Wednesday, April 1, 2009

மதிமுக பதிவிக்காக அங்கும் இங்கும் தேர்தலுக்கு தேர்தல் ஓடுகிறது என்று ஒரு சிலர் சொல்கிறார்களே ?

மதிமுக தொண்டனுக்குள் இர்ருக்கும் கேள்வியும் அதற்க்கு அவனே சொன்ன பதிலும் :-

மதிமுக பதிவிக்காக அங்கும் இங்கும் தேர்தலுக்கு தேர்தல் ஓடுகிறது என்று ஒரு சிலர் சொல்கிறார்களே ?

மதிமுக கட்சி உள்கட்டமைப்பு ஜனநாயகத்தை முழுவது நம்புகிற கட்சி. அதன் தலைவர் வைகோ எப்பொழுதும் அவரின் முடிவை திணித்ததில்லை . இப்பொழுது கட்சியை விட்டு ஓடிப்போன கயவாளிகளின் முடிவால்தான் அதிமுகவிற்கும் மதிமுக வந்தது. சிறை கொட்டடியில் தாம் பட்ட துன்பங்களை எல்லாம் மறந்து கட்சி மற்றும் அதன் அமைப்பிற்காக வைகோ அதிமுகவில் சேர்வது என்ற முடிவையும் ஏற்றார். அதிமுகவில் இருந்தாலும் மதிமுக வின் அடிப்படை கொள்கைகளை எப்பொழுதும் விட்டுக்கொடுத்ததில்லை. ஈழத்திலும் சேது சமுத்திர திட்டத்திலும் மதிமுக வின் நோக்கு அதிமுகவை ஓத்ததில்லை. அதிமுகவோடோ அல்லது எந்த கட்சியின் கூட்டணியில் இருந்தாலும் மதிமுக அதன் அடிப்படை கொள்கைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை.

தேர்தல் கூட்டணி என்பது சில பல கயவாளிகளை எதிர்ப்பதற்கு நமக்குள்ள துணை அவ்வளவுதான். பதவிக்காகவோ அல்லது பணம் பட்டம் பெருவதர்ககவோ மதிமுக தேர்தல் கூட்டணி வைக்காது.

எல்லோரும் அடுத்த முதல்வர் என்று அவரவர் தலைவரை சொல்லுகிறார்கள், மதிமுக அதன் தலைவரை முதல்வராக முன்னிருத்ததற்கு காரணம் அது கூட்டணியில் இருப்பதால?

இப்பொழுது உள்ள தலைவர்களில் வைகோ வைபோல் தனிமனித ஒழுக்கத்திலும் தமிழ் இன பணியிலும் எவரும் அவர்களின் பங்கை செய்தது இல்லை.

அரசியல் என்பதே தொழில் ஆகிவிட்ட இன்றைய காலத்தில் சில முன்னெடுப்பு வேலைகளை மதிமுக செய்து வருகிறது. அரசியலில் பணம் சம்பாதிப்பதை அல்லது அரசியல் தொழில் செய்ய விரும்பாத ஓர் இளைஞர் படையை மதிமுக தயார் செய்து வருகிறது. அந்தப்படை போருக்கு தயாராய் இருக்கும் பொழுது வைகோ முதல்வராய் வருவார். இது காலத்தின் கட்டாயம் மதிமுகவின் நம்பிக்கை.

மதிமுகவிலிருந்து சில பதவி கொண்ட தலைவர்கள் வெளியேறியதால் மதிமுகவில் யாரும் இல்லை என்பது போன்ற தோற்றம் உள்ளதே.?

மதிமுகவின் உண்மையான தொண்டன் இப்பொழுதுதான் மிகவும் சந்தோசமாய் உள்ளான். பதவி ஒன்றை மட்டுமே நோக்கமாய் கொண்ட ஒரு கூட்டம் மதிமுகவில் இருந்து வெளியேறியதில் மதிமுக தூய்மை அடைந்துள்ளது.

மதிமுகவில் இருப்பவர்கள் அதன் தலைவர் வைகோவைபோல் போர்குணம் கொண்டவர்கள். நேர்மையானவர்கள் . வன்முறையை விரும்பாதவர்கள். எல்லாவற்றையும் விட சுயமரியாதைக்காரர்கள். நான்கு காசுக்காக மலத்தை தின்று வெளியேறியவர்களை மதிமுக சந்தோசத்தோடு அனுப்பி வைத்துள்ளது.



No comments:

Post a Comment