாகிநீர்கள் அது செய்ததென்ன ?
 • கடைசியாக உண்ணாவிரதம் என்றீர்கள் குடும்பத்தோடு காலைசாப்பாடை மட்டும் "கட" பண்ணி விட்டு . போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று அப்பாவி தமிழனை ஏமாற்றினீர்கள் .
 • ராஜபக்சே அதுவெல்லாம் இல்லை என்றான் அதன் பின்புதான் கொடிய ஆயுதங்களை கொண்டு , புள் டோசர்களை மேலே ஏற்றி தமிழர்களை கொன்றான் . அதை நீ தூவானம் என்றாய் .
 • அதற்கும் முன் ஒரு பேரணி என்று வைத்து தமிழ் தேசிய தலைவனை "போர்ருஸ்" மன்னனைபோல் நடத்த வேண்டும் என்றாய் .
 • முல்லிவைக்காளில் நடந்த மனித படுகொலைகள் . இதுவரைக்கும் உலகம் பார்த்திராதது . அதை கண்டித்து இந்த நொடிபொழுது வரை ஒரு கண்டன வார்த்தையேனும் நீ பேசவில்லை .
 • ஏய் கருணாநிதி நாங்கள் நீதி தேவதை ஒன்று இருப்பதாய் நம்புகிறோம் . அது உனக்கும் உன் சந்திக்கும் சரியான தண்டனை யை கொடுக்கும் .


Tuesday, June 16, 2009

தலைவர் வைகோ வுக்கு நீதிமன்ற அழைப்பு

தலைவர் வைகோ வுக்கு நீதிமன்ற அழைப்பு .

இயக்குனர் பாரதிராஜ அவர்களின் அலுவலகத்தை தாக்கியது தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சம்பவத்தில் ,தன்மீதுகுற்றம் சுமத்தியதாக தலைவர் வைகோ அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் .அதற்கான வாக்குமூலத்தை "இடைத் தரப்பு " ஒருவர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் மூன்றாம் தியதி எழும்பூர் நீதிமன்றம் தலைவர் வைகோ அவர்களை நீதிமன்றம் வர பணித்துள்ளது.

பொதுமக்கள் குழப்பம் :

போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்வருக்கே இயக்குனரின் அலுவலகத்தை அடித்தவர்கள் யாரென்று தெரியாதென்றால் , பொதுமக்கள் மிகவும் குழம்பியும் அச்சத்தோடும் உள்ளார்கள் .

இயக்குனர் பாரதிராஜா அவர்கள் ஒருவேளை அவரே அவரது அலுவலகத்தை அடித்து நோருக்கிகொண்டாரோ ? தா. கிருட்டிணன் தன்னைத்தானே ஆள் வைத்து வெட்டிக்கொண்டு மதுரை வீதியில் செத்ததைப்போல !


Saturday, June 13, 2009

தோழர் ஜீவன் மற்றும் குடுகுடுப்பை அவர்களுக்கு

தோழர் ஜீவன் மற்றும் குடுகுடுப்பை அவர்களுக்கு :-

தோழருக்கு வணக்கம், இங்கே இந்த பதிவு மதிப்பிற்குரிய ''வைகோ'' அவர்களை குறைத்து மதிப்பிட்டதாக எனக்கு தோன்ற வில்லை. ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடாகதான் தோன்றுகிறது!
///
குடுகுடுப்பையின் தலைப்பு எஅற்றுக்கொள்ளக்கூடியதல்ல அதன் காரணமாகத்தான் நானும் அவரை திட்ட வேண்டி வந்தது.
திட்டியதற்காக வும் அப்படி எழுதும் சூழ்நிலையை குடுகுடுப்பை அவர்கள் உண்டாகியதர்காகவும் வருந்துகிறேன்.
///

ஒரு விஷயத்தை விளக்குங்கள் எங்கள் வைகோவின் வோட்டு வங்கி மெல்ல மெல்ல குறைந்து வருகிறதே அதற்க்கு என்ன காரணம் ?
//
வாக்கு வங்கி குறைந்தது என்பதில் மாறுபட்ட கருத்து வுள்ள்ளது. சென்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பெற்ற வாக்குக்கள் vetrஇ பெற்ற திமுக வின் வாக்குகளை விட பதின்மூன்று லச்சங்கலே வித்தியாசம் . பெற்ற வாக்குகள் அனைத்தும் அதிமுகவினுடையது என்று சொல்ல முடியாதே.

அது போக வாகு வங்கிகளை எப்படி கணிக்கிடுகிறோம் என்பதும் ஒன்று. இந்த தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளில் மட்டுமே நின்றது . அந்த தொகுதிகளில் வாங்கிய வாக்குகளை மட்டுமே நாம் நாற்பது தொகுதிகளுக்கும் சேர்ந்து வகுத்து பார்க்க இயலாது .
\\\\
இதோ இன்று தமிழின எதிரியாக குற்றம் சாட்டப்பட்ட காங்கிரசிடம் அடுத்த தமிழின தலைவராக எதிர் பார்க்கப்பட்ட, எதிர் பார்க்கப்படும் எங்கள் வைகோ தோற்று நிற்கிறார்! அவர் கூட இருந்து தோள் கொடுக்கும் தொண்டர்களுக்கு முறையான விளக்கம் கொடுங்கள்! அவர் கூட இருக்கும் சக தலைவர்களை நம்ப முடியவில்லை !!ஆனால்? அவர் தொண்டர்கள் நிரந்தரமானவர்கள்!

\\\ வைகோ உடைய தோல்விக்கு விருதுநகர் தொகுதி மக்களின் வறுமையும் அறியாமையுமே காரணம்.
தேர்தலுக்கு முந்திய நாள் குறைந்த பட்சம் இரு நூறு ரூபாவிலிருந்து அதிக பட்சம் ஐந்நூறு ரூபாய் காங்கிரஸ் இன் சார்பில் கொடுக்கப்பட்டது. இந்த காசுக்கெல்லாம் மயங்கி வாக்காளர்கள் விலை போக மாட்டார்கள் என்று நினைத்தோம் . ஆனால் தோல்வி அடைந்தோம் . அதையும் மீறி நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும் அதில் எங்கள் நிர்வாகிகள் முக்கியமாக கோட்டை விட்டது தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே வைகோ விற்கு விழவேண்டிய வாக்குகளில் கிட்டத்தட்ட ஒரு லாச்சம் வாக்காளர் பட்டியலில் இல்லை. அரசாங்க அதிகாரிகளின் துணையுடன் நடந்த மிகப்பெரும் அவலம் இது.
வைகோவின் வெற்றி இந்த காலகட்டத்தில் மிக முக்கியமாய் இருந்ததது. ஆனால் தமிழுணர்வு இல்லா துரோகிகளால் அது இப்போதைக்கு தள்ளிபபோயுல்லது.
\\\\\
-தோழர்
www.mdmkonline.com


Friday, June 12, 2009

குடு குடுப்பை பைத்திய நாய்

குடு குடுப்பை நீ குடவாசல் வந்ததனால் மட்டுமே வைகோ அவர்களை கோமாளி என்று திட்டுவதற்கு உரிமைகள் உள்ளது என்று நினைகிறாயா?

விமர்சனகளை நாகரிகமாய் பேசு . அல்லது இது போல் பதில்தான் வரும் அல்லது இதையும் மீறி கேவலமான் வார்த்தைகளால் உன்னை திட்ட வேண்டி வரும் .

ஈழ விசயத்தில் இப்போது பல்வேறு சமயோசித வேலைகள் நடந்து கொண்டுள்ளது. உன்னைவிட ஈழ விசயத்தில் வைகோ தெளிவானவர் விஷயம் அறிந்தவர் , தமிழர்களுக்கு எது உகந்தது என்று தெரிந்து பேசுபவர்.

அப்படியே எதிர் விமர்சனம் இருந்தாலும் நாகரிகமாக பேச பழகு.

பைத்திய நாய் போல் பொது இடத்தில் உளறாதே !. பேசுவதை அறிந்து பேசு.

-தோழர்
www.mdmkonline.com


Wednesday, June 10, 2009

இந்தியாவின் ஈழ தமிழர் பற்றிய பார்வைகள்

தோழர்களே,
கீழ்க்கண்ட செய்தியை பாருங்கள் , இந்திய அரசாங்கத்தின் அதிகாரி இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலோடுதான் இப்படி அறிக்கை கொடுப்பார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் .
 • ஈழத்தமிழர் விசயத்தில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் வேறு வேறு அல்ல.அதன் நடவடிக்கைகள் ஒன்றே.
 • இரு நாடுகளும் சேர்ந்துதான் இன அழிப்பு நடவடிக்கைகளை செய்தது.
 • ராஜீவ் காந்தி ஒருவர் இறந்ததுதான் ஒட்டு மொத்த தமிழர்களும் கொல்லப்படவேண்டியவர்கள் ஆனார்கள்.

இங்கே கவனிக்க பட வேண்டியது கருணாநிதியின் அல்லது தமிழர்களின் அரசாங்கமான தமிழக ஆட்சியின் பார்வை எப்படி என்பதைத்தான்.

-தோழர்.

செய்தி இங்கே :-

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையே முன்வைக்க வேண்டும். அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. எந்தவொரு தீர்வு தொடர்பிலும் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்கப் போவதில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.

நாங்கள் பழையனவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளை, எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும். இலங்கையும் இந்தியாவும் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்றும் அவர் சொன்னார்.

இலங்கையிலிருந்தும் புதுடில்லி வந்துள்ள தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சு கட்டடத்தில் சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கையும் இந்தியாவும் பிராந்திய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. அந்த வகையில், பயங்கரவாதம் இன்று ஒழிக்கப்பட்டுள்ளது. புலிகளால் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா பிரதமரையே இழந்தது. இலங்கை, இந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.


இலங்கை தனது இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டியது அதன் கடமை. நாம் தேவையெனில் ஆதரவளிப்போம். உதவிகளை வழங்குவோம். ஆனால், இது தான் தீர்வு, இதனை அமுல்படுத்துங்கள் என்று ஒருபோதும் வலியுறுத்த மாட்டோம்.

இலங்கை இறைமையுடைய நாடு. எம்மிடையேயான உறவு மிகவும் விசுவாசமும் உறுதியும் கொண்டது. சிலர் 13ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலம் இந்தியாவால் முன்வைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அது தவறான கருத்து, 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையால் முன்வைக்கப்பட்டதாகும். எனவே, அனை நடைமுறைப்படுத்துவது அவர்களைப் பொறுத்த விடயம்.

நாம் இதைத்தான் அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. ஏன் ஐ.நா.வோ, நோர்வேயோ, அமெரிக்காவோ கூட இது தான் தீர்வு என்று வலியுறுத்த முடியாது. இலங்கையும் இந்தியாவும் ஜனநாயக நாடுகள். பல்லின மக்கள் வாழும் நாடுகள், ஒரே வகையான கலாசாரத்தைக் கொண்ட நாடு. எனவே, இருநாடுகளும் இனி எவ்வாறு அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, இந்தியாவின் யுத்தத்தையே தான் முன்னெடுத்ததாக இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளாரே? என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சிவ்சங்கர் மேனன், பயங்கரவாதத்தால் இருநாடுகளும் பாதிக்கப்பட்டன. எங்கள் பிரதமரும் புலிகளால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன என்று பதிலளித்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டில்லியில் தங்கியுள்ளதாகவும், தற்பொழுது இலங்கை விவகாரம் குறித்தே அதிகம் பேசப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய தலைவர் பிரபாகரன்


தேசிய இனத் தலைவர் உயிரோடு உள்ளார் என்றே இந்த மணித்துளிவரை நமது பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சொல்லிவருகிறார்கள் , ஆனால் இந்த கட்டுரை "கருத்துக்களமாய் " புதினத்தில் வந்துள்ளது. அதை அப்படியே பிரசுரிக்கிறோம்.


முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!

அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம்.


சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது. கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம். எமது மனங்களில் என்ன இருந்தாலும் - நாம் நம்ப மறுத்தாலும் - அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது.


தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை பற்றிய தூய்மையான கனவைச் சுமந்து - 37 ஆண்டுகளாக அந்தக் கனவை நனவாக்குவதற்கு மட்டுமே போராடிய அந்த உன்னதமான மனிதர் - எமது இனத்தின் பெருந் தலைவர் - அந்தப் போராட்டக் களத்திலேயே வீழ்ந்து போனார். 'தமிழீழத் தனியரசு' ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்பினார். அதனை அமைப்பதற்குச் சிறந்த வழி என தான் நம்பிய ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியிலே தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரமாயிரம் போராளிகளுக்கு அவர் தலைமையேற்றார். அந்த வழியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்து - எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாமல் போராடினார். அந்த வழியிலேயே தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒவ்வொரு போராளியையும் அவர் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே அந்தப் போராளிகளை வழிநடத்திய தனது தளபதிகளையும் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே தானும் போராடி எமது கண்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து அவர் போய்விட்டார். தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தளகர்த்தருமான மேன்மை மிகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் - தமிழர் சரித்திரத்தின் மகுடமாக, எமது நெஞ்சத்தில் நிலைத்த நினைவாக, எம்மை வழிநடத்திச் செல்லும் ஆன்ம சக்தியாக - இனி எங்கள் மனங்களிலும், அறிவிலும் வாழ்வார். அந்தப் படங்களைப் பார்த்தேன்: தமிழ்த் தேசிய இனத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாறு அங்கே சரிந்து கிடந்தது. விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும். விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும். விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும். ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.


கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை. தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?... அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?... அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?... அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?... அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?.. அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?.. எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது. தப்பி ஓடி வேறு ஊர்களுக்குச் சென்று விடாமல் அந்த மண்ணிலேயே அவர் வாழ்ந்திருக்கின்றார். வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார். உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார். அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட 'தமிழீழம்' என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார். மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.


ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் அணிவித்து களத்திற்கு அனுப்பிய சயனைட் நச்சுக்குப்பியை தன் கழுத்திலும் அவர் அணிந்திருக்கின்றார். எத்தனையோ கரும்புலிகளின் உடல்களில் அணிந்து அனுப்பி வைத்த வெடிகுண்டு அங்கியை - துப்பாக்கி குண்டு பட்டு தற்செயலாக வெடித்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பொட்டம்மான் வற்புறுத்திக் கழற்றும் வரையிலும் - தன் உடலில் அவர் அணிந்திருந்திருக்கின்றார்.


எல்லாவற்றுக்கும் மேலாக - தானே துப்பாக்கியை ஏந்திப் போரிட்டு, இறுதியில் தன்னைத் தானே சுட்டு - களத்தில் அவர் மடிந்திருக்கின்றார். மில்லர் முதல், திலீபன் முதல் - தான் வழியனுப்பி வைத்த ஒவ்வொரு கரும்புலி வீரரிடமும் - "நீங்கள் முன்னாலே செல்லுங்கள் நான் பின்னாலே வருவேன்" என்று எவ்வளவு தெளிவுடன் சொன்னாரோ - அதே தெளிவுடனேயே அவர்கள் பின்னாலேயே அவரும் சென்றிருக்கின்றார். தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் படி அடுத்தவர்களிடம் கேட்காத மகோன்னதமான தலைமைத்துவப் பண்பின் இலக்கணமாக அவர் வாழ்ந்திருக்கின்றார்... வீழ்ந்திருக்கின்றார்.
முப்பது வருட காலமாகப் போராடி - சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்த்த தமிழ் சாம்ராச்சியம் - அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்த நொருங்கி மண்ணோடு மண்ணாகி விட்டது. ஆனால் - இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் - மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம்ராச்சியங்கள் எழுவதும் வீழ்வதுமே வரலாறு. பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது - ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம் தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது. 'தமிழீழம்' என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறிவிற்குள்ளும் அவர் ஆழப் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார். விடுதலை பெற்ற மனிதர்களாக - மதிப்புடனும் பெருமையுடனும் - இந்த உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியையும், வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார். தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் கோரிக்கையைப் பலப்படுத்தி - எங்கள் இனத்தின் சின்னமாக, எங்களது அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும் சோகத்தினதும் மகிழ்ச்சியினதும் வெளிப்பாடாக - தனது சாவுக்குப் பின்னாலும் நின்று நிலைத்து வாழும் வகையான ஒரு கொடியைத் தமிழுக்கு அவர் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.


இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் -
பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டியெழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிவிட்டுச் சென்றிருக்கும் உறுதியும் துணிவும் வீரமும் தான். பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் - வீரம், துணிவு, உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து, திரைப்படங்களில் பார்த்ததோடு சரி. ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர். சரியோ தவறோ - அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்; அந்த மனிதர் மட்டுமே - எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார். அந்த மனிதர் மட்டுமே - எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார். தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம்.


சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஒரு புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி எனத் தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.


அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள் தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது - அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான். அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களை தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது தான் அவர் வரித்துக்கொண்ட இலட்சியம். அந்த இலட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்.


அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, அந்த இலட்சியத்திற்காகவே வீழ்ந்தும் போனார் அந்தப் பெருமனிதன்.
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா
அவரது இழப்பைத் தாங்கும் மனத் திடம் எமக்கு இல்லாமலிருக்கலாம்; அல்லது, அவரது வீரச்சாவை ஏற்க முடியாமல் வேறு ஏதும் காரணங்கள் எம்மைத் தடுக்கலாம்; ஆனால், அத்தகைய எமது மனப் பலவீனங்களோ, அல்லது வேறு காரணங்களோ - 37 ஆண்டுகளாக எமக்காகவே போராடி வீழ்ந்த அந்த மாதலைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய இறுதி வணக்க மரியாதைகளைச் செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவையாக இருப்பது நியாயப்படுத்த முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது நாம் அவருக்கு இழைக்கும் துரோகமும் கூட. அவர் "இருக்கிறார்" என்றும் "இல்லை" என்றும் ஒரு மர்மத்தை நீடித்துச் சென்று, அவர் இருப்பதைப் போலவே ஒரு மாயையை வளர்த்துச் சென்று, திரும்பவும் எழுந்தருளி அவர் வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம். அவரது இல்லாமையை ஏற்றுக்கொண்டு, அவருக்குரிய இறுதி வணக்கங்களைச் செலுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றுக்கொண்டு, அவர் விட்டுச் சென்றிருக்கும் தலைமைத்துவ இடைவெளியைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்துகொண்டு - வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நாம் எல்லோருமாகச் சேர்ந்து நகர்த்துவதே தேவையானதும் நேர்மையானதுமாகும்... ஒரு வகையில் அதுவே நாம் அவருக்குக்கு வழங்கும் மரியாதையும் கூட. தேசத் தந்தை எஸ். ஜே.வி செல்வநாயகத்தி்ன் மறைவுடன் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 1' முடிவுக்கு வந்தது. தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீரச்சாவுடன் ஆயுதம் தாங்கி முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 2' முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் - தமிழர் போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த எமது ஆட்சியும், கடந்த அறுபது ஆண்டு காலமாக நாம் இழந்து வரும் எம் அடிப்படை அரசியல் உரிமைகளும் இன்னும் மீளவும் வென்று எடுக்கப்பட்டுவிடவில்லை. மிகக் கொடூரமான இன அழிப்புப் போருக்குள் சிக்கி - உருக்குலைந்து - முட்கம்பி வேலிகளுக்குள் முடங்கிச் சிறையிடப்பட்டிருக்கும் எமது மக்களின் கெளரவமான வாழ்வு இன்னும் மீளவும் பெற்று எடுக்கப்பட்டுவிடவில்லை.


முன்னாலே சென்றுவிட்ட அந்தத் தலைவன் வழியில் பின்னாலே செல்வதே இப்போது எம் முன்னால் உள்ள தலையாய கடமை. பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - 'தமிழர்கள்' என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம். அவர் காட்டிய உறுதியுடன்... அவர் காட்டிய விடா முயற்சியுடன்... அவர் காட்டிய ஒழுக்கத்துடன்... அவர் காட்டிய இன பக்தியுடன்... - 30 ஆயிரம் தமிழ் போர் வீரர்கள் அணிவகுத்த - அவர் ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் எங்கள் தேசத்தின் தேசியக் கொடியின் கீழ் நாமும் அணிதிரள்வோம். அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து புதிய வேகத்துடன், முன்னெடுப்போம்... 'தமிழீழப் போர் - 3' தி.வழுதிஇந்த கருத்துக்களம் 'புதினம்' இணையத்தளத்துக்காக

எழுதப்பட்டதாகும்t.r.vazhuthi@gmail.com. உங்கள் கருத்துக்களை அனுப்ப: